| [திங்கள் - 22 ஜூலை-2013 - | |
இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவியதற்க்கு பதிலடி கொடுக்க தயார் என மத்திய அரசு கூறி உள்ளது.
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நெடுங்காலமாக எல்லைப்பிரச்சனை இருந்து வருகிறது. எல்லைப்பிரச்சனைக்கு தீர்வு காண இரு தரப்புகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. கடந்த மாதம் ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி சீனப்பயணம் மேற்கொண்டபோதுகூட, அந்த நாட்டு தலைவர்களுடனான பேச்சில் எல்லை பிரச்சினை இடம்பெற்றது. இதற்கிடையே சீன ராணுவம் கடந்த மாதம் 17-ந் தேதி இந்திய எல்லையில் ஊடுருவியது. தொடர்ந்து கடந்த 11-ம் தேதி சீன ஹெலிகாப்டர்கள் இந்திய வான்வெளியில் அத்துமீறி ஊடுருவின. இப்படி தொடர்ந்து இந்தியாவுக்கு சீனா தலைவலி தந்து வருகிறது. இந்த நிலையில், காஷ;மீர் மாநிலம் லேயில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பிசுமார்பீ என்ற இடத்தில் சீன ராணுவம் கடந்த 16-ம் தேதி மாலையில் இருந்து அத்துமீறி ஊடுருவத் தொடங்கியது. சீனாவின் அத்துமீறிய ஊடுருவலுக்கு பதிலடி கொடுக்கக்கூடிய அளவுக்கு இந்தியாவுக்கு வலிமை உள்ளது என மத்திய அரசு அறிவித்தது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் இந்திய சீன எல்லையில் நிறுத்துவதற்கு 50 ஆயிரம் கூடுதல் துருப்புக்களை உருவாக்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. | |
| காணொளி செய்திகள் tamilantelevision THANKS |
பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Monday, 22 July 2013
இந்திய எல்லைக்குள் சீன ராணுவம், ஊடுருவலுக்கு பதிலடி கொடுக்க தயார்! மத்திய அரசு அறிவிப்பு!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment