தென் ஆப்ரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியான நெல்சன் மண்டேலா கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நெல்சன் மண்டேலா உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 14 நாட்களாக பிரிட்டோரியாவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.
நுரையிரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஆனால் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் கூறிவந்தனர். எனவே அவர் விரைவில் குணமடைவார் என்று அவரது குடும்பத்தினர் நம்பிக்கையில் இருந்தனர்.
இந்நிலையில் மண்டேலாவின் உடல்நிலை தற்போது மிகவும் மோசமடைந்துள்ளது. அவரது கல்லீரல் மற்றும் கிட்னியின் இயக்கம் பாதியாக குறைந்துவிட்டதாகவும், சில நாட்களாக கண்களை திறக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் சிகிச்சையை நிறுத்துவது பற்றி அவரது குடும்பத்தினர் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது
No comments:
Post a Comment