June 13, 2013 12:52 pm
சிரியா அதிபர் பஷீர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த இரண்டு ஆண்டுகளாக புரட்சிப் படையினர் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த உள்நாட்டுப் போரின் விளைவாக லட்சக்கணக்கான மக்கள் லெபனான், இஸ்ரேல் உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்
.
அரசு படைக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஷியா பிரிவு ஹெஸ்புல்லா இயக்கத்தினரும் இந்த போரில் பங்கேற்று வருகின்றனர். இதனால் புரட்சிப் படையினர் அவ்வப்போது ஹெஸ்புல்லா இயக்கத்தினரை தாக்கி வருகின்றனர். இந்நிலையில், கிழக்கு சிரியாவில் உள்ள ஹாட்லா அருகில் உள்ள புரட்சிப்படையின் நிலைகள் மீது அரசுக்கு ஆதரவான ஷியா போராளிகள் நேற்று தாக்குதல் நடத்தியதில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக புரட்சிப் படையினர், ஷியா முஸ்லிம்கள் வசிக்கும் ஹால்டா கிராமத்திற்குள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 60பேர் இறந்ததாக மனித உரிமைக் கழகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் மனித படுகொலை என்று சிரியா அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
thamilan thanks
No comments:
Post a Comment