ராஜஸ்தான் பில்வாராவை சேர்ந்தவர் பவன் பன்வார், வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மகள் ரிசாமா பன்வார்(வயது 7) அருகிலுள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கிறார்.
இந்நிலையில் கடந்த 16ம் திகதி வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற சிறுமி ரிசாமா, வகுப்பறையில் சக மாணவியருடன் பேசிக் கொண்டிருந்தார்.
இதை பார்த்த ஆசிரியர் கோபத்தில், ரிசாமாவை தர தரவென்று இழுத்து சென்றதுடன், கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதனை அறிந்த மாணவியின் தந்தை பவன் பன்வார் பொலிசில் புகார் அளித்தார்.
அதில், பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த என் மகளின் கன்னம் நீல நிறத்தில் இருந்தது. காது கடுமையாக வலிப்பதாக கூறினாள்.
அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது, அவள் காது கேட்கும் திறனை 70 சதவிகிதம் இழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வகுப்பாசிரியர் கன்னத்தில் அறைந்ததே இதற்கு காரணம். இதனால் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பள்ளியின் இயக்குனர் தல்பாத் சிங் ரத்தோர் கூறுகையில், மாணவியரை அடிக்கும் உரிமை ஆசிரியருக்கு இல்லை, இப்படிப்பட்ட கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளோம். மாணவியை ஆசிரியர் அடித்திருந்தால் அது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
newindianews THANKS |
No comments:
Post a Comment