ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் விபத்துக்களில் இறப்பு விகிதம், கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது குறைந்தது போல் தெரிந்தாலும், விழிப்புணர்வு இன்னும் அதிகரிக்காததால், விபத்துக்கள் குறையாமல் இருக்கிறது என்பதுதான் உண்மை. ஆனால், மது போதையில் வாகனங்கள் ஓட்டி பிடிபட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்ட விபரம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு வாரம் நடத்தி, விபத்துக்களை குறைப்பதற்கான முயற்சியில் போலீசாரும், வட்டார போக்குவரத்து துறையினரும் முயற்சி எடுத்தாலும், அது பெயரளவில் மட்டும் தான், என்பதை அவ்வப்போது நிரூபித்து வருகின்றனர்.
சாலை பாதுகாப்பு விழாவில், டிரைவர்களை அழைத்து உறுதிமொழி எடுக்க வைப்பது, பள்ளிகளுக்கு சென்று சாலை விதிகளை பின்பற்ற கூறினாலும், இன்னும் பள்ளி மாணவர்கள், சரக்கு வாகனங்களில் ஆபத்து பயணம் மேற்கொள்வது தொடர்கிறது.
2012ல் விபத்தில் இறந்தோர் 273 பேர், காயமடைந்தோர் 587. இந்தாண்டில் கடந்த ஐந்து மாதங்களில் நடந்த, 320 வழக்குகளில், 103 பேர் பலியாகி உள்ளனர். 428 பேர் காயமடைந்துள்ளனர்.
சாலை பாதுகாப்பு வாரம் நடத்தியதின் பயன், விபத்துக்கள் ஒரளவு குறைந்து, இறப்பு விகிதமும் குறைந்திருக்க வேண்டும். ஆனால், எதிர்பார்த்தது நடக்கவில்லை.
இதேபோல் மது போதையில், வாகனம் ஓட்டுபவர்கள் எண்ணிக்கை குறைந்தது போல் தெரிகிறது. ஆனால் டாஸ்மாக் வாசல்களில் நிற்கும் டூவீலர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
கடந்தாண்டில் மே வரை 1,202 வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்தாண்டில் மே வரை 780 வழக்குகள் மட்டுமே போடப்பட்டுள்ளன.
வழக்குகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. போதையில் வாகனம் ஓட்டியவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டதா, அல்லது வழக்குப்பதிவு குறைந்துவிட்டதா என்பது புதிராக உள்ளது.
காரணம் டாஸ்மாக் விற்பனை, ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக உயர்ந்துள்ளதாக, அதிகாரிகள் கணக்கு காட்டுகின்றனர். ஆனால், போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது என, போலீஸ் கணக்கு காட்டுகிறது. எதுவாயினும் போதையில் வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க, போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், சாலை விதிகளை பொதுமக்கள் சரியாக, பின்பற்றினால் விபத்தை தவிர்க்கலாம்.
2013 ஜனவரி முதல் மே வரை விபத்து விபரம்
மாதம் வழக்கு இறப்பு காயம்
ஜன 67 18 59
பிப் 64 17 67
மார்ச் 53 24 61
ஏப்ரல் 64 19 76
மே 72 25 62
போதையில் வாகனம் ஓட்டியவர் மீது வழக்கு
மாதம் 2012 2013
ஜனவரி 188 215
பிப்ரவரி 267 142
மார்ச் 189 135
ஏப்ரல் 349 138
மே 209 150
dinamalar thanks

No comments:
Post a Comment