அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 7 June 2013

புதுச்சேரி மாநில முதல்வரை பேரா எம் எச் ஜவாஹிருல்லாஹ் MLA நேரில் சந்திப்பு : புதுவை சிறுபான்மை முஸ்லிம்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடிதம் அளித்தார்.


E-mail
PrintPDF
புதுச்சேரி மாநில முதல்வரை பேரா எம் எச் ஜவாஹிருல்லாஹ் MLA நேரில் சந்திப்பு : புதுவை சிறுபான்மை முஸ்லிம்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடிதம் அளித்தார். அக்கடிதத்தில் :


1. சென்டாக்(Centralised Admission Committee) மாணவர்களுக்கு கல்விக்கடன் அரசு வழங்கும் என்ற நம்பிக்கையில் கடந்த ஆண்டு ஏராளமானோர் தங்கள் பிள்ளைகளை கல்லூரிகளில் சேர்த்துள்ளனர். ஆனால் சென்டாக்கில் விண்ணப்பித்த ஏராளமான மாணவர்களுக்கு கல்வி ஆண்டு முடிந்தும் இதுவரை கல்விக் கடன் வழங்கப்படவில்லை என தெரியவருகிறது. இதனை நம்பி வெளியில் கடன் வாங்கிய பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இவ்விஷயத்தில் தனிகவனம் செலுத்தி சென்ற ஆண்டு கல்விக் கடன் மற்றும் இந்த ஆண்டு கல்விக் கடனை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
2. சென்டாக் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய நிதியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தெரியவருகிறது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள ஆணையிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
3. புதுவை இந்து அறநிலையத் துறையின் கீழ் இயங்கி வரும் புதுவை வக்ஃப் வாரியத்தை தனியாகப் பிரித்து வாரியத் தலைவரை நியமிக்க ஆவனச் செய்ய வேண்டும்.
4. சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு அரசு வழங்கியுள்ள 2 சதவீத இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும், அதனை ஏ,பி,சி,டி என அனைத்து பிரிவிற்கும் பொருந்தும் வகையில் மாற்றி அமைக்க ஆவனச் செய்ய வேண்டும்.
5. சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு மத்திய-மாநில அரசு ஒதுக்கும் நிதியை முழுமையாக சிறுபான்மையின முஸ்லிம்களுக்காக செலவு செய்ய ஆவனச் செய்ய வேண்டும்.
6. முஸ்லிம்கள் கணிசமாக வசிக்கும் கரைக்கால் பகுதி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. அங்கு தொழில் வளத்தை அதிகரித்து அப்பகுதி வளர்ச்சி அடைய உரிய நடவடிக்கை எடுக்க ஆவனச் செய்ய வேண்டும். சந்திப்பின் போது மமக அமைப்பு செயலாளர் மண்டலம் ஜைனுலாபீதீன். புதுவை நிர்வாகிகள் சம்சுதீன், ஃபஸ்லுல்லாஹ், காஜாகாமல், முபாரக் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment