அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 7 June 2013

குவைத்தில் அறிவிக்கப் படாத அவசர நிலை!


சவூதி நாட்டில் ஒருவிதமான (“நி(த்)தாகாத்” نطاقات Nithaaquath) சட்டம் கொண்டு வந்தததை போன்று குவைத்திலும் அறிவிப்பு இல்லாத அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப் பட்டு ஆள் குறைக்கும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது

“நி(த்)தாகாத்”சட்டத்தால் சவுதியில் இந்தியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்
பல லட்சம் பேர் இந்தியாவிற்கு திரும்பும் நிலை ஏற்ப்பட்டது அவர்களை காப்பாற்ற மதிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்த முடிவால் அங்குள்ள இந்தியர்களுக்கு ஓரளவு நிம்மதியை தந்தது

சவுதியில் சிறப்பாக செயல் படும் தமுமுக அங்குள்ள இந்தியர்களிடம் அது குறித்து நல்ல விழிப்புணர்வை ஏற்பபடுதினர் அது அங்குள்ள மக்களுக்கு நல்ல பலனை தந்தது
சவுதியை போன்று ஆனால் அறிவிக்கப் படாத மறைமுகமான அவசர சட்டம் கொண்டு வந்து அநியாயமாக மக்களை பிடித்து நாட்டிற்கு அனுப்பி வைக்கிறது குவைத் அரசாங்கம்

சவுதியை போன்று நாம் அறிவித்தால் பிற நாடுகளின் தலையீடு வரும் என்ற எண்ணத்தில் நம் நாட்டிற்கும் முட்டுக் கட்டை வந்து விடும் என்று, பகிரங்கப் படுத்தாமல் மக்களை பிடித்து நாட்டிற்கு அனுப்பி வருகிறது ..

முறையின்றி உள்ள மக்கள் மீது நடவடிக்கை எடுப்பது தவறு கிடையாது,அதே சமயத்தில் அரபிகளின் சூழ் சிகளினால் அப்பாவிகள் பாதிக்கப்படக் கூடாது

இதில் அநியாயம் என்னவென்றால் இந்த சட்டத்தின் மூலம் அதிகம் பாதிக்கப் படுவது இந்தியர்கள் தான் ,குறிப்பாக தமிழர்கள் ,ராஜஸ்தானிகள் ,ஆந்திரா ,போன்ற மாநிலத்தை சார்ந்தவர்கள் தான் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளனர் ஓரளவு தான் மலையாளிகளுக்கு பாதிப்பு

காதிம் விஸா ,சூன் விஸா என இரண்டு வகை விஸா உள்ளது(இன்னும் பல விசாக்கள் இருக்கிறது)இந்த இரண்டு விஸாவில் காதிம் விஸா உள்ளவர்கள் தான் மிகவும் பாதிக்கப் பட்டு வருகின்றனர் அடுத்த படியாக சூன் விஸா உள்ளவர்கள் பாதிக்கப் படுகின்றனர்

விபரம் ;
ஒருவர் காதிம் விசாவில் அரபிக்கு வீட்டு டிரைவராகவோ அல்லது பணிப் பெண்ணாகவோ ஏதுனும் ஒரு வேலைக்கு வந்து அந்த அரபின் அனுமதியுடன் தனாசில் (வெளி வேலை செய்ய அனுமதி)பெற்று அடுத்த அரபியிடம் பணம் கொடுத்து விஸா வாங்கி வெளியில் வேலை பார்க்கும் அனைத்து மக்களையும் இந்த விஸா உள்ள மக்கள் வெளியே வந்தாலும் பிடித்து குவைத் அரசு நாட்டிற்கு அனுப்பி வைக்கிறது

அதே போன்று நம் நாட்டு பணம் ஒன்னரை லட்சம் பணம் பெற்று நேரடியாக ஏஜென்ட் மூலம் காதிம் விஸா தந்து நீ என்னிடம் வேலை செய்ய வேண்டாம், யாரிடம் வேண்டுமானாலும் வேலை பார்த்துக் கொள , என்று அரபி கூறி விட விஸா எடுத்து வெளியே வேலை செய்யும் நம் மக்களை குவைத் போலீஸ் ஈவு இரக்கமும் இல்லாமல் பிடித்து ஊருக்கு அனுப்பி வைக்கிறது

இது குறித்து குவைத் போலீஸ் தான் பிடிக்கும் நபரிடம் அரபி குறித்து விபரம் கேட்டாலும் அந்த அரபி வந்து மீட்க வரா விட்டால் இந்த நபரை ஊருக்கு அனுப்பி விடுகின்ற கொடுமை இங்கு நிகழ்கிறது

சூன் விஸா ;

ஒரு கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர் அந்த கம்பெனியில் தனாசில் பெற்று மற்றொரு அரபியிடம் பணம் கொடுத்து அந்த அரபியிடம் வேலை செய்யாமல் தனியாக -சுயமாக வேலை செய்யும் மக்களையும் பிடித்து குவைத் போலீஸ் அனுப்புகிறது அந்த அரபியின் அனுமதியுடன் தான் வெளியே வேலை செய்கிறார்கள்

இவர்கள் எல்லாம் சாதாரண குடி மக்கள் தான் கடனுக்கு ,வட்டிக்கு பணம் வாங்கி வேலை செய்யும் இந்த மக்களை அநியாயமாக பிடித்து எந்த தவறும் இல்லாத இந்த மக்களை அனுப்பும் குவைத் அரசாங்கத்திடம் இந்திய தூதரகம் தனது கவலையை தெரிவித்ததாக தெரிய வில்லை

மாறாக குவைத் தில் இந்தியர்களுக்கு இந்த சட்டத்தின் மூலம் எந்த பாதிப்பும் இல்லை என்று பட்டவர்தமாக பொய்யான செய்தியை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்துள்ளார்

நம் மக்கள் மீது தவறு இருக்கும் பட்சத்தில் அவர்களை ஊருக்கு அனுப்புவதில் எந்த அளவும் கருணை காட்ட வேண்டாம் அதே பட்சத்தில் இந்த அவசர சட்டத்தால் மனைவிக்கு தெரிய வில்லை போலீசாரால் கணவன் ஊருக்கு அனுப்ப பட்ட தகவல் அதனால் செய்வதறியாது திகைத்து நிற்கும் மனைவி
மொழி தெரியாத தேசத்தில் பரிதவிக்கும் அவல நிலை ,.

பள்ளிகூடதிற்கு குழந்தையை அழைக்க செல்லும் தாய்மார்களை பிடித்து கணவனுக்கு தெரியாமல் ஊருக்கு அனுப்பும் சூழல் இதனால் தந்தையும் ,குழந்தையும் பரிதவிக்கும் பரிதாப நிலை


நாம் கேட்பது இதுதான் ;
ஓன்று நாட்டில் சட்ட ரீதியாக குடி இருக்கும் பிழைப்பு தேடி வந்துள்ள மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என கால அவகாசம் தந்து பொது மனிப்பு வழங்க வேண்டும்

மேலும் பணம் பெற்றுக் கொண்டு வெளியே வேலை பார்க்கலாம் எனக் கூறும் அரபிகள் அதாவது இது போன்று பிரச்சனை என்று வரும் போது டிரைவரையோ அல்லது ஏதேனும் பனி புரியும் அந்த நபரை மீட்க வராத அரபிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்

பல்லாயிரக் கணக்கான மக்கள் அனுப்ப பட்டு வரும் சூழ நிலை அறிந்தும் இன்று வரை எந்த முயற்சியும் எடுக்காத மத்திய -மாநில அரசுகள் குவைத் அரசாங்கத்திற்கு நிர்பந்தம் கொடுக்க வேண்டும்

அப்போது தான் குவைத் அரசு இங்குள்ள மக்களுக்கு ஓரளவு மதிப்பு கொடுக்கும் அரசுகளும் கண்டு கொள்ளாவிட்டால் இந்த மக்களின் கதி அதோ கதி தான்

ஏற்க்கனவே மக்களை பிடித்து ஆடு மாடுகளை போல் திறந்த டெம்போ வண்டிகளில் அள்ளி செல்லும் அவல நிலை தொடராமல் இருக்கவும் 50 பேர் இருக்கும் இடங்களில் 250 பேர்களை அடைத்து வைக்கும் கொடுமை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் சிறிதும் தாமதம் இல்லாமல்

அரசுக்கு வைக்கும் கோரிக்கை ;
சவூதி நாட்டில் இது போன்ற சட்டம் கொண்டு வந்த போது நம் மத்திய அரசு காட்டிய தீவிரம் குவைத்தில் மட்டும் ஏன் காட்ட வில்லை

குறைந்த பட்சம் ஆறு மாத கால அவகாசம் கொடுக்கப் பட்டு தத்தமது விசாக்களை புதுபித்துக் கொள்ள சவுதியை போன்று இங்கும் குவைத் அரசாங்கம் சட்டம் கொண்டு வர மத்திய அரசு நிர்பந்திக்க வேண்டும்

இந்திய அரசோடு குவைத் அரசாங்கம் நல்ல நட்புறவு நாடாக இருந்து வருகிறது இந்திய அரசாங்கம் கேட்டுக் கொண்டால் நிச்சயம் குவைத் அரசாங்கம் செவிமேடுக்கும்

சவூதி அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தியது போல் இங்கும் இந்திய அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்

குவைத்தில் அதிகம் பேர் தமிழர்களும் ,ராஜஸ்தான் ,போன்ற மக்கள் தான் காதிம் விசாவில் இருக்கிறார்கள்

தமிழக அரசும் இந்த விசயத்தில்

வெளியறவு துறை அமைச்சரை அழைத்துக் கொண்டு அத்துறை சார்ந்த தமிழக அமைச்சர்கள் குவைத் நாட்டிற்கு வருகை தந்து உண்மையில் இங்கு யார் பாதிக்கப் படுகிறார்கள் என்று தெரிந்து கொண்டு தக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும்

((((((சரியான முறையின்றி அநியாயமான முறையில் இந்த சூழ்நிலை தொடருமானால் அரபு நாடுகள் மீது (முஸ்லிம்கள் மீதும் இஸ்லாத்தின் மீதும் )தவறான புரிந்துணர்வு நிலை தான் ஏற்ப்படும் அரபு நாடுகள் இதை உணருமா சரியான முறைப்படி நடக்குமா))))))

No comments:

Post a Comment