அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday 18 November 2019

ராமநாதபுரம் மாவட்ட அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் நமது #அரபி ஒலியுல்லா உயர்நிலை #பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.


ராமநாதபுரம் மாவட்ட அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் நமது #அரபி ஒலியுல்லா உயர்நிலை #பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.
இதில் நமது பள்ளி மாணவர்கள்
நபர்கள் முதல் இடமும்
7 நபர்கள் இரண்டாம் இடமும்
3 #நபர்கள் மூன்றாம் இடமும் வெற்றி பெற்றுள்ளனர்.
#ராமநாதபுரம் மாவட்டத்தின்
ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை நமது பள்ளி மாணவர்கள் பெற்று மேலும் பள்ளிக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை புதுவலசை ஊர் பொதுமக்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.


sahab appakutty pvs

puduvalasai photos

A.o.high school puduvalasai won 8 first place 7sec place 3 third place in District level swimming cmptition

Wednesday 13 November 2019

*அல்மத்ரஸதுல் தாருல் இஹ்ஸான் - புதுவலசை** கடந்த 09. 11. 2019 முதல் தினம் ஒரு மாணவன் காலை 06.30 மணிக்கு ஒரு ஹதீஸ் சொல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்ஷாஅல்லாஹ் நமது மதரஸா மாணவர்களின் வருகையை அதிகரிக்கும் பொருட்டு நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களின் வருகையை பதிவிட்டு தவறாமல் காலையும் மாலையும் வரும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்கட்கு சிறிய பரிசளிக்க முடிவு செய்துள்ளோம். குர்ஆன் ஓதும் மாணவ மாணவிகளுக்கு இடையே மாதம் ஒருமுறை சிறிய அளவிலான கேள்வி பதில் போட்டி நடத்தி அதற்கும் பரிசுகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம். இப்படிக்கு முஸ்லிம் தர்ம பரிபாலன சபை - புதுவலசை

Friday 8 November 2019

ஏழ்மையின் பிடியில் சிக்கி பல

ஏழ்மையின் பிடியில் சிக்கி பல இஸ்லாமிய ஆண்கள், பெண்களின் வாழ்க்கை சிதைந்து போயுள்ளது.

காலையில் எனது தொலைபேசிக்கு கல்லூரி பேராசிரியரிடம் இருந்து அழைப்பு வந்தது. அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு இரத்த போக்கின் காரணமாக அவசரமாக இரத்தம் தேவைப்படுகிறது. இரண்டு நாள் முயற்ச்சி செய்கிறார்கள் இன்னும் கிடைக்கவில்லை. அப்பெண்ணின் தகப்பனார் பதற்றம் அடைகிறார். சற்று முடிந்தால் நேரில் சென்று அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, அவருக்கு தேவையான இரத்த வகையை ஏற்பாடு செய்து கொடுக்குமாறு கூறினார்.

நான் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறினேன். மருத்துவமனையில் இரத்தம் கொடுக்காவிட்டால் மதுரை அரசு மருத்துவமனைக்கு கூட்டி செல்லுங்கள் என மருத்துவர்கள் பயமுறுத்துவதாக கவலைப்பட்டார். நான் நேரில் மருத்துவரை சந்தித்து விசாரித்தேன். இன்று இரத்தம் கொடுங்கள் நாளை ஏற்றிவிடலாம் என்று கூறினார்.

மீண்டும் அந்த பெண்ணின் தக்கப்பனாரிடம் சென்று மருத்துவரிடம் பேசிவிட்டேன் அச்சப்பட தேவையில்லை. நான் ஒரு மணி நேரத்தில் இரத்தம் ஏற்பாடு செய்து கொடுக்கிறேன் என கூறிவிட்டு அந்த முதியவரிடம் உங்கள் மகளின் கணவர் எங்கு இருக்கிறார் என கேட்டேன். நான் கேட்டதும் அந்த பெரியவருக்கு கண்கள் குலமாகின. அவரை சமாதானப்படுத்தி அழுகையை நிறுத்த சொல்லி எதற்காக அழுகிறீர்கள் என விசாரித்தேன்.

ஏழ்மையின் காரணமாக என் மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மூத்த மகளுக்கு 33 வயதும், இரண்டாவது மகளுக்கு 30 வயதும் ஆகிவிட்டது. ஆனால் திருமணம் முடித்து கொடுக்கும் சக்தி என்னிடம் இல்லை என புலம்ப ஆரம்பித்தார். மகனுக்கும் திருமணம் வயது கடந்து விட்டது. அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என கூறினார்.

நீங்கள் எந்த ஊர் ஐயா, என கேட்டேன். அவர் கூறிய ஊர் இஸ்லாமிய கிராமம். உங்கள் ஊரில் ஜமாத்தோ அல்லது வேறு யாரும் உங்களுக்கு உதவி செய்யவில்லையா என்றேன். ஜமாத் என்னிடம் மகளுக்கு சீக்கிரம் மாப்பிளை பாருப்பா என்று சொல்வதுடன் சரி. ஆனால் எனக்கோ திருமணம் செய்து வைக்கும் சக்தி இல்லை. என் ஏழ்மையை வைத்து ஒன்னு மில்லாதவனிடம் சம்பந்தம் வைத்து என்ன புண்ணியம் என நான் போகும் இடமெல்லாம் மாப்பிள்ளை தர மறுக்கிறார்கள். வேறு யாரும் இந்த முயற்சி எடுக்கவில்லை. யாரும் மனமுவந்து திருமணம் முடிக்கவும் வரவில்லை. நான் என்ன செய்வது என மீண்டும் அழுதார்.

அதற்கு மேல் அவரிடம் பேசும் அளவிற்கு சக்தி என்னிடம் இல்லை. அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான். கவலைப்படாதீர்கள் என கூறிவிட்டு வந்துவிட்டேன்.

ஏழைகளுக்கு உதவும் மார்க்கத்தில், வரதட்சணை ஒழிக்கின்ற மார்க்கத்தில், ஏற்ற தாழ்வு ஒழிக்கும் மார்க்கத்தில் இப்படியொரு முஸ்லிம் குடும்பம் வசிப்பது ஆச்சரியம் அல்லவா.? அதுவும் முஸ்லிம் கிராமம்.

மார்க்கம் எந்த கண்ணியமும் இழக்கவில்லை. அன்று எந்த அழகிய தத்துவத்தை இஸ்லாம் முன் வைத்ததோ, அதே தத்துவத்தை தான் தற்போதும் முன் வைக்கிறது.

ஆனால் இன்று அந்த மார்க்கத்தை பின்பற்றும் முஸ்லிம்களிடம் குறைபாடுகள் ஏற்பட்டுவிட்டது. ஒரு பெண்ணை அவளின் மார்க்கத்தை பார்த்து திருமணம் செய்யுங்கள் என வலியுறுத்தியது இஸ்லாம்.

ஆனால் இன்று குடும்ப அந்தஸ்தில் நமக்கு சரிசமமாக அல்லது கூடுதலாக இருக்க வேண்டும்.

பணத்தில் நமக்கு சரிசமமாக அல்லது கூடுதலாக இருக்க வேண்டும்.

இது வசதிபெற்றவர்கள், வசதி இல்லாதவர்கள் என அனைவரும் பின்பற்றும் ஒரு நடைமுறையாக மாறிவிட்டது. ஏழ்மையின் அடிமட்டத்தில் வாழும் முஸ்லிம்கள் பிள்ளையை கட்டிக்கொடுக்க ஒன்று பள்ளிவாசல் பள்ளிவாசலாக சென்று கரம் ஏந்த வேண்டும். இல்லை திருமணமே செய்யாமல் தியாகம் செய்ய வேண்டும் என்ற சூழல் மட்டுமே தற்போது உள்ளது. முன்பிருந்த அளவிற்கு தற்போது இல்லையென்றாலும் இன்னும் இதனால் பாதிக்கப்படுபவர்கள் சமூகத்தில் உள்ளனர் என்பது நிதர்சனம்.

அல்லாஹ் நீயே போதுமானவன்...

Agm BASEER thankas

முயற்சி எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Asalamuaalaikum wbrWe would like to invite all our Indian Muslim brotherhood to join force in the march of Maulid Rasul to commemorate Birthday of our beloved Prophet Muhammad S.A.W. *Date: Saturday, 12 Rabiul Awwal 1441 Hijrah, 9 November 2019 (Tomorrow) After Zohor (at 2PM), the march will start from Masjid India KL*. All members in Klng Valey and neighboring states, please come join the march to show your love for our beloved Rasulullah S.A.W.*The Perarakan will be officiated by YB TUAN KHALID BIN ABD SAMAD - Menteri Wilayah Persekutuan and accompanied by Pengarah - JAWI (Jabatan Agama Islam Wilayah Persekutuan) Tuan Haji Mohd Ajib Bin Ismail**Please take note that as YB will be joining us, the Perarakan will start at 2.00PM*

Thursday 7 November 2019

Kunjungan Hormat Ustaz Abdulkarim Almakki Imam Masjid Sultan Salahuddin Abdul Aziz Shah Ke Mahaad Tahfiz Al Faridiyah

அஸ்ஸலாமு அலைக்கும்.பொருள் : புதுவலசை ஊராட்சி குப்பை எடுப்பது சம்பந்தமாக. நமது ஊராட்சிகுட்பட்ட பகுதியில் குப்பை அகற்ற அரசு 7 பேருக்கு ₹2600 வீதம் கடந்த வருடத்தில் இருந்து நிதி கொடுத்து வருகிறது, மேற்படி விபரம் கடந்த வருடத்தில் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டதால் தெரிய வந்தது. மேற்படி துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் நேரடியாக அவர்களது வங்கி கணக்கிற்கு சென்று விடுகிறது, பணிக்கு வராத நாட்களுக்கு சம்பள பிடித்தம் செய்யாததினால் அவர்கள் சரிவர வேலைக்கு வருவது கிடையாது. ஊராட்சி மன்றத்திற்கு குப்பை அகற்ற அனைத்து உபகரணங்கள் உள்ளன. இதில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டியது ஊராட்சி மன்றம்தான். அதாவது அடிப்படை வசதி அனைத்தும் அவர்கள் பொறுப்புதான். நமதூரில் உள்ள மக்கள் அனைவரும் ஊராட்சி மன்றத்தின் பொறுப்பை அவர்களுக்கு உணர்த்தி நாமும் நமக்கு எத்தகைய பொறுப்பு என்று உண்டு என்று கூட்டாக செயல்பட்டால் நல்ல தீர்வு கிடைக்கும். அன்புடன், முஹம்மது பசுலுதீன்

மாவட்ட கல்வி அலுவலரிடம் இன்று நம் பள்ளி மாணவிகள் பரிசு பெற்ற னர்