PUDUVALASAI .NET
பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Friday, 13 February 2026
Thursday, 29 January 2026
நமது ஊரைச் சார்ந்த இசை அமைப்பாளர்
நமது ஊரைச் சேர்ந்தவர்கள் ஒரு துறையில் சாதிக்கும்போது அவர்களைக் கொண்டாடுவது நமது மரபு. ஆனால், சில நேரங்களில் திறமையாளர்கள் நம் கண்ணெதிரே இருந்தும், கவனிக்கப்படாமல் போவது ஆச்சரியமே.
அப்படி கவனத்திற்கு வராமல் இருக்கும் ஒருவர் புதுவலசையை சேர்ந்த இசை அமைப்பாளர் ஷாஹித் ரஹ்மான்.
இவரை பற்றி பலருக்குத் தெரியவில்லை என்பதுதான் நிதர்சனம். தமிழ், மலையாளம், ஹிந்தி மட்டுமின்றி ஆங்கிலப் பாடல்கள் இசைத் துணுக்குகள் அவரின் இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்களில் நிறைந்து இருக்கிறது.
https://www.instagram.com/thisisshaheedrahman?igsh=ajMydmUwcW41Z2Fx
"ஆசைய காற்றுல தூதுவிட்டு" பாடலின் இசை வடிவம் (Instrumental) குறிப்பாக அதில் ஒலிக்கும் புல்லாங்குழல் இசை, அற்புதம். https://youtu.be/-m3i2DsHt1k?si=xk3FczEi8L8gfmU1
இசைத் திறமைக்குச் சான்றாக அவரது 14 ட்ராக் கொண்ட 'Let Me Say That Again" என்னும் இசை ஆல்பத்தை சொல்லலாம் இதில் 5-வதாக வரும் "தி சேஸ்" (The Chase) - 20:47 நிமிடத்தில் தொடங்கும் அந்த இசை, அட்ரினலின் வேகத்தை அதிகரிக்கும் ஒரு த்ரில்லர் திரைப்படத்தின் பிஜிஎம் (BGM) போன்றது. இசைக்கருவிகளின் ஆதிக்கம் ஒருபுறம், அந்த விஷுவல் தரும் வேகம் மறுபுறம் என நம்மை ஒரு சேஸிங்கில் இருப்பது போன்ற உணர்வைத் தரும். குறிப்பாக 23:20 நிமிடத்தில் மீண்டும் வேகமெடுக்கும் அந்தப் புள்ளி வியக்க வைக்கும்.
https://m.youtube.com/watch?v=ZJzbKMD_Eeo
படைப்பாளிகளுக்கு ஒரு வேண்டுகோள்
புதுவலசையில் எத்தனையோ திறமையான யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் கிரியேட்டர்கள் இருக்கிறீர்கள். உங்கள் வீடியோக்களுக்குத் தரமான இசையைத் தேடும்போது, நம் மண்ணின் கலைஞரான இவரின் இசையைப் பயன்படுத்துங்கள். அவருக்கு உரிய 'கிரெடிட்ஸ்' (Music Credit) வழங்குவதன் மூலம், இந்த இசை இன்னும் பலரைச் சென்றடையும்.
திறமை எங்கு இருந்தாலும் அது அங்கீகரிக்கப்பட வேண்டும். நம் ஊர் கலைஞனை உலகறியச் செய்யலாமே.
- அன்வர் ராஜா.
Wednesday, 7 January 2026
திரைப்படங்கள் குறித்து உரையாடுவது அல்லது பார்ப்பது நேர விரயம் என்ற விசித்திர உலகில் வாழும் ஜந்துகளில் நானும் ஒருவன். ஆனால் அந்த திரைதுறை ஆதிக்கம் செலுத்தாத வாழ்வியல் நகர்வுகளே இல்லை எனும் அளவிற்கு இன்றைய களம் (காலம்) கட்டமைக்கப்பட்டுவிட்டது. காட்சிப்படுத்தப்படும் உரையாடல்களும், உள்ள குமுறல்களும், உளவியல் தாக்கங்களும், கதா நாயகன்/நாயகி என்ற என்ன ஓட்டமும், காதல், காமம், வன்முறை, வெறியாட்டம், நல்லுபதேசம், பிரிவினைவாதம் என ஒரு மனிதனின் வாழ்வியலில் இன்றைய சினிமாக்கள் பின்னி பினைந்து விட்டதாகவே கருதுகின்றேன். இந்த உளவியல் கொண்ட சமூகத்தில் எதை காட்ச்சிப்படுத்துகின்றோம் என்பது மிக மிக அவசியம். ஒரு நான்கு சிறுவர்கள் சேர்ந்து ஒரு இளைஞனை எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் கொடும் ஆயுதம் கொண்டு தாக்குகின்றார்கள், அதை வீடியோவாக பதிவு செய்து கொள்கின்றார்கள், அதில் ஒருவன் மச்சான் அருவாளை தா! நான் வெட்டுகின்றேன் என்கிறான். பார்க்கவே மனம் கனக்கின்றது. இது போன்ற மனிதம் மறித்த மனப்போக்கு போதை பழக்கங்களால் மட்டும் வந்துவிடுவதில்லை. இது ஒரு தொடர் கட்டமைக்கப்பட்ட உளவியல் சிதைவு. எதை காண்கின்றானோ? அதுவாக மாற நினைக்கும் நிகழ்வு. அதற்கு பல காரணங்கள் உண்டு! போதை பழக்கம், வயது, பெற்றோரின் வளர்ப்பு, சுற்றத்தின் சூழல், நண்பர்களின் மனோபாவம், வழி நடத்த நல்ல தலைமையின்மை, இன்னும் பல!.இவை அனைத்தையும் காட்ச்சிப்படுத்தும் திரைதுறை ஜாம்பவான்கள் தங்கள் படைப்பை மிக நுணுக்கமாக கையாள வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றீர்கள். சமீபத்திய பெரும் வெற்றிபடங்கள் எல்லாம் வன்முறை கலாச்சாரத்தை ஊக்குவிப்பதோடு நின்றுவிடாமல், அதையும் தாண்டி குடும்ப உறவுகள் மீதான நம்பிக்கையை சிதைக்கும் விதமாக கதைகளம் அமைக்கப்ப்டுவது இது போன்ற வெறித்தனங்கள் அதிகரிக்க காரணங்களாக இருக்க கூடும்.மாபெரும் கதாநாயகர்கள் நடித்த, பெரும் வெற்றி இயக்குணர்கள் இயக்கிய படங்களை கூர்ந்து கவணிக்கும் போது, 1. பணத்தாசையால் தந்தையை கொள்ள வில்லனுடன் சேர்ந்து சதி செய்யும் மகன். அதை அறிந்து மகனென்றும் பாராமல் மகனை கொல்லும் தந்தை. 2. மற்றொரு படத்தில் தந்தையை பழிவாங்க மகனை தயார்படுத்திய வில்லன். தன் தந்தை என்று அறிந்த பின்னும் பழிவாங்க துடிக்கும் மகன். இறுதியில் ஆரவார கொண்டாட்டத்துடன் மகனை கொல்லும் தந்தை. 3. தனது வாழ்க்கையை தனது தங்கை தம்பிகளுக்காக அர்பணித்த அண்ணன். இறுதியில் அண்ணனை கொல்ல துடிக்கும் இரண்டு தம்பிகள். தங்கை கற்பழிக்கட்டு கொடூரத்தை அனுபவித்தால் என்று தெரிந்தும் வில்லனுடன் சேர்ந்து அண்ணனை அழிக்க துணிந்த தம்பிகளை; இறுதியில் கொடூரமாக கொல்லும் அண்ணன். இது போன்ற உளவியலை சிதைத்து; நுணுக்கமாக இயல்பியலை மாற்ற துடிக்கும் கோடூர காட்சிகளை காணும் உள்ளம்; எதை நோக்கி நகரும் என்பது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.இன்றைய சினிமாக்களை கவனமாக கையாள வேண்டியது காலத்தின் கட்டாயம். அது சமூக நீதி பேசும் இயக்குணர்களின் கடமை. கொடூரங்களை இலகுவாக்கிவிட்டு சமூக முன்னேற்றம் பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை!!வலசை பைசல்
திரைப்படங்கள் குறித்து உரையாடுவது அல்லது பார்ப்பது நேர விரயம் என்ற விசித்திர உலகில் வாழும் ஜந்துகளில் நானும் ஒருவன். ஆனால் அந்த திரைதுறை ஆதிக்கம் செலுத்தாத வாழ்வியல் நகர்வுகளே இல்லை எனும் அளவிற்கு இன்றைய களம் (காலம்) கட்டமைக்கப்பட்டுவிட்டது.
காட்சிப்படுத்தப்படும் உரையாடல்களும், உள்ள குமுறல்களும், உளவியல் தாக்கங்களும், கதா நாயகன்/நாயகி என்ற என்ன ஓட்டமும், காதல், காமம், வன்முறை, வெறியாட்டம், நல்லுபதேசம், பிரிவினைவாதம் என ஒரு மனிதனின் வாழ்வியலில் இன்றைய சினிமாக்கள் பின்னி பினைந்து விட்டதாகவே கருதுகின்றேன்.
இந்த உளவியல் கொண்ட சமூகத்தில் எதை காட்ச்சிப்படுத்துகின்றோம் என்பது மிக மிக அவசியம். ஒரு நான்கு சிறுவர்கள் சேர்ந்து ஒரு இளைஞனை எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் கொடும் ஆயுதம் கொண்டு தாக்குகின்றார்கள், அதை வீடியோவாக பதிவு செய்து கொள்கின்றார்கள், அதில் ஒருவன் மச்சான் அருவாளை தா! நான் வெட்டுகின்றேன் என்கிறான். பார்க்கவே மனம் கனக்கின்றது. இது போன்ற மனிதம் மறித்த மனப்போக்கு போதை பழக்கங்களால் மட்டும் வந்துவிடுவதில்லை. இது ஒரு தொடர் கட்டமைக்கப்பட்ட உளவியல் சிதைவு. எதை காண்கின்றானோ? அதுவாக மாற நினைக்கும் நிகழ்வு.
அதற்கு பல காரணங்கள் உண்டு! போதை பழக்கம், வயது, பெற்றோரின் வளர்ப்பு, சுற்றத்தின் சூழல், நண்பர்களின் மனோபாவம், வழி நடத்த நல்ல தலைமையின்மை, இன்னும் பல!.
இவை அனைத்தையும் காட்ச்சிப்படுத்தும் திரைதுறை ஜாம்பவான்கள் தங்கள் படைப்பை மிக நுணுக்கமாக கையாள வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றீர்கள். சமீபத்திய பெரும் வெற்றிபடங்கள் எல்லாம் வன்முறை கலாச்சாரத்தை ஊக்குவிப்பதோடு நின்றுவிடாமல், அதையும் தாண்டி குடும்ப உறவுகள் மீதான நம்பிக்கையை சிதைக்கும் விதமாக கதைகளம் அமைக்கப்ப்டுவது இது போன்ற வெறித்தனங்கள் அதிகரிக்க காரணங்களாக இருக்க கூடும்.
மாபெரும் கதாநாயகர்கள் நடித்த, பெரும் வெற்றி இயக்குணர்கள் இயக்கிய படங்களை கூர்ந்து கவணிக்கும் போது,
1. பணத்தாசையால் தந்தையை கொள்ள வில்லனுடன் சேர்ந்து சதி செய்யும் மகன். அதை அறிந்து மகனென்றும் பாராமல் மகனை கொல்லும் தந்தை.
2. மற்றொரு படத்தில் தந்தையை பழிவாங்க மகனை தயார்படுத்திய வில்லன். தன் தந்தை என்று அறிந்த பின்னும் பழிவாங்க துடிக்கும் மகன். இறுதியில் ஆரவார கொண்டாட்டத்துடன் மகனை கொல்லும் தந்தை.
3. தனது வாழ்க்கையை தனது தங்கை தம்பிகளுக்காக அர்பணித்த அண்ணன். இறுதியில் அண்ணனை கொல்ல துடிக்கும் இரண்டு தம்பிகள். தங்கை கற்பழிக்கட்டு கொடூரத்தை அனுபவித்தால் என்று தெரிந்தும் வில்லனுடன் சேர்ந்து அண்ணனை அழிக்க துணிந்த தம்பிகளை; இறுதியில் கொடூரமாக கொல்லும் அண்ணன்.
இது போன்ற உளவியலை சிதைத்து; நுணுக்கமாக இயல்பியலை மாற்ற துடிக்கும் கோடூர காட்சிகளை காணும் உள்ளம்; எதை நோக்கி நகரும் என்பது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
இன்றைய சினிமாக்களை கவனமாக கையாள வேண்டியது காலத்தின் கட்டாயம். அது சமூக நீதி பேசும் இயக்குணர்களின் கடமை. கொடூரங்களை இலகுவாக்கிவிட்டு சமூக முன்னேற்றம் பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை!!
வலசை பைசல்
Sunday, 4 January 2026
Tuesday, 23 December 2025
EPA டாக்டர் அகமது ஃபர்தான் ஜாபிர் ஹுசைனை கௌரவிக்கிறது*எமிரேட்ஸ் புதுவலசை சங்கம் (EPA), ஸ்வீடனின் கோதன்பர்க்கில் உள்ள சால்மர்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திலிருந்து *டாக்டர் ஆஃப் பிலாசபி (பிஎச்டி) இன் அட்டிவ் மேனுஃபேக்ச்சரிங் ஆஃப் சூப்பர் அலாய்ஸ்* பட்டத்தை வெற்றிகரமாக முடித்ததற்காக டாக்டர் அகமது ஃபர்தான் ஜாபிர் ஹுசைனுக்கு கௌரவச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசை வழங்கி பெருமையுடன் கௌரவித்தது.
EPA டாக்டர் அகமது ஃபர்தான் ஜாபிர் ஹுசைனை கௌரவிக்கிறது*
எமிரேட்ஸ் புதுவலசை சங்கம் (EPA), ஸ்வீடனின் கோதன்பர்க்கில் உள்ள சால்மர்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திலிருந்து *டாக்டர் ஆஃப் பிலாசபி (பிஎச்டி) இன் அட்டிவ் மேனுஃபேக்ச்சரிங் ஆஃப் சூப்பர் அலாய்ஸ்* பட்டத்தை வெற்றிகரமாக முடித்ததற்காக டாக்டர் அகமது ஃபர்தான் ஜாபிர் ஹுசைனுக்கு கௌரவச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசை வழங்கி பெருமையுடன் கௌரவித்தது.
EPA உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகக் குழு முன்னிலையில் துபாயில் பாராட்டு விழா நடைபெற்றது. *இந்த சந்தர்ப்பத்தில், டாக்டர் அகமது ஃபர்தான் தனது கல்விப் பயணம் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு ஒரு சுருக்கமான மற்றும் ஊக்கமளிக்கும் உரையை நிகழ்த்தினார்.* இந்த பெருமைமிக்க மைல்கல்லில் ஒரு பகுதியாக இருப்பதற்கும், கல்வியில் சிறந்து விளங்க அவர்களின் தொடர்ச்சியான ஊக்கத்திற்கும் அவரது குடும்பத்தினரைப் பாராட்டவும், பாராட்டவும் EPA வாய்ப்பைப் பெற்றது.
*அவரது வார்த்தைகளும் அனுபவங்களும் புதுவலசை மாணவர்கள் மற்றும் இளம் நிபுணர்களை வலுவாக ஊக்குவித்தன, உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் உலகளாவிய வாய்ப்புகளை கவனம் மற்றும் உறுதியுடன் தொடர அவர்களைத் தூண்டின.*
டாக்டர் அகமது ஃபர்தான் ஜாபிர் ஹுசைனுக்கு EPA தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது, மேலும் அவரது கல்வி மற்றும் தொழில்முறை முயற்சிகளில் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகிறது. அவரது சாதனை உலகளவில் புதுவலசை சமூகத்திற்கு மிகுந்த பெருமையைத் தருகிறது மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு உத்வேகமாக செயல்படுகிறது.
வாழ்த்துக்கள்
எமிரேட்ஸ் புதுவலசை சங்கம்
சஹாப் A k
Subscribe to:
Comments (Atom)