அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday, 21 July 2013

பர்தா அணிந்த பெண்ணுக்கு அபராதம்: பிரான்சில் கலவரம்

பர்தா அணிந்த பெண்ணுக்கு அபராதம்: பிரான்சில் கலவரம்

பர்தா அணிந்த பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டதால் பிரான்சில் கலவரம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பொலிஸ் துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது.



பிரான்சில் பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தலைநகர் பாரீசின் புறநகரில் உள்ள டிராபிஸ் பகுதியில் பர்தா அணிந்து சென்ற பெண்ணுக்கு பொலிசார் அபராதம் விதித்தனர்.அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பெண்ணின் கணவர் பொலிஸ் அதிகாரியுடன் தகராறு செய்தார். எனவேஅவர் கைது செய்யப்பட்டார்.

இதை அறிந்ததும் சுமார் 250 முஸ்லிம்கள் டிராபிஸ் நகர் பொலிஸ் நிலையத்தின் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே பொலிசார் அங்கு திரண்டனர்.அதை தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும்பொலிசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் கலவரமாக மறியது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிசார் மீது கல்வீசி தாக்கினார்கள்.

ரோட்டில் வைத்திருந்த குப்பை தொட்டிகள் மற்றும் பஸ் நிறுத்தங்களில் உள்ள பயணிகள் நிழற்குடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. எனவே நிலைமை மோசமடைந்ததை தொடர்ந்து பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
அப்படியும் நிலைமை கட்டுக்குள் வராததால் பொலிசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதில், 14 வயது சிறுவன் மீது குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தான். போராட்டக்காரர் கள் தாக்கியதில் பொலிஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர்.

இதையடுத்து பேரை பொலிசார் கைது செய்தனர். அவர்களிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அங்கு அமைதி ஏற்பட்டு சகஜ நிலை நிலவுகிறது
.
news thamilan thanks

No comments:

Post a Comment