திருப்புல்லாணி அருகே உள்ள தாதனேந்தல் காட்டுப் பகுதியில் திடீரென தீ பிடித்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் எரிந்து சாம்பலாயின.
தாதனேந்தல் பகுதி தென்னை, பனை மரங்கள் அடங்கிய காட்டுப் பகுதியாகும். இங்குள்ள பனை மரங்களில் புதன்கிழமை மாலை திடீரென தீப்பற்றி எரிந்தன. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் ராமநாதபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
நிலைய அலுவலர் சாமிராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் காற்றின் வேகம் அதிகமாகக் காணப்பட்டதால் தீ வேகமாகப் பரவியது.
இதைத் தொடர்ந்து ஏர்வாடி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் மரத்தின் உச்சியில் தீப்பிடித்து எரிந்ததால் தீ அடுத்தடுத்த மரங்களுக்குத் தாவியது. இதை சமாளிக்க சில மரங்களை தீயணைப்பு வீரர்கள் வெட்டினர்.
இதனால் தீ மேலும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
இது குறித்து நிலைய அலுவலர் சாமிராஜ் கூறியதாவது:
11 தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இத் தீ குடிசைகளுக்குப் பரவாமல் தடுப்பதற்காக இப்பகுதியிலேயே முகாமிட்டு கண்காணிக்கிறோம். தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பனை மரங்கள் எரிந்து சாம்பலாகியிருப்பது தெரிய வருகிறது. பீடி, சிகரெட் போன்றவைகளால் ஏற்பட்டதா? அல்லது சதி வேலையா? என்பது விசாரணையில் தெரிய வரும் என்றார்.
dinamani. thanks
No comments:
Post a Comment