அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday, 21 July 2013

லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் போராட்டம்: கேரளாவுக்கு லாரிகள் செல்வது நிறுத்தம்

  [ஞாயிறு - 21 ஜூலை-2013 - \
தமிழ்நாடு கர்நாடகா ஆந்திரா மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து சரக்குகளை ஏற்றிச்செல்லும் லாரிகள் வாளையாறு வழியாக கேரளாவுக்கு சென்றது. வாளையாறு சோதனைச் சாவடியில் நிறுத்தப்படும் லாரிகள் சோதனை முடிந்து கேரளாவுக்குள் செல்ல 30 மணி நேரத்துக்கும் அதிகமாக காலதாமதம் ஆகிறது என்பது லாரி உரிமையாளர்களின் புகார் ஆகும்.மேலும் லஞ்சம் கொடுக்கும் லாரிகளை மட்டும் அனுமதிக்கிறார்கள் என்பதும் வாளையாறு சோதனைச் சாவடி பகுதியில் லாரி டிரைவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்பதும் குற்றச்சாட்டு ஆகும்.
தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் கேரள அரசுக்கு வைத்த புகார்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் பல ஆண்டுகளாக இந்த நிலை நீடித்தது. கேரள அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இறுதியாக அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரசின் நிர்வாக குழு கூட்டத்தில் எடுத்த முடிவுபடி வாளையாறு வழியாக கேரளாவுக்கு லாரிகள் செல்வது நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டது.வழக்கமாக வாளையாறு சோதனைச் சாவடியில் 500-க்கும் மேலான எண்ணிக்கையில் லாரிகள் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு நிற்கும். போராட்டம் காரணமாக சில லாரிகள் மட்டும் அந்த வழியாக கேரளா செல்கின்றன. இதனால் தமிழ்நாடு உள்பட வெளிமாநில லாரிகள் செல்லாததால் வாளையாறு சோதனைச் சாவடி பகுதி வெறிசோடி காணப்படுகிறது.
வேலைநிறுத்தம் காரணமாக காய்கறி அரிசி பருப்பு வகைகள் கோழி முட்டை ஆடு-மாடுகள் மோட்டார் சாதனங்கள் எலக்ட்ரானிக் பொருட்கள் கேரளாவுக்கு செல்வது அடியோடு நிறுத்தப்பட்டது. இதனால் தினமும் ரூ.500 கோடி மதிப்புள்ள பொருட்கள் கேரளாவுக்கு செல்வது நின்றுள்ளது. போராட்டம் தொடருமானால் கேரளாவுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்று தெரிகிறது.  


காணொளி செய்திகள்

news tamilantelevision thanks

No comments:

Post a Comment