கடந்த மே 3ஆம் தேதி அன்று தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே கேரளாவில் பலத்த மழை பெய்து வந்தது. அதோடு, அதனையொட்டியுள்ள தென்மேற்கு தொடர்ச்சி மலையின் தமிழக பகுதியான குற்றாலம் மலைக்குன்றுகளில் தொடர் சாரல் மழை பெய்தது. சுமார் ஒன்றரை மாத காலமாக தொடர்ந்து சாரல் மழை அடிப்பதால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, செண்பகாதேவி, தேன்அருவி உள்ளிட்ட மலையின் 8 பகுதிகளில் இருக்கும் அருவிகளில் தண்ணீர் கொட்ட தொடங்கியது.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. திடீர் திடீரென அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால், சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில்கொண்டு அவ்வப்போது, குளிப்பதற்கு தடையும் விதிக்கப்படுகிறது. கடந்த 3 நாட்களாக தொடர் சாரல் மழை பெய்ததால், வெள்ளப்பெருக்கு கடுமையாக ஏற்பட்டுள்ளது. இதனால் குளிப்பதற்கு தடை இரண்டு நாட்களாக தொடர்ந்து நீடிக்கிறது. இதுபோன்ற சீசன் சுமார் 10 வருடங்களுக்கு முன்புதான் இருந்தது. இப்பொழுது அந்த நிலையை பார்க்கிறோம் என்கிறார்கள் குற்றாலத்தில் சீசன் கடை போட்டிருக்கும் வியாபாரிகள்.
இந்த தொடர் வெள்ளப்பெருக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு ஒருவிதமான ஏமாற்றத்தை அளித்தாலும், வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலத்தையொட்டியுள்ள பாபநாகம், மணிமுத்தாறு, சேர்வலாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கிறது. அதோடு தென்காசி, கீழப்பாவூர், இளஞ்சி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அண்டை கிராமங்களின் நீர்நிலைகள், குளங்கள் நீர்நிரம்ப தொடங்கியுள்ளன. இதனால் விவசாயமின்றி வாடிக்கிடந்த விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது என்றே சொல்லலாம். நிரம்பிய குளங்களின் தண்ணீரைக்கொண்டு தற்போது கோடை விவசாயத்தில் தீவிரமாகிவிட்டார்கள் விவசாயிகள்.
கடந்த வருடம் நீரின்றி விவசாயம் பொய்த்துபோனது. இந்த வருடம் வருடபகவான் மனது வைத்ததன் பலன் எங்கள் பகுதியில் குளங்கள் நிரம்ப தொடங்கிவிட்டன என்கிறார்கள் தென்காசி ஒன்றியப் பகுதியில் உள்ள விவசாயிகள்.
கடந்த வருடம் நீரின்றி விவசாயம் பொய்த்துபோனது. இந்த வருடம் வருடபகவான் மனது வைத்ததன் பலன் எங்கள் பகுதியில் குளங்கள் நிரம்ப தொடங்கிவிட்டன என்கிறார்கள் தென்காசி ஒன்றியப் பகுதியில் உள்ள விவசாயிகள்.
செய்தி: பரமசிவன்
படங்கள்: ராம்குமார்
படங்கள்: ராம்குமார்
news nakkheeran. thanks
No comments:
Post a Comment