அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday, 21 July 2013

பாரிஸ் புறநகர்ப் பகுதிகளில் இரண்டாவது இரவும் தொடர் வன்முறைகள்!

.

Paris Violance Eu21072013
Playபிரான்ஸ் தலைநகர் பாரிஸின் புறநகர்ப் பகுதிகளில் இரண்டாவது இரவும் வன்முறைகள் நடந்துள்ளன. பிரான்ஸின் பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் முகத்திரை- புர்கா அங்கி அணிவதற்கு உள்ள தடையை எதிர்த்து நடந்துவரும் போராட்டங்களிலேயே இந்தக் கலவரங்கள் நடந்துள்ளன. கார்களும் பஸ் தரிப்பிடங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. போலிசார் கண்ணீர்ப்புகை மற்றும் தடியடிப் பிரயோகம்...

நடத்தி போராட்டக்காரர்களைக் கலைத்துவருகின்றனர். கடந்த வியாழக்கிழமை, முகத்தை முழுமையாக மூடி புர்கா அணிந்திருந்த பெண்ணொருவரை போலிசார் எச்சரித்தபோது, அந்தப் பெண்ணின் கணவனான இளைஞர் போலிசாரின் கழுத்தைப் பிடித்துள்ளார்.
முகத்திரையை அகற்றுமாறு தனது மனைவிக்கு உத்தரவிடப்பட்டதை அந்த இளைஞர் எதிர்த்துள்ளார். அந்த இளைஞரை போலிசார் கைதுசெய்ததை அடுத்தே போராட்டம் வெடித்துள்ளது. இனச் சிறுபான்மை மக்கள் செறிவாக வாழும் பாரிஸின் புறநகர்ப் பகுதிகளில் பெருமளவு கொந்தளிப்பு நிலை காணப்படுவதாக பிபிசி செய்தியாளர் தெரிவித்தார்.
News :Source

eutamilar thanks

No comments:

Post a Comment