அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday, 26 April 2023

பள்ளிக் காலங்களில் ஒரு பெண் டீச்சரைப் பார்த்து ’ பால்பண்ணை’ என்று சகமாணவர்கள் கூப்பிடுவார்கள். அவருடைய மார்பு பெரிதாக இருப்பதுதான் அதற்குக் காரணம். பெரிய மார்பில் நிறைய பாலிருக்கும். ’நிறைய பால்’ பண்ணையில்தான் இருக்கும். அத்தகைய பெரிய மார்பகங்களை கொண்டுள்ளதால் அவரைப் ’பால்பண்ணை’ என்று அழைப்பார்கள். அப்பெயரை நான் உச்சரிக்கவில்லையே தவிர பையன்கள் அப்படிச் சொல்லும் போது கலகலவெனச் சிரித்திருக்கிறேன்.அதற்கும் முன் சிறுவயதில் ’சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படத்தில் லட்சுமி நடித்திருக்கும் கேரக்டருக்கு பால்கட்டி கொண்டது என்று துன்பப்படுவதாக ஒரு காட்சி வரும். ஒரு விநாடி இப்படின்னா என்ன? என்று தோன்றி பின் மறந்த காட்சி அது.பொதுவாக பெண்ணின் மார்பு என்பது ஆணுக்கு உச்சமான இன்பத்தைக் கொடுக்கும் விசயம். பார்க்கும் பெண்களின் மார்புகளில் தன் விழிகளை பதிக்காமல் பாதையை கடப்பாது கடினம்,ஆனால் அதன் பின்னால் பெண்கள் அடையும் துன்பத்தைப் பற்றி எந்த அளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மாதவிலக்கு, மென்ஸஸ் போன்ற விஷ்யங்கள் பற்றி கூட கொஞ்சம் விழிப்புணர்ச்சி வந்தாற்போல இருக்கிறது. ஆனால் இந்த மார்பினால் வரும் துன்பத்தைப் பற்றி மிகக் குறைந்த விழிப்பே இருக்கிறது. சமீபத்தில் அமரந்தா எழுதிய ’பால்கட்டு’ என்றொரு கதையைப் படித்த பிறகுதான் எனக்கு இதன் வலி புரிந்தது. கதை👇நடுத்தர குடும்ப பெண்ணுக்கு, வேலைக்கு போயே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் பெண்ணுக்கு ‘பால்கட்டுதல்’ என்றப் பிரச்சனை இருக்கிறது. மார்பகங்களில் பால் அதிகமாகக் கட்டிக்கொண்டு வலியைக் கொடுப்பதுதான் இதன் அம்சம். மிக அதிகமாக கட்டிக்கொள்ள டாக்டரிடம் போகிறாள், நர்ஸ் பம்ப் வைத்து பாலை எடுக்க முயற்சி செய்கிறார், வலியால் துடிக்கிறாள்,இவள் வலியால் துடிப்பதைப் பார்த்த நர்ஸ் ‘யார்கிட்டயும் சொல்லாதம்மா” என்று தன் வாயால் மார்பில் வாயைவைத்து பாலை உறிஞ்சி துப்புகிறார். பின் பெண்ணின் மார்பை ஆராய்ந்து, அதில் புண் இருப்பதாகவும், அதனால் பால் சரிவர வெளிவராமல் கட்டிக் கொள்வதாகவும் சொல்லி, அதற்கு ஒரு க்ரீம் கொடுக்கிறார். அந்த க்ரீமைத் தடவ வேண்டும். பின் குழந்தைக்குப் பால் கொடுக்கும் முன் அதை சுத்தம் செய்ய வேண்டும். பின் மறுபடியும் தடவ வேண்டும் என்று நரக வாழ்க்கையை வாழ வேண்டியதாயிருக்கிறது. காலை அலுவலகத்துக்கு வந்துவிட்டு மதியம் குழந்தைக்கு பால் கொடுக்கச் செல்வதற்குள் அது மார்பில் கட்டிக் கொண்டு கெட்டுப் போய் விடுகின்றது. இவளுக்கு குழந்தை பால் குடித்தால் பாரம் குறையும் என்றிருக்கும் போது, குழந்தையோ கெட்டுப் போன பாலைக் குடிக்காமல் அழுகிறது. மறுநாளில் இருந்து அலுவலகத்தின் பாத்ரூம் சென்று அவ்வப்போது மார்பை பிதுக்கி அவ்வப்போது பாலை எடுக்கிறாள்.இப்படியாக பால்கட்டுதலால் அவள் படும் கஷ்டத்தை ஆசிரியர் கதை நெடுகச் சொல்கிறார். ஒருநாள் மாலை வீடு செல்லும் போது கதவு திறந்திருக்கிறது. வழக்கமாக இரவு லேட்டாக வரும் கணவன் அன்று சிக்கிரமே வந்திருக்கிறான். அதைப் பார்த்து மகிழ்ச்சி.அவனிடம் காப்பிக் குடிக்க வேண்டும் என்று கேட்க நினைக்கிறாள். ஆனால் மார்பு பாரம் தாங்க முடியாமல் குழந்தையை எடுத்து வராண்டாவிலேயே பால் கொடுக்கிறாள். குழந்தைக் குடிக்க ஆசுவாசப்படுகிறாள். ஆனால் கணவனோ உள்ளே போ உள்ளேப் போ போ என்று விரட்டுகிறான். இவள் வேறு வழியில்லாமல் உள்ளே வருகிறாள்.“வாசல்ல இருந்துதான் இதெல்லாம் செய்வியோ’ என்று கணவன் அவள் முகத்துக்கு நேரே கையை நீட்டி கடுத்து வருகிறான்.அவள் தலை கிறுகிறுத்துப் போகிறது.இப்படியாகக் கதை முடிகிறது.இதைப் படித்த பிறகுதான் பால்கட்டுதல் என்பதில் இவ்வளவு பிரச்சனையா என்று எனக்குத் தெரிந்தது. அம்மாவுக்கு போன் போட்டுக் கேட்டேன். அம்மா இந்தக் கதையை ஆமோதித்து, பால் கட்டுதல் என்பது சில பெண்களுக்கு கொடுமையான விசயம் என்று விளக்கினார்.நான் அம்மாவிடம் கேட்டேன் “ஏம்மா இத்தன வருஷம் உங்க கிட்ட ஃப்ரெண்டா பேசியிருக்கேன். இந்த விஷயத்த எனக்கு சொல்லவே இல்லை” என்றேன்.யாருமே எங்கேயுமே இதுமாதிரியெல்லாம் பிரச்சனை இருக்கிறது என்று சொல்லாமல் இருந்தால் ஆணுக்கு எப்படித் தெரியும். அப்படி ஆணுக்குப் பெண்ணின் வலிதெரிவது இப்போதைய வன்புணர்வு கலாச்சாரத்தில் முக்கிய தேவையாகும். என்னைக் கேட்டால் பிளஸ் டூ தமிழ் சிறுகதைகளில் ஒன்றாக அமரந்தாவில் “பால் கட்டு” சிறுகதையை வைக்க வேண்டும் என்பேன். ஒருவேளை இக்கதையைப் படித்தால் “பால் பண்ணை, இளநீ, காய், முலை, முயல் குட்டி” என்றெல்லாம் மார்பகங்களை பேசுவதை கொஞ்சம் ஆண்களாவது தவிர்ப்பார்கள். அந்த கொஞ்ச ஆண்கள் பிற்காலத்தில் நிறைய ஆண்களாக ஆகலாம். பண்பட்ட சமூகத்தை அடைவதுதான் நம் நோக்கம் என்றால் இது போன்ற சிறுகதைகள் நிறைய வரவேண்டும். விவாதிக்கப்பட வேண்டும்.பகிர்வு பதிவு

Monday, 17 April 2023

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் தேராவில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 2 தமிழர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். மின் கசிவு காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில் 4 இந்தியர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த தமிழர்களான முகமது ரஃபீக் மற்றும் இமாம் காசிம் அப்துல் காதர் ஆகியோர் தீ விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற முனைந்தபோதே உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு உயர்ந்த நற்கூலியை வழங்குவானாக. அவர்களின் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமை தந்தருள்வானாக.தமிழக அரசு உயிரிழந்தவர்களின் உடல்களை தாயகம் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு நிதி அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையை வரவேற்பதோடு, அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.-நெல்லை முபாரக்

Sunday, 16 April 2023

நாம் சுவாசிக்கும் உயிர் காற்றே நமக்கு சொந்தமில்லை எனும் போது...மற்றவைகளை மட்டும் நாம் சொந்தமென உரிமை கொள்வது நியாயமில்லை...வெறுங்கையோடு வந்தோம் வெறுங்கையோடு தான் செல்வோம் எதையும் கையோடு கொண்டு செல்ல போவதுமில்லை அதை மனதில் நினைத்து வாழ முயலுங்கள்...!✍️

கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் மறுமணம் செய்யாமல் இத்தாவைக் கடைப் பிடிக்க வேண்டும் என்பது இன்று அறிவியல் மூலமாகவும் நிரூபிக்கப்பட்ட உண்மை ராபர்ட் கில்ஹாம் என்ற யூத விஞ்ஞானி இது குறித்து ஓர் ஆய்வை மேற்கொண்டார்.தம்பதியர் உட லுறவு கொண்டால், ஆண், தனது பாலின ரேகையைப் பெண்ணிடம் விட்டுச் செல்கின்றான். அந்த ரேகை மூன்று மாதங்களுக்குப் பிறகே முற்றாக அழியும் என்று ராபர்ட் கண்டு பிடித்தார். அதற்கேற்ப, அமெரிக்காவில் ஆப்பிரிக்க முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதியில் கள ஆய்வில் இறங்கினார். அப்பகுதியில் வாழும் முஸ்லிம் பெண்களிடம் அவர்களின் கணவர்களது ரேகைகள் மட்டுமே பதிவாகியிருந்தன.அதே நேரத்தில், அமெரிக்கப் பெண்கள் வாழும் ஒரு தெருவில் ஆய்வை மேற் கொண்ட போது, அப்பெண்களிடம் பல்வேறு ரேகைகள் காணப்பட்டன. மூன்று வெவ்வேறு ரேகைகள் அவர்களில் பதிவாகியிருந்தன.ராபர்ட் கில்ஹாம் அதிரடி யாக ஒரு காரியம் செய்தார். அவர் தம் மனைவியை மருத்துவப் பரிசோதனைக்கு ஈடுபடுத்தினார்.அவளிடம் மூன்று ரேகைப் பதிவுகள் இருப் பதைக் கண்டு அதிர்ச்சி யடைந்தார். அத்துடன் தம்முடைய மூன்று மகன் களில் ஒருவன் மட்டுமே தமக்குப் பிறந்தவன் என்பதையும் கண்டறிந்தார்.கணவன் இறந்த ஓரிரு மாதங்களில் ஒரு பெண் திருமணம் செய்தால் இரண்டாம் கணவன் மூலம் பெற்றெடுக்கும் அவளது குழந்தை இரண்டாம் கணவனின் டி.என்.ஏ வுடன் ஒத்துப் போகாமல் இருக்க சாத்திய முண்டு. முதல் கணவனின் டி.என்.ஏ, யுடன் ஒத்துப் போகும் வாய்ப்பும் உள்ளது.இந்தக் கண்டு பிடிப்பும் இத்தா வின் அவசியத்தை உணர்த்துகிறது.நான்கு மாதங்களும், பத்து நாட்களும் கழித்து அவள் மறுமணம் செய்து கொண்டால், டி.என்.ஏ. பரிசோதனை யில் குழப்பம் இராது.திருக் குர்ஆன் அல்லாஹ் வின் வார்த்தை என்று அறிந்து ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தை ஏற்றதற்கு இத்தா எனும் சட்டம் காரணமாக அமைந்தது.இத்தா எந்த அளவுக்கு முக்கியத் துவம் வாய்ந்த விதி முறை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.சிலர் முஸ்லிம்கள் நான்கு மாதம், பத்து நாட்கள் கணவனை இழந்த பெண்களை இத்தா என்ற பெயரில் இருட்டறையில் அடைத்துக் கொடுமைப் படுத்துகின்றனர் என தவறாக எண்ணியுள்ளனர்.மறுமணம் செய்யாமல் இருப்பதும், திருமணத்தைத் தூண்டும் அலங்காரங்களைத் தவிர்ப்பதும் முதல் கணவனின் நினைவுகளில் இருந்து மீளவுமே தான் இத்தா என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். ~~நண்பரின் பதிவில் சில கூடுதல் தகவல்களுடன்.

Wednesday, 12 April 2023

வாழ்க்கையின் உண்மை♥️ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள்.ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான்.அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான்.பிறரோடு ஓடி விடுவாளோ என்று பயந்தான்.அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான்.ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து கொண்டாள்.ஒருநாள்...அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான்.எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான். தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான்.அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள். அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான்.அவளோ நீயோ சாகப்போகிறாய்.நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள். பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான்.அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது. அப்போது தான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. ‘’நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன்.உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் ‘’ என்று சொன்னாள். ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான். நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த வருத்தத்திலேயே மரித்தும் போயினான்.உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.1. நான்காவது மனைவி நமது உடம்பு.நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை.நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான்.நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள்.அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள்.அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா.நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.!நன்றி: படைப்பு- Padaippu-@Smart Amma*"*"*"*"*"*மனிதராக நம்மை படைத்து பரிபாலிக்கும் இறைவனால் நமக்கெல்லாம் அவகாசம் அளிக்கப்பட்டிருக்கும் இறுதி நேரம் இந்த நொடியாகக்கூட இருக்கலாம்! இதைக்கூட நாம் சிந்திக்காமலேயேதான்... இன்று நாம் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஒவ்வொரு நொடியையும் அலட்சியமாகவே சுவாசிக்கிறோம்!இனியாவது கவனமாக சந்திப்போமே!Mohammed Ghouse

Tuesday, 11 April 2023

வாழ்க்கையிலும் உலகத்தை விட்டு போறதுக்கு முன்ன இந்த மாதிரி உருப்படியா ஏதாவது செஞ்சுட்டு போகணும்.







புற்று நோயால் மரணமடைந்த மல்டி மில்லியனர் அலி பானத்.. எல்லாருக்கும் நியாபகம் இருக்கும்னு நினைக்கிறேன்! அவர் உயிரோட இருந்தப்ப போட்ட விதை தான் இந்த MATW ப்ராஜெக்ட்... மனுஷன் மரணத்திற்கு பிறகும் நன்மையை சேர்த்துகிட்டு இருக்கிறார்!❤️ என் வாழ்க்கையிலும் உலகத்தை விட்டு போறதுக்கு முன்ன இந்த மாதிரி உருப்படியா ஏதாவது செஞ்சுட்டு போகணும்..இன்ஷா அல்லாஹ்! 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு நவின்றுள்ளார்கள். ''ஒரு மனிதன் மரணித்து விட்டால் அவனுடைய அனைத்துச் செயல்களும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் மூன்று விஷயங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும். அவை:
*நிலையான தான தர்மம் (ஸதகத்துல் ஜாரியா)

*பயனளிக்கக் கூடிய அறிவு

*தனக்காகப் பிரார்த்திக்கக் கூடிய சிறந்த பிள்ளை'' (ஆதாரம் : முஸ்லிம்)

#alibanat







Monday, 10 April 2023

ஊர் பெயர்களின் பூர்வீகம் பற்றிய சிறப்பான தொகுப்பு:தமிழில் உள்ள ஊர் பெயர்கள்..!!எடப்பாடி அல்ல;இடையர்பாடி மதுரை அல்ல;மருதத்துறை.மானாமதுரை அல்ல;வானவன் மருதத்துறைகாளையார் கோவில் அல்ல;கானப்பேரெயில்சிவகங்கை அல்ல;செவ்வேங்கைதிருவாரூர் அல்ல;ஆரூர்பொள்ளாச்சி அல்ல;பொழில் ஆட்சிசிதம்பரம் அல்ல;திண்டிவனம் போல்அது தில்லைவனம்கான்சாபுரம் அல்ல;கான்சாகிபு புரம்(மருதநாயகம் நினைவாக வைத்த பெயர்)திருவாடானை அல்ல.திரு ஆடானைவத்ராயிருப்பு அல்ல;வற்றாத ஆறு இருப்பு.தனுஸ்கோடி அல்ல;வில்முனைஇராமேஸ்வரம் அல்ல;சேதுக்கரைஇராமநாதபுரம் அல்ல;முகவைகாஞ்சிபுரம் அல்ல;கஞ்சிவரம்செங்கல்பட்டு அல்ல;செங்கழுநீர்பட்டுசேர்மாதேவி அல்ல;சேரன்மகாதேவிவிருத்தாசலம் அல்ல;முதுகுன்றம்வேளாங்கண்ணி அல்ல;வேலற்கன்னிசைதாப்பேட்டை அல்ல;சையது பேட்டைதேனாம்பேட்டை அல்ல;தெய்வநாயகம் பேட்டைகொசப்பேட்டை அல்ல;குயவர்பேட்டைகுரோம் என்ற லெதர் கம்பெனியை காயிதே மில்லத் உருவாக்கியதால் குரோம்பேட்டைஆனால் அது தோல் பேட்டை தான்.புரசைவாக்கம் அல்ல;புரசைப்பாக்கம்பெரம்பூர் அல்ல;பிரம்பூர்சேத்துப்பட்டு அல்ல;சேற்றுப்பேடுஅரும்பாக்கம் அல்ல;அருகன்பாக்கம்சிந்தாதரிப்பேட்டை அல்ல;சின்னத்தறிப்பேட்டைஉடுமலைபேட்டை அல்ல;ஊடுமலைப்பேட்டைபல்லாவரம் அல்ல;பல்லவபுரம்தாராசுரம் அல்ல;ராராசுரம்ஈரோடு அல்ல;ஈரோடைஒகனேக்கல் அல்ல;புகைக்கல்தர்மபுரி அல்ல;தகடூர்பழனி அல்ல;பொதினிகும்பகோணம் அல்ல;குடந்தைதரங்கம்பாடி அல்ல;அலைகள்பாடிகாவிரிபூம்பட்டினம் அல்ல;காவிரிபுகும்பட்டினம்பூம்புகார் அல்ல;புகும்புகார்ஸ்ரீரங்கம் அல்ல;அரங்கம்திருவையாறு அல்ல;ஐயாறுசீர்காழி அல்ல;சீகாழிவேதாரண்யம் அல்ல;திருமறைக்காடுகல்பாக்கம் அல்ல;கயல்பாக்கம்சேலம் அல்ல;சேரளம்திருத்தணி அல்ல;திருத்தணிகைதிருவண்ணாமலை அல்ல;அண்ணாந்துமலை.-Mohamed Siddiq

Sunday, 9 April 2023

*1,15,000 மதிப்புள்ள உணவு பொருட்கள் 75 குடும்பங்களுக்கு வினியோகம்****************09/04/2023 ஆண்டுதோறும் தேவை உள்ளவர்களை தேடிச்சென்று உதவும் அடிப்படையில் இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு, திருவாடானை தொகுதி #தமிழ்நாடு_முஸ்லிம்_முன்னேற்றக்_கழகம் சார்பாக *தமுமுக மாவட்ட செயலாளர் J.ஜாவித் அஸ்ஸாம்BE* தலைமையில் *சித்தார்த்க்கோட்டை, அத்தியூத்து, புதுவலசை, ஆற்றங்கரை* ஆகிய ஊர்களில் முதல் கட்டமாக( 75 )குடும்பங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு,எண்ணெய், சக்கரை,மசாலா பொருட்கள்,காய்கறிகள் உட்பட அனைத்தும் உள்ளடங்கிய சமையல் பொருட்கள் வழங்கபட்டது. மாவட்ட தலைவர் பட்டாணி மீரான், முன்னிலை வகித்தார். இன் நிகழ்வில் து. செயலாளர் உபய்துல்லாஹ், புதுவலசை கிளை தலைவர் ஜாஹிர், மமக செயலாளர் சமீர், பொருளாளர் மகாதீர், மற்றும் நிர்வாகிகள் முகமது அப்சர், அஸ்னல் கான், மிசால், அப்ரின், ரகுமான், பனைக்குளம் சையது இப்ராஹிம்,மற்றும் ஹமீது சுல்தான், அத்தியூத்து ரஹ்மான், புதுவலசை ஜமாத் தலைவர் லியாகத் அலி, செயலாளர் பசூல்தீன், பொருளாளர் சேக்அலாவுதீன், சித்தார்கோட்டை பைத்துல் மால் செயலாளர் ரிபாய் மற்றும் ஜமாத் துணைச் செயலாளர் காதர் ரிஸ்வான், மற்றும் அத்தியூத்து ஆற்றங்கரை ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்اِنۡ تُبۡدُوا الصَّدَقٰتِ فَنِعِمَّا هِىَ ‌ۚ وَاِنۡ تُخۡفُوۡهَا وَ تُؤۡتُوۡ الۡفُقَرَآءَ فَهُوَ خَيۡرٌ لَّكُمۡ ‌ؕ وَيُكَفِّرُ عَنۡكُمۡ مِّنۡ سَيِّاٰتِكُمۡ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِيۡرٌ ‏﴿۲۷۱﴾தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்; (அல்-குர்ஆன் 2:271)தகவல்/செய்திஇராமநாதபுரம் மாவட்டம்-கிழக்கு

Saturday, 8 April 2023

*Assalamualaikum Warahmatullahi Wabarakatuh*Namathoor Puduvalasai seirntha Kaasiyar veetu marhum Sam Naina Hajiyar avargalin petiyum, Marhum Mohd Sharif avargalin mahalum, Marhoom Mohd Kalanjiam avargalin manaiviyum, Marhoom Sahuban Ali avargalin Thayarumahiya Hajah Samsoon Beevi Wafathaahivittargal Inna Lillahi Va Inna Ilaihi Rajioon. Annaarin Marumaikkaga Doa Seiyavum 🤲🏻🤲🏻

வெப்ப நிலை அதிகரிப்

வெப்ப நிலை அதிகரிப்பு காரணமாக பாம்புகள். மற்றும் வேறு 
விஷ ஜந்துக்களும் 
குளிரான பகுதிகளை நோக்கி வரக்கூடும் 
வீடுகள் மற்றும் குளியலறைகள்
 கோழிக் கூடுகள் கிணற்று பகுதிகள் போன்ற பகுதிகளுக்கு செல்லும் போது அவதானமாக செல்லுங்கள்.

பாம்பு பற்றி அறிந்தவர்கள் இது என்ன பாம்பு என்பதனை குறிப்பிடுங்கள்...

Thursday, 6 April 2023

வரலாறு -அழுத,-தருணம்

#வரலாறு_அழுத_தருணம்......
றமழான் பிறை 03ஆம் நாள்...

முத்து நபியின் ஈரல் துண்டு என்று வர்ணிக்கப்படும் பாத்திமா பீவி (ரலி) எனும் நாயகத்தின் அன்பு  மகள் திருமண வயதை அடைந்ததும், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அலி (ரலி) அவர்களை மருமகனாக தேர்ந்தெடுத்தார்கள்.  முன்மாதிரியான தாம்பத்திய வாழ்க்கை.  பாத்திமா பீவியின் கடைசி நிமிடம் யாரையும் அழ வைக்கும்...

ஒரு நாள் அலி (ரலி) வீட்டிற்குச் சென்றபோது, ​​பாத்திமா பீவி (ரலி) அவர்கள் மும்முரமாக தன் வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். தனது குழந்தைகளான ஹசன், ஹுஸைனை குளிப்பாட்டுகிறார்கள், தலையை துடைத்து விட்டு, அவர்களுக்கு ஆடை அணிவிக்கிறார்கள்.  இதற்கிடையில் குப்பூஸும் தயாரிக்கிறார்கள்.
  
சிறு குழந்தைகளைக் கொண்ட அனைத்து தாய்மார்களின் நிலையும் இதுதான்.  ஆனால் பாத்திமா பீவி (‌ரலி) அவர்கள் அலி (ரலி) அவர்களைப் பார்த்ததும் அவரைப் பார்த்தது போல் காட்டிக்கவில்லை..

பொதுவாக அலி (ரலி) அவர்களைப்  பார்த்தாலே அன்பால் மூழ்க செய்பவர் இன்றைக்கு என்னாச்சு என்று யோசித்துக்கொண்டே அலி(ரலி) கேட்டார்கள்:

பாத்திமா.. என்னைப் பார்த்த பிறகும் ஏன் மௌனமாக இருந்தாய்?  இப்படி நீ  இருப்பதில்லையே.. இதுதான் முதல் 
முறையாக‌ இருக்கிறது...
என்று சொல்ல

இதைக் கேட்ட பாத்திமா பீவி (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நான் ஒரு‌ விருந்துக்கு செல்ல உத்தேசித்துள்ளதால், இப்போதைக்கு உங்களையும், குழந்தைகளையும் கூட்டிச் செல்ல இயலாது...

செல்வது நல்லது, எப்போது திரும்பி வருவீங்க..
என்று கோபம் கொள்ளாமல் கேட்டார்கள் அலி(ரலி) அவர்கள்..

நாமாக இருந்திருந்தால், அடியும், ஏச்சுமாக  நிலைமை மோசமாகியிருக்கும்.  இதனால்தான் இந்தத் திருமண வாழ்க்கையில் நமக்கு ஒரு அழகிய முன்மாதிரி இருக்கிறது என்று அறிஞர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.*

கியாமத் நாள் வரை நான் திரும்ப மாட்டேன்.
இடி விழுந்தது போன்ற பதில்..

அலி (ரலி) அவர்கள் திகைத்து போய் நின்றார்கள்..
என்ன பாத்திமா சொல்கிறாய்..? இதையெல்லாம் உனக்கு யார் சொன்னது..?
கண்கள் நிறைந்த நிலையில் பாத்திமா பீவி கூறுகிறார்கள்: 
நான் என் வாப்பாவை (முத்து நபி) கனவு கண்டேன். 
ரொம்ப நாளாகிவிட்டது..
உன்னை பார்க்க எனக்கு ஆசையாக இருக்கிறது..
உன்னை பார்க்க காத்திருக்கிறேன்!!! என்று கூறினார்கள் என சொல்ல...

இதைக் கேட்ட அலி (ரலி) அவர்களும், பாத்திமா பீவியும் கண்ணீர் விட்டு அழுதனர்.. வானம் கருத்தது, பூமி நடுங்கியது..

நான் என்  உயிரை விட  நேசித்த என் அன்புச்  செல்லம் என்னை விட்டு பிரிகிறதா..? 

அலி (ரலி) என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள்...

அழுதுகொண்டே அலி (ரலி) அவர்கள்  தன்னைப் பற்றி கவலைப்படுகிறார்கள்.  "எல்லோரும் இவ்வுலகை விட்டு பிரிந்து செல்பவர்கள்தான், இருப்பினும் நீ போனால் நான் இவ்வுலகில் இல்லாத்தவனைப் போலவே.நீ இல்லாமல் நான் எப்படி வாழ்வேன்.

எனக்கு அழகான இரண்டு நல்ல குழந்தைகளைப் பெற்றெடுத்தவள், 
எனது மிகுந்த வறுமையிலும் எவ்வித குற்றம், குறையும் சொல்லாமல் எனக்கு துணையாக நின்றவள்
அலி (ரலி) அவர்கள் துக்கத்தின் உச்சத்தில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள்.

பாத்திமா பீவி (ரலி) அவர்கள் தன் குழந்தைகளை அழைத்து இருவரையும் தன் மடியில் அமர்த்தினார் கள்.தன்னையறியாமல் அப்பாவியாகச் சிரித்துக்கொண்டிருந்த தன் குழந்தைகளின் முகத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்தார்கள் பாத்திமா பீவி.

நான் இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றால் என் குழந்தைகளை யார் குளிப்பாட்டுவா, ஆடைகளை யார் அணிவிப்பா.. என்று சொல்லி பாத்திமா பீவி (ரலி) அழுதுகொண்டே தன் குழந்தைகளுக்கு துரு துருவாக முத்தமிட்டார்கள்...

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கணவர் அலி (ரலி) வேதனையில் மூழ்கி போனார்கள்...

"மரணம் வரும் என்று எனக்குத் தெரியும், ஆனால்  அன்பானவர்களின் இழப்பை என்னால் ஒருபோதும் தாங்க முடியாது" ... என்று

அலி (ரலி) கனத்த இதயத்துடன் கூறினார்கள்:

பாத்திமா நீ கிளம்புகிறாயா?நாளைக்கு உன் வாப்பாவை சந்திக்கும் போது  நானும் விரைவில் அவர்களிடம் வர விரும்புகிறேன் என்றும், அவர்களுக்குப் பிடிக்காத ஒன்று என் வாழ்க்கையில்  ஏற்பட்டிருந்தால் மன்னித்து விடும்படி சொல்ல வேண்டும் என்று கூறினார்கள்...

மேலும் ... உனது கம்பீரத்தை என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை, என்னைப் பற்றிய குறைகளை நாயகத்திடம் சொல்லாதீர்கள். 
நான் ஒரு பரம ஏழை.நான் ஏதாவது உங்கள் மனம் நோகும்படி நடந்திருந்தால் அல்லாஹ் ரஸுலுக்காக என்னை மன்னிக்கவும்...

நான் நாளை மஹ்சராவுக்குச் செல்லும்போது, ​​​​நன்மைகள் ‌இல்லாமல்  கவலைப்படும்போது, ​​​​இந்த ஏழையையும் கருத்தில் கொள்ளுமாறு  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நீ சொல்ல  வேண்டும்.
சங்கை உடைக்கும் இந்த வார்த்தைகளைக் கூறும்போது அலி (ரலி) கண்ணீர் விட்டு அழுதார்கள்...

இதையெல்லாம் கேட்டு தாங்க இயலாமல்  பாத்திமா பீவியும் அழுகின்றார்கள்..
“ஓ அலியார், நான் உங்களிடம் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும்.
நான் மரணிக்கும் போது நீங்கள் தான் என் மய்யித்தை கஃபன் செய்து நல்லடக்கம்  வேண்டும்.

நான் இறந்தால் என் பிள்ளைகள்  அனாதையாகி விடுவார்கள்..
எனவே அனாதை குழந்தைகளை கண்டால் அவர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்க வேண்டும்.. அந்நேரம் என்னையும் நினைவு கூற வேண்டும்.
உங்கள் மனம் நோகும்படி நான் நடந்திருந்தால் அல்லாஹ் ரஸுலுக்காக என்னை மன்னிக்கவும்..

அதுபோல என் செல்லங்களான ஹஸன், ஹுஸைனை ஒரு போதும் நீங்கள் அடித்து விடாதீர்கள்..

பாத்திமா பீவி (ரலி) அவர்கள் தொடர்ந்தார்கள், 
நான்  வாப்பாவையும் வானத்திலுள்ள 
வானவர்களையும் பார்த்தேன்..
இன்னும் ஒன்றைச் சொல்ல வேண்டும்.  
என் அலமாரியில் ஒரு துண்டு காகிதம் உள்ளது, அதை  கொண்டு வரலாமா?

அலி (ரலி) அவர்கள் அதைக் கொண்டு வந்து ஒப்படைத்த போது ஃபாத்திமா பீவி‌( ரலி) கூறினார்கள்: நீங்கள் என்னை நல்லடக்கம் செய்யும் போது இந்த காகிதத்தை என் கப்ரில் வைத்து நல்லடக்கம் செய்ய வேண்டும்.
இதை பார்வையிட உங்களுக்கு அனுமதி இல்லை.இது பரம ரகசியம்.

அந்த காகிதத்தில் என்ன எழுதியிருக்கிறது அதை தனக்கு சொல்ல வேண்டுமென அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்...

அன்பரே, நம்  திருமணத்திற்கு முன் வாப்பா என்னிடம் கேட்டார்கள்: நான் உன்னை அலிக்கு 400 திர்ஹம் மஹர் கொடுத்து திருமணம் செய்து வைக்க விரும்புகிறேன், உனக்கு திருப்தியா?

எனக்கு அலியார் திருப்தி  வாப்பா.. 
ஆனால் திர்ஹம் எனக்கு திருப்தி இல்லை. என்றேன்..

உடனே ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து கூறினார்கள்: 
அல்லாஹ் பாத்திமா பிவீக்காக சொர்க்கத்தையும் அதிலுள்ள அனைத்தையும் மஹராக ஆக்கிவிட்டான்.

ஆனாலும் பாத்திமா பீவி விடுவதாக இல்லை..

எனக்கு திருப்தி ஏற்படவில்லை.
என்று பதிலளித்தார்கள்.

அப்படியானால் என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறீர்கள் என்று
நபி (ஸல்) அவர்கள் மிகவும் மென்மையாக பாத்திமா பீவியிடம் கேட்டார்கள்: 
உங்கள் உம்மத்தின் பரிந்துரையை (ஷஃபாஅத்) நான் உறுதிப்படுத்த வேண்டும்.  அதைத்தானே நீங்களும் அதிகம் விரும்புகிறீர்கள்...

உடனே ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒரு கடிதத்துடன் வந்தார்கள், அதில் உம்மத்துக்கு பரிந்துரை உண்டு என்று எழுதப்பட்டிருந்தது.

நான் அந்த காகிதத்தை கொண்டு மஹ்சரில் இறைவனிடம் சமர்ப்பணம் செய்வேன்..

நியாயத்தீர்ப்பு நாளில் யாரோ ஒருவர் அழைத்துக் கூறுவார்..

ஓ சமூகமே... ஃபாத்திமா பீவி ஸிராத் பாலம் கடந்து செல்லும் வரை  உங்கள் கண்களை மூடிக்கொள்ள வேண்டும்.  அவர்கள் தங்கள் வாழ்நாளில் மிகவும் கவனமாக இருந்தவர்கள்..

நினைவுகள், கடந்த கால வாழ்க்கையைக் கூறி இருவரும் கண்ணீர் வடிக்கிறார்கள்.

திடீரென்று, பாத்திமா பீவி தன் பணிப்பெண்ணிடம் வேறு யாரையும் அறைக்குள் விட வேண்டாம் என்று கூறிவிட்டு, நான் திக்ர், ஸலாத் ஓதி படுத்துகிறேன் என்று கூறி முத்து நபி பயன்படுத்திய வாசனை திரவியத்தை புரட்டி முகத்தை துணியால் மூடிக்கொண்டார்கள்..

நேரம் கடந்து செல்கிறது. பாத்திமா பீவி இவ்வுலகை விட்டுச் செல்கிறார்கள். ரூஹை  பிடிக்கும்படி அல்லாஹ்  கட்டளையிடுகிறான்..

முத்து நபியின் அழகிலும், நடையிலும், செயலிலும் இசைந்திருந்த முத்து நபியின் மகள் பிரிந்து செல்வதை அறிந்ததும், வானமே அழுதது, பூமி அதிர்ந்தது, அனைத்து உயிரினங்களும் விதும்பின..

ஹசன் மற்றும் ஹுசைன் (ரலி) ஆகிய இருவரும்
உம்மி... லுஹா தொழுகைக்கு நேரமாகிவிட்டது, எழுந்திருங்கள்.... பொன்னும்மா இவ்வுலகை விட்டுச் சென்றதை அறியாமல் மீண்டும் அழைக்கிறார்கள் அந்த அப்பாவி குழந்தைகள்.

உம்மாவின் முக மக்கனாவை நீக்கி முகத்தைப் பார்த்தபோது அந்தச் சூழல் முழுவதும் பிரகாசமாக இருந்ததை வலியுடன் அவர்கள் உணர்ந்தார்கள், இல்லை... உம்மா இனி திரும்பி வரமாட்டார்கள்...

இருவரும் கதறி அழுகிறார்கள், 
அண்டை வீட்டார்களும்,
ஊர்வாசிகளும்
தங்கள் அன்புக்குரியவரை இழந்து வருந்துகிறார்கள்.  தகவலறிந்து அலி (ரலி) மசூதியை விட்டு வெளியே வந்தார்.

தன் காதலியின் முகத்தைப் பார்த்து கதறி அழுதபோது, ​​கடந்த காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது நினைவுக்கு வந்தது.
அலீ (ரலி) அவர்களே "பாத்திமா சொர்க்கத்திலும் உங்கள் மனைவியாக இருப்பார்" .

அலி (ரலி) அவர்களே பாத்திமா பீவியின் ஜனாஸாவை குளிப்பாட்டினார்கள்..
பாத்திமா பீவியின்‌ வாழ்க்கையில் அந்நிய  எந்த ஆணும் அவரது அவ்ரத்தை பார்த்தது இல்லை.. இந்நிலை அவருடைய மரணத்தின் போதும்  தொடர்ந்தது..

அல்லாஹ் பாத்திமா உம்மாவின் பறக்கத்தைக் கொண்டு நமக்கு நல்ல வாழ்க்கையை வழங்குவானாக...

நண்பர்களே, 
மரணத்தில் கூட
நம் சொந்த இரட்சிப்புக்காக மட்டுமே பேசியவர், தனது வாழ்நாள் முழுவதும் அந்நியர்களைப் பார்க்காமல் கவனமாக இருந்தவர், 
கணவரின் வறுமையிலும் குற்றம் குறைகள் சொல்லாமல்  துணை நின்ற பொன்னும்மா பாத்திமா பீவி (ரலி) அவர்கள் நமக்கு முன்மாதிரி.

அவர்களை சொர்க்கத்தில் சந்திக்கும்   பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு வழங்குவானாக..
#ஆமீன்..

Wednesday, 5 April 2023

செருப்பு தைப்பவரிடம் உன் செருக்கை காட்டாதே உன்னை சுமக்கும் செருப்புக்கும் அதை தைப்பவர்க்கும் செருக்கு என்றும் இருந்ததில்லைதன் கைகளைக் கொண்டு தைப்பதால் அவர் தாழ்ந்தவரும் அல்ல நீ கால்களில் அணிவதால் நீ உயர்ந்தவனும் அல்ல...கைகளால் தீண்டுவதால் அவர் கையாளாகாதவர் அல்ல...கைகளால் தீண்டாமல் உன் கால்களும் ஊன்றுவதில்லை...அவர் தைத்துக் கொடுப்பதால் தான் நீ வைத்துக் கொண்டு நடக்கிறாய்... அவரின் உழைப்பு உன்னை உயர்த்துகிறது...செருப்பு தைப்பவரும் சரி செருப்பும் சரி பிரிவினையை வலியுறுத்துவதில்லை... ஒன்றை ஒன்று பிரிந்தாலும் ஒன்றுக்கும் உதவுவதில்லை...எவனோ ஒருவன் சர்வாதிகாரத்தின் கீழ் அடிமையாய் சவமாகி போகும் நம்மை போல...உங்கள் பாதங்களைப் பற்றிக் கொள்ளும் செருப்பாக இருக்க விரும்புகிறேன் நான்கால் போன போக்கில் கடந்து கொண்டிருக்கும் உங்களை வழிநடத்த..எந்த சாதியும் தாழ்ந்தது அல்ல எந்த தொழிலும் குறைந்ததும் அல்லதாழ்த்தப்பட்டவன் என்று ஒருவன் இருப்பதால்தான் நீ உயர்ந்தவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்உயர்வு தாழ்வு என்பது உயிர்களில் இல்லை... உன்னில் இருந்தால் மண்ணில் நீ இருந்தும் பயனும் இல்லைஉயர்ந்தவனும் தாழ்ந்தவனும் ஒரே வழியில் தான் பிறக்கிறோம்..ஒரே வகையில் தான் வாழ்கிறோம் ஒரே முறையில் தான் மடிகிறோம்....காசு கொடுத்து கடவுளை காணச் செல்லும் என் செருப்பு கோவிலுக்கு வெளியே காசை வாங்கிக் கொண்டு காட்சியளிக்கும் கடவுளின் பாதுகைகோவிலுக்கு உள்ளே....பாதரட்சை என்கிறார்கள்... பாமரன் வழக்கு செருப்பு இரண்டுக்கும் ஒரே பொருள் இரண்டும் ஒரே பயன்...ஒன்றைத் தொட்டு வணங்குகிறான்மற்றொன்றை தொட்டவனையும் தொட மறுக்கிறான்...பாதங்களுக்கு பொருந்தாத செருப்பு எப்படி கடிக்கிறதோ அப்படியே பகுத்தறிவுக்கு பொருந்தாத உங்களின் சித்தாந்தங்களை கடிந்து கொள்கிறேன்....அதிகாரத்தில் இருப்பவன் எந்த சாதிக்காரன் என்று பார்க்காதே சாதித்தான் என்று பார்.அடிமை வர்க்கங்கள் தான் இந்த சாதிகள் என்று ஒதுக்காதே...அறியாமை நீங்கி விட்டால் அடிமைத்தனம் ஓய்ந்துவிடும்....அவன் திரும்ப அடிக்க ஆரம்பித்து விட்டால் அடங்கிவிடும் உங்கள் ஆணவத்தின் ஆட்டம்....அறியாமல் மிதித்து விட்ட முள்ளையே அறிந்து மதித்து கையில் எடுக்கிறாய்வலி உன்னை வழி நடத்துகிறது...அறிந்து மிதித்து விடாதே... அறியும் நேரம் அழித்தே தீரும்... அனைவரும் ஒன்றே.. சாதி எரிந்தே போகும்...இவண்ஆற்காடு குமரன்9789814114

காலத்தால் அழிக்க முடியாத நினைவுகளுடன், காயிதே மில்லத் மறைந்த நாள் (5.4.1972)அறம்வளர்த்த பெருந்திருவைஅள்ளிவைத்த மண்ணறையில்இருந்துநான் அழுவதற்கோஎன்னன்னை மொழியுரைத்தாள்!சரமுல்லைப் பூப்போன்றசமுதாயத் தந்தைக்குசரமகவி பாடுதற்கோதமிழ்க்கவிதை நான்கற்றேன்…_____ ______ _____ ______தும்பைப்பூ நிறம்போன்றதூயவரே! துல்லியமாய்செம்மைவளர் அறம்குவித்தசிந்தனையின் பொக்கிஷமே!தம்மோடு கைப்பொருளைசமூகத்திற்கு கீந்ததல்லால்எம்மினத்திற் கருள்கேட்கஇறையிடமே சென்றீரோ!!இறையோனின் மறைகூறிஇறுதிநபி வாழ்ந்திருந்தநிறைகூறி விளக்குவதைநித்தமிங்கே கேட்டிருந்தோம்!மறைகூறும் மறுமைக்குமரணமென்ற ரதமேறிவிரைந்தங்கு சென்றுவிட்டால்விளக்கமினி யார்தருவார்!!...._____. ______ _______ ______பாலைவன ஒட்டகத்தைப்பற்றிவந்த வழிகாட்டிவேளைவந்த தென்றெண்ணிவிட்டுவிட்டுச் சென்றுவிட்டால்பாலைவன ஒட்டகத்தின்பயணமினி என்னாகும்?நாளையிந்த ஒட்டகத்தைநடத்துவது யாரிங்கே?......பிழைபொறுக்க வேண்டுகின்றோம்பெருமைமிகு யாஅல்லாஹ்!நிலையான சுவனத்தைநீயருள்வாய் ரஹ்மானே!தலைமையொன்றை எங்களுக்குத்தந்தருள்வாய் அருளாளா!இலைஉனக்கு இணைதுணைதான்ஏகஇறை நாயகனே!சமுதாயக் கவிஞர் தா. காசிமின் கவிதைக் குவியலிலிருந்து….





Monday, 3 April 2023

மீண்டும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கத்தை ஆரம்பியுங்கள் அனைவருக்கும் .சொல்லுங்கள்

மீண்டும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கத்தை ஆரம்பியுங்கள்  அனைவருக்கும் .சொல்லுங்கள் 

மலட்டுத்தன்மை அறவே இல்லை. கேன்சர் இல்லை, 
சர்க்கரை வியாதி இல்லை, 
இதய நோய்கள் இல்லை ..... 
வெற்றிலை பாக்கு போடுவதை கெட்ட பழக்கமாகவும்  சாராயம் குடிப்பதை சாதாரண பழக்கமாகவும் மா(ற்)றிய குடிகாரர்களின் கூடாரமாய் ஆண்மையிழந்து இயலாதவர்களாய்த்  தமிழ்ச் சமூகத்தின் இன்றைய இளைஞர்கள். 

தமிழ்க் கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது "தாம்பூலம்" எனப்படும் வெற்றிலை, பாக்கு. தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து சடங்கு சம்பிரதாயங்களிலும் தவறாமல் இடம் பெரும் ஒரு பொருள் வெற்றிலை பாக்கு, வெறும் வெற்றிலை பாக்கு மட்டுமே மாற்றி ஒரு திருமணத்தையே நிச்சயம் செய்து விடுவான் தமிழன்.

வெற்றிலை பாக்கு போட்டு வளர்ந்த தாத்தா பாட்டி காலத்தில் 
கேன்சர் இல்லை, சர்க்கரை வியாதி இல்லை, இதய நோய்கள் இல்லை 
முக்கியமாக மலட்டுத்தன்மை அறவே இல்லை.

ஆக வெற்றிலை, பாக்கு என்பது பல நோய்களைத் தீர்க்கும் ஒரு அருமருந்து என்பது தமிழினத்துக்கு தெரிந்திருந்ததால் தான், அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறான் தமிழன்.

கலாச்சாரச் சீரழிவும், அன்னிய மோகமும் சேர்ந்து தாம்பூலத்தைக் கெட்ட பழக்கமாக சித்தரித்து நம் இனத்தை நோயாளிகளாய் அலைய விட்டிருக்கிறது.

வெற்றிலையின் மகத்துவத்தை தமிழனை மறக்கடிக்கச் செய்து தம்பதிகளை fertility Centre ( கருத்தரிப்பு மையம்)களை நோக்கி படையெடுக்க வைத்திருக்கிறது.

வாயில் கேன்சர் வந்திடும், பல்லு கரை போகவே போகாது, தவிர "டேய்.. இன்னும் பழைய ஆள் மாதிரி வெத்தலையை போட்டு கிட்டு..
எனச் சொல்லிச் சொல்லியே வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் நம்மிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைக்கப்பட்டு விட்டது.

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு அதிலும் கல் சுண்ணாம்பு, முத்துச்சிப்பி சுண்ணாம்பு என வித்தியாசம் காட்டி அது மட்டுமா ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய், என வாசனைப் பொருட்கள் கலந்து வாயில் இட்டு சுவைத்து, முதலில் ஊறும் நீரும், இரண்டாவது ஊறும் நீரையும் துப்பிவிட வேண்டும் என்றும், மூன்றவதாய் ஊறும் நீரே அமிர்தம் என தாம்பூலம் இட்ட வழி முறைகள் சொன்ன சித்த மருத்துவம் இருந்த ஊரில், "ஆங்.. தாம்பூலமா அப்படின்னா?", எனக் கேட்கும் அடுத்த தலைமுறை வந்து விட்டது,

பெருகி வரும் ஆண் மலட்டுத் தன்மை குறிப்பாக விந்தணு உற்பத்தி மற்றும் அதன் Motility குறைதல் இவற்றுக்கு தாம்பூலம் மிக சிறந்த மருந்து.
வெற்றிலையில் உள்ள Hydroxy Chavicol எனும் Phenol Compound ஆனது ஆண்களின் Prostate-ஐ வலுப்படுத்துகிறது, மேலும் Prostate புற்று வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது,

விதைப்பையில் உற்பத்தியாகும் விந்தணுவிற்கு  Prostate-ல் இருந்து சுரக்கும் நீரில் உள்ள Zinc மூலம் தான் உயிரே கிடைக்கிறது, அதாவது Motility உண்டாகிறது, IVF நிகழ்வில் விந்தின் Capacitation நிகழ்வும் முக்கியம், அந்த Capacitation நடக்க Prostate சுரப்பு ரொம்ப முக்கியம் , இதையெல்லாம் தெரிந்ததால் தானோ என்னவோ காதல் மனைவி ஊட்டி விடும் தாம்பூலத்தைச் சிலாகித்துப் பேசியிருக்கிறார்கள் போல,
மலச்சிக்கலா, தாம்பூலத்துடன் கொஞ்சம் அதிகம் பாக்கைச் சேர், வாய் நாற்றமா, லவங்கத்தைச் சேர், வீரியம் வேண்டுமா, சாதிக்காய் சேர் எனச் சொன்ன தமிழ்ச் சமூகம் இன்று Infertility center-களில் முடங்கி கிடக்கிறது.

அடுத்த தலைமுறைக்கு இனியாவது தாம்பூலத்தின் மகத்துவத்தை எடுத்துரைப்போம்...

Saturday, 1 April 2023

*பதிவு கொஞ்சம் நீளம் தான்... ஆனால்!? நீங்கள் படித்தே ஆக வேண்டும். என்பது பொது விதி.!* *இன்ஷாஅல்லாஹ்..!

*

பதிவு கொஞ்சம் நீளம் தான்..
 ஆனால்!? நீங்கள் படித்தே ஆக வேண்டும். என்பது பொது விதி.!*

 *இன்ஷாஅல்லாஹ்..!*

*மாநகராட்சியாகப் போகும் நம்ம முகவை.!*

*சாதாரண பாமர மக்களைக் கொண்டு...* *அந்நிய செலாவனி முதலீட்டில் ( வெளிநாடு வாழ் நம் மாவட்ட மக்களின் வருமானத்தால்) தமிழ் நாட்டிலே இரண்டாவது இடத்தில் நம் மாவட்டம் இருக்கிறது.!*

*நம் மாவட்டத்தில் இல்லாத வளங்களே இல்லை.!*

*கடல் சார்பு தொழில் கொண்டு, தரை சார்ந்த விவசாயம் முதல்...*

 *தரைக்குள்ளே லிக்னட் (நிலக்கரி), கேஸ், பவர், போன்ற இயற்கை வளமும்,*

*புவி சார் குறியீடு பெற்ற நம் மாவட்ட குடை மிளகாயும்,* 

*மருதம் சார்ந்த நம் மாவட்ட, வருசநாடு வெள்ளாடும் வரலாற்று சிறப்பாகும்.!*

*தமிழகத்திலே மிகப் பெரிய இரண்டாவது நீர் தேக்க விவசாய பாசன கண்மாய்... நம் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கன்மாய் என்பதும் மற்றொரு தனிச் சிறப்பு.!*

 *அதிகமான CBSC பள்ளிகளையும், தனியார் கல்லூரிகளையும், மருத்துவம், மற்றும் பொறியியல் கல்லூரிகளையும் கொண்ட மாவட்டம் நம் முகவை மாவட்டம்.!*

*சென்ற கல்வியாண்டில் +2, 10-th மாணவர்கள் தமிழக அளவில்... நம் முகவை மாவட்டம், மூன்றாவது இடம் பிடித்தது ஒரு மைய்ல் கல்.!*

*வரலாற்று சிறப்பு மிக்க பாம்பன் பாலம் ஒரு தனி சிறப்பு.!*

 *இப்போது எல்லா ஊர்களில் இருக்கும் பிராட் கேஜ் இரயில் வருவதற்கு முன்னாடியே... நம் தனுஷ்கோடிக்கு அப்பவே சென்னையிலிருந்து தனுஷ்கோடி வரை மீட்டர் கேஜ் இரயில் ஓடியது...*

*2000 ஆண்டு வரை, சென்னையிலிருந்து தனுஷ்கோடி மார்க்கமாக ஶ்ரீலங்காவிற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நடைமுறையில் இருந்தது.. அப்போது DMK MP-யாக இருந்த T.R.பாலு மற்றும் G.K.வாசன், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது கொண்டு வந்த நல்ல திட்டத்தை, அமரர் ஜெயா அம்மையார் பாதுகாப்பை காரணம் காட்டி தடை செய்ததும் வருத்தமான வரலாறு.!*

*சேது சமுத்திர திட்டத்தை கலைஞர் முனைப்பாக கொண்டு வர துடித்ததே... இராமேஸ்வரம் சுற்றுலா துறையை மேம்படுத்த தான்.... ஆனால் சங்கிகள் இன்று வரை முட்டுக் கட்டை போட்டு வருவதும் வருத்தமான செய்தியே.!* 

*உச்சிபுளி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து மலேஷியா, துபாய், மற்றும் சவூதிக்கு நேரடி பிளைட் விட, நம்ம MP நவாஸ் கனி அவர்கள் ஒன்றியத்துக்கு இதுவரை அழுத்தம் கொடுத்துக் கொண்டிருப்பது நன்றே.!*

*நம்ம மாவட்ட பேருந்து நிலையத்திலிருந்து தமிழகம் அனைத்து ஊர்களுக்கும், பேருந்து வசதி இருப்பது நல்ல செய்திகளில் ஒன்று.!*

*இரமநாதபுரம் இரயில் நிலையத்திலிருந்து... இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் இரயில் வசதி இருப்பது, வடக்கனை வாழ வைக்க... இது ஒன்றியத்தின் உதவி.!*

*கடலோர மார்க்கமாக ECR சாலையும், நகர் & கிராமப்புற மார்க்கமாக பைபாஸ் சாலையும் ஒன்றாக  அமைந்த மாவட்டம் நம் முகவை மாவட்டம் என்பது ஆச்சிரியம்.!*

*இராமேஷ்வரம் கோவிலும், ஏர்வாடி தர்ஹாவும், இராமநாதபுரம் ரோமன் சர்ச்சும் மத நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.!* 

*குட்டி சிங்கப்பூர் என... கூத்தாநல்லூருக்கு அடுத்தபடியாக கீழக்கரையையும், தொண்டியையும், எஸ்.பி.பட்டினத்தையும் பிற மத மக்கள் புகழ்ந்து பேசுவதும் ஒரு வேடிக்கையான நகைச்சுவை உண்மைதான்.!* 

*கரகாட்ட கூத்தாடி தொண்டி ஃபாத்திமாவும், திரைப்பட கூத்தாடிகளான கமலஹாசனும், ( பரமக்குடி) விக்ரமும், ( பரமக்குடி) இயக்குனர் R.K.சுரேஷ் (வளநாடு) பிறந்த மாவட்டம் நம் முகவை.!* 

*அரசியல் செண்டிமெண்டாக... ஆளும் கட்சி வேட்பாளர் இந்த தொகுதியில் வெற்றி பெற்றால்... அளும் CM உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்ற பலிச்சொல் சட்டசபை தொகுதியான திருவாடானையை உள்ளடக்கிய மாவட்டம் நம் முகவை.!* 

*நான் கமுதி தொகுதியில் படுத்துக் கொண்டே ஜெய்ப்பேன்...!  என கலைஞர் சூளுரைத்தார்...! காரணம்.!? "கமுதி" என்பதை திருப்பி போட்டால் "திமுக" என வரும் என்று... ஆருடம் சூட்டிய ஊரைக் கொண்டது நம் முகவை.!*
*இராமநாதபுரம் மன்னர் சேதுபதி அரண்மனையும்.... அவர்களின் வம்சாவளி இரண்டு பெண்களின் நினைவு ஊராக அக்காள் மடம், தங்கச்சி மடமும் அமைந்திருப்பது சிறப்பு.!*

*1967 புயலில் தனுஷ்கோடி மட்டும் அழியாமல் இருந்திருந்தால்... இன்று நிலமையே  வேறு.!*

*சுற்றுலா துறையில் நம்  மாவட்டம் முதலிடத்தில் இருந்திருக்கும்.!*

*சென்னை, விசாகப்பட்டின துறைமுகங்களை தூக்கி சாப்பிட்டிருக்கும் நம் தனுஷ்கோடி துறைமுகம்.!* 

*வடக்கே வளர்கிறது.! தெற்கே தேய்கிறது..!! என அப்போதைய முதல்வர் அண்ணாதுரைக்கு.. (ஒரே கட்சியாக இருந்தாலும்) எதிராகவே குரல் கொடுத்த கலைஞர்... தலைமை செயலகத்தை, தூத்துக்குடி, மதுரை, இராமேஸ்வரம் போன்ற ஊர்களுக்கு மாற்றுங்கள் என்றார்.!*

*எல்லாமே கனவாகி போக... இப்போது நம் இராமநாதபுரம் மாநகராட்சியாகப் போகிறது பெருமை என்றாலும்... வரி அதிகமாகும். ரியல்எஸ்டேட் சிறப்பாக இருக்கும்.. "ரா மெட்டிரியல் மற்றும் கட்டுமான பொருட்கள் விலை அதிகமாகும்.. அதே நேரத்தில வடக்கன்ஸ் வருகையும் அதிகரிக்கும்.!*

*எது எப்படியோ!? நல்லது நடந்தால் ஓகே தான்.! வெறும் நெகட்டிவ்வை மட்டும் பேசாமல் பாசிட்டிவாக யோசித்தால்... தொழில் துறை பெருக நிறைய வாய்ப்புள்ளது... எல்லாமே நம் மாவட்ட மக்கள் கையில்தான் உள்ளது.!* 

*அதிகமான இஸ்லாமிய மக்கள் வாழும் நம் மாவட்டத்தில் மட்டும்... 7 ஆலிம் பட்டம் கொடுக்கும் அரபிக் கல்லூரிகள் அல்லாஹ்வின் கிருபையால் இயங்குகின்றன.*

*கீழக்கரை அருஷியா அரபுக் கல்லூரி தான்... தமிழகத்தின் தாய் கல்லூரி.. வேலூர் பாக்கியாத்திற்கு முன்பாகவே ஆரம்பிக்கப்பட்டது.. ஆனால், ஏனோ சில காரணங்களால்... சில ஆண்டுகள் இயங்காமல் போன அந்த கேப்பில்... வேலூர் பாக்கியாத் -  தாய் கல்லூரி என பெயர் எடுத்து விட்டது..! இவ்வுண்மை தமிழக அநேக மூத்த அரபிக் கல்லூரி பேராசிரியர்களுக்கு நன்றாகவே தெரியும்.. நம் உலமா சபை மாநில தலைவர் முதன்முதலில் கல்வி கற்றது கீழக்கரை அருஷியாவில்தான்.!* 

*(1- அருஷி - கீழக்கரை.*
*2- ஸதகி - கீழக்கரை.*
*3- அதாயி - கீழக்கரை.* 
*4- சித்தாரி - சித்தார்கோட்டை.*
*5- ஹக்கானி - தேவிபட்டினம்.*
*6- அஜ்ஹரி - தொண்டி.* 
*7- குத்சி - எஸ்.பி.பட்டிணம்.)* 

*50 பதுக்கும் மேற்பட்ட ஹாஃபிழ் மதரஸாக்கள்.*

*100 க்கும் மேற்பட்ட நிஸ்வான்... (பெண்கள்) மதரசாக்கள் நடந்து கொண்டிருக்கிறது.*

*மத்தியிலும், மாநிலத்திலும் யார் ஆள வேண்டும் என்பதை தீர்மானிப்பதே நம் இஸ்லாமிய ஓட்டுகள் தான்.! நாம் ஒற்றுமையாக இருக்கும் வரை..!!*

ஆக்கம்: முகவை ரஹிமி.
பேஷ் இமாம்: சோழந்தூர்.
Thanks