நாகர்கோவிலில் உள்ள ஒரு வீட்டில் திருட்டி சிடி தயாரிப்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து பொலிஸார் திடீர் சோதனை செய்தனர்.
சுற்றி வளைப்பின் போது 12 கணனிகள் மற்றும் சிடி தயாரிக்க உதவும் உபரகரணங்கள் ஆகியவற்றை கைப்பற்றினர்.
மேலும் சுமார் 7500 சிடிக்களையும் பறிமுதல் செய்தனர். அவைகளில் பெரும்பாலானவை ஆபாசபடங்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஆபாசபடங்களில் நடித்தவர் என பொலிஸ் விசாணையில் தெரிய வந்துள்ளது.
நிஷாந்த், முகமதுபாஷி, சகாயபிரிட்டோ, மணிகண்டன், கங்காசதாசிவம், ரியாஸ், லத்தீப் ஆகிய ஏழு பேரும் நாகர்கோவில் டவுண் டி.எஸ்.பி., உதயகுமாரால் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கைதான இளம்பெண்ணின் பெயரை தெரிவிக்க பொலிஸார் மறுத்து விட்டனர்.
இதுகுறித்து பொலிஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
newindianews thanks |
No comments:
Post a Comment