அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 8 June 2013

வங்கதேச விபத்தில் உயிர் பிழைத்த அதிசய பெண்ணுக்கு ஹோட்டல் வேலை

[ சனிக்கிழமை, 08 யூன் 2013, 05:09.22 மு.ப GMT ]
உலகையே உலுக்கிய வங்கதேச கட்டிட விபத்தில் 17 நாட்களுக்கு பிறகு உயிர் பிழைத்த பெண்ணுக்கு நட்சத்திர ஹோட்டலில் வேலை கிடைத்துள்ளது.
வங்கதேசத்தில் கடந்த மாதம் 8 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் சுமார் 1129 பேர் பலியாயினர்.
இதில் அதிர்ஷ்டவசமாக பலரும் உயிர் பிழைத்தனர். அதிலும் குறிப்பாக 19 வயது பெண்ணான ரேஷ்மா பேகம் 17 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார்.
பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் இராணுவ மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள ரேஷ்மா, விபத்து குறித்து கூறுகையில், உயிர் பிழைப்பேன் என்று நினைக்கவில்லை. அந்த நிலையில் என்னை காப்பாற்றியதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி.
முன்பு நான் எங்கிருந்தேன், இப்பொழுது நான் எங்கு இருக்கிறேன், என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என்று மெய் சிலிர்க்க கூறினார்.
இந்நிலையில் தற்போது இவருக்கு ஹோட்டல் ஒன்றில் வேலை கிடைத்துள்ளது.
newsonews thanks

No comments:

Post a Comment