By ராமநாதபுரம்
First Published : 25 June 2013
தங்கச்சி மடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் எம்.ஹெச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
இப்பள்ளி இந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி தேர்வில் 100 சதவிகித தேர்ச்சியும், பிளஸ் 2 தேர்வில் 90 சதவிகித தேர்ச்சியும் அடைந்துள்ளது. இப்பள்ளியில் போதுமான வகுப்பறைக் கட்டடங்கள், தளவாடப் பொருள்கள், கணினி ஆகியவை பற்றாக்குறையாக இருப்பதாக எம்.எல்.ஏ.விற்கு தகவல்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து அவர் பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். ஆசிரியர்களிடம் குறைகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். போதுமான வகுப்பறைக் கட்டடங்கள் கட்ட ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்.
ஆய்வின்போது ஊராட்சி மன்றத் தலைவர் ஞானசீலன், துணைத் தலைவர் பழனிமுனியாண்டி, த.மு.மு.க. மாவட்டத் தலைவர் சாதிக்பாட்சா, மாவட்டச் செயலர் அன்வர் அலி ஆகியோர் உடன் இருந்தனர்.
dinamani thanks
No comments:
Post a Comment