Thursday, July 4th, 2013
ஜகர்த்தா: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள அச்சே மாகாணத்தில் செவ்வாய்க் கிழமையன்று மிகச் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுமத்ரா தீவின் தலைநகர் மேடன் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பூமி அதிர்ந்தது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பயங்கரமாகக் குலுங்கின. இது சுமார் 15 வினாடிகள் நீடித்தது.
இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகள் மற்றும் கட்டிடங்களை விட்டு வெளியேறி சாலைகளில் ஓட்டம் பிடித்தனர். இந்த நிலநடுக்கம் காரணமாக சுமார் 350 வீடுகள் இடிந்து விழுந்தன. ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் மற்றும் வீடுகள் சேதம் அடைந்தன. இடிபாடுகளில் சிக்கி இதுவரை 22 பேர் பலியாகி உள்ளனர்.
210 பேர் காயம் அடைந்தனர். மேலும் ஏராளமானவர்கள் இடிபாடுகளில் சிக்கி கிடக்கின்றனர். இவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 10 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிலநடுக்கத்தில் அச்சே மாகாணத்தில் உள்ள பல கிராமங்களில் ஏராளமான வீடுகள் தரைமட்டமாயின. நிலச்சரிவில் 12 பேர் இறந்துள்ளனர். 70 பேர் காயமடைந்தனர்.
tamilmurasu thanks
No comments:
Post a Comment