அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday 26 May 2023

என் அன்பு மகள் நிக்காஹ் திருமண அழைப்பிதழ்

♥உன் உணர்சியை அடக்கிவிட்டுஎன் உணர்வுகளை எழுப்பிவிட்டுஇரு நிமிடங்களில் நீ உறங்க சென்றுவிடுவாய்♥நடுநிசியில் நரம் தின்னும் காட்டேரி போல் என் காமம் எனை தின்று பேயட்டம் ஆடுதடாபிள்ளை பெற்றதால் நான் என்ன பிணமாகவாக மாறினேன்??♥உணர்சிகளின்றி என் உள்ளத்தையும் உடலையும் உறங்க வைக்க???♥கல்யாணம் முடித்து காலங்கள் கடந்ததால் என் கட்டுடல் என்ன கல்லாகவா போய்விட்டது ??என் காமம் என்ன காணமலா போய்விட்டது ??♥பிள்ளை கொடுத்தால்ஆணமகனென்ற அங்கிகாரம் கிடைத்ததாக எண்ணி கொள்ளும்எனையறியா என்னவனேஎப்போது நான் எனை மறந்துஉனை மறந்து உலகை மறந்துஉச்சத்தில் மயங்கி கிறங்கிஉறங்கி போகிறேனோ அப்போதுதான் நீ ஆண்மகன்..♥பத்தினியை பட்டினியாக்கிபக்கத்து வீட்டில் பல் இளித்து பேசிபடி தாண்ட வைக்க முயற்சி செய்வதில் பகல்வேசம் ஏனடாஅவளிடம் மட்டும் என்ன அற்புதமா புரியப் போகிறாய்♥எனக்களித்த அரைகுறை காமம்அதை தவிர வேறென்ன அறிவாய்காமத்தில் ஐம்புலனும் ஆத்மாவுடன் சங்கமிக்க வேண்டுமடா கண்டுகேட்டு உண்டு இட்டு நுகர்ந்துஆத்மாவில் சங்கமிக்கும் காமத்தின் புனிதம் சடங்காக எனை புணரும் உனக்கெங்கே புரியும்..??♥கண நேரம் எனை மறக்கஇணையத்தில் வளம் வந்தால்நாய்களும் நரிகளும் எனை தின்னநல்லவன் போல் நயவஞ்சகமாய் பேசுதடா..♥என்னிடம் இருந்து என்னை காக்கநான் படும்பாடு நான் மட்டுமே அறிவேன்.. சற்று மனம் தடுமாறினாலும் வேசியென பெயர் வைக்க யாருக்கும் தயக்கமில்லை இங்கு ♥காரணமறிந்து காதலுடன்நிறைவான காமம் தந்தால்மன்மதனே நேரில் வந்தாலும் மங்கையர்கள் மனமிறங்க மாட்டார்கள்♥இனியாவது எனை புரிவாயா??இனிக்கும் இன்பம் தருவாயா??மங்கைக்கும் மனதிருக்கு உணர்வாயா ?? மயங்க வைக்கும் படி புணர்வாயா??♥♥♥வேறு பெண்களுடன் உறவை வைத்து கட்டிய மனைவியை ஏங்க வைக்கும் துரோக ஆண்களினால் பாதிக்கப்படும் பல பெண்களின் ஏக்கங்கள் தான் இது ..♥இந்தக் கருத்துக்களில் தவறு ஏதேனும் இருந்தால் மன்னிக்கவும்உலகத்தமிழ் மங்கையர் மலர்பிரான்ஸ் 🇨🇵

Friday 19 May 2023

என்னை தனிமைப் படுத்திக்கொள்ளநான் தயங்குவதே இல்லை. ஏனெனில் அங்கு எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் மற்றும் அதனால் ஏற்படும் அவதிகளென‌ எதுவுமில்லை.சுருக்கமாய்ச் சொன்னால் ஆறாம் அறிவுக்கு அங்கு வேலையில்லை.

எத்தனைவசதிகளோடுவசிக்கிறோம்என்பதல்ல..என்ன கிடைத்தாலும்அதைஎவ்வளவு ரசித்துஅனுபவித்துவாழ்கிறோம்என்பதில்ஒளிந்திருக்கிறதுநமக்கான வாழ்க்கை....#வாழ்க்கை_வாழ்வதற்கே

கடந்த மாதங்களில் பல நிகழ்வுகளில் பங்குகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.தனித்தனியாக பகிர வேண்டும் என்று நினைத்தேன், முடியவில்லை.ஆதலால் ஒரே பதிவாக அனைத்தையும் பகிர்ந்து கடமையை முடித்து கொள்கின்றேன்!! நன்றிகள்

நமதூர் அரபி ஒலியுல்லாஹ் பள்ளிகளின் SSLC தேர்வில் வெற்றி பெற்ற, நன்மதிப்பெண்கள் பெற்று பள்ளிகளுக்கும், ஊருக்கும் பெருமை தேடித்தந்த மாணவ, மாணவிகளுக்கு எனது வாழ்த்துக்களும், பாராட்டுகளும். 💐💐💐💐💐💐💐💐

நமதூர் அரபி ஒலியுல்லாஹ் பள்ளிகளின் SSLC தேர்வில் வெற்றி பெற்ற, நன்மதிப்பெண்கள் பெற்று பள்ளிகளுக்கும், ஊருக்கும் பெருமை தேடித்தந்த மாணவ, மாணவிகளுக்கு எனது வாழ்த்துக்களும், பாராட்டுகளும். 💐💐💐💐💐💐💐💐

முதல் இடம் 
*எஸ்தர் பேபி - 476 மதிப்பெண்கள்*

இரண்டாம் இடம்
*ஜோஸ்னி லட்சுமி - 474 மதிப்பெண்கள்*

மூன்றாம் இடம் 
*3. பிரதீபா - 463 மதிப்பெண்கள்*

மேலும் *15* மாணவ, மாணவிகள் *400* மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சிறப்பு சேர்த்துள்ளனர்.

இச்சிறந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரிய பெருமக்கள், ஜமாஅத்தார்கள் மற்றும் சங்கத்தார்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

அடுத்த கல்வியாண்டில் நமதூர் அரபி ஒலியுல்லாஹ் பள்ளி; கல்வியில் மென்மேலும் சிறந்து விளங்கும் வண்ணம் அதன் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் நம் ஒவ்வொருவரும் உறுதுணையாக இருப்போம். இன்ஷா அல்லாஹ்....

Tuesday 9 May 2023

#கேரளா_தானூர்_படகு_விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்தனர்...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...ஒரு குடும்பத்தில் 11 பேர் அவர்கள் ஒரு குடும்பம் போல ஒன்றாகவே பயணம் செய்தனர் இன்று அவர்களின் இறுதி உறக்கமும் ஒன்றாகவே நடந்தது...ஒன்றாக விளையாடிய, வீடுகளில் ஒன்றாக உறங்கிய அந்த பிஞ்சு குழந்தைகள் வெள்ளை கஃபன் துணியால் மூடப்பட்டு கடைசி பயணமும் ஒன்றாகவே நடந்தது...வீட்டு முற்றத்தில் ஒன்றாக விளையாடிய குழந்தைகளை இனி வல்ல இறைவன் சொர்க்க முற்றத்தில் ஒன்று சேர்க்கட்டும்...யாஅல்லாஹ் இவர்களுடைய பாவங்களை மன்னிப்பாயாக...இவர்களை நீ பொருந்திக் கொள்வானாக...இவர்களுக்கு அருளும் செய்வாயாக...இவர்களுக்கு சுகத்தையும் நல்குவாயாக...இவர்களை மன்னித்து விடுவாயாக...இவர்களுடன் சேர்த்து எங்களையும் நீ மன்னிப்பாயாக...இவர்களுடைய தங்குதலைமிக கண்ணியப்படுத்துவாயாக...இவர்களுடைய நுழைவிடத்தை விஸ்த்தீரணமாக்கித் தருவாயாக...இவர்களுடைய வீட்டை விட மிகச் சிறந்ததான ஒரு வீட்டைஇவருக்கு நீ வழங்குவாயாக...இவர்களுடைய குடும்பத்தை விட மிகச் சிறந்த குடும்பத்தினரைஇவர்களுக்கு நீ மாற்றித் தருவாயாக... இன்னும் இவர்களை மண்ணறை வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக...நரக வேதனையிலிருந்தும் இவர்களை நீ காத்தருள்வாயாக...இவர்களை நீ சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வாயாக...சொர்க்கத்திலும் உயர்ந்த சொர்க்கமான ஜன்னத் - துல் - ஃபிர்தெளஸ் எனும் சொர்க்கத்தை இவர்களுக்கு நீ வழங்குவானாக...இவர்களை பிரிந்து வாடும் இவரின் அன்பு குடும்பத்தார்களுக்கும்,அருமை நன்பர்களுக்கும், உற்றார், உறவினர்களுக்கும், மிக அழகிய பொறுமையை நீ தந்தருள்வாயாக...இன்னா லில்லாஹி மா அகதவலஹு மா அஃதா வகுல்லு ஷையின் இன்தஹு பி அஜலின் முஸம்மன் ஃபல் தஸ்தபிர்வல் தஹ்தஸிப்...பொருள் : எதை அல்லாஹ் எடுத்தானோ அதுவும்எதை அல்லாஹ் கொடுத்தானோ அதுவும்அல்லாஹ்வுக்கே சொந்தம்...ஒவ்வொரு பொருளும் அல்லாஹ்விடத்தில் ஒரு குறிப்பிட்ட தவணையுடன் உள்ளது...எனவே நீங்கள் பொறுமையை மேற் கொண்டு அதற்கான நற்கூலியை மறுமையில் அல்லாஹ்விடம் எதிர் பார்த்திருப்பீர்களாக...அல்லாஹ்விற்காக பொறுமையை கை கொள்ளுங்கள்...“வல் ஹலக்கல் மெளத்த,வல் ஹயாத்த” முஸ்லீம்களின் உண்மையான வாழ்க்கை மரணத்துக்குப் பின்னர் தான் தொடங்குகிறது...அந்த வாழ்வில் அவர்களை அல்லாஹ் சிறப்பாக்கி வைப்பானாக...ஆமீன்...ஆமீன்...யாரப்பல் ஆலமீன்...

Thursday 4 May 2023

வெளிநாட்டில் அப்பாவின் கடின உழைப்பும் தாய்நாட்டில் மகன்களின் தற்பெருமையும்

மனைவிக்கு சில உபதேசங்கள்

மனைவிக்கு சில உபதேசங்கள்....

1. நீங்கள் தான் உங்கள் வீட்டின் வாசனை. உங்கள் கணவன் வீட்டினுள் நுழைந்தது முதல் அந்த வாசனையை உணரச் செய்யுங்கள்.

2. கணவன் ஓய்வெடுக்கக்கூடிய இடங்களை தயார் செய்து வையுங்கள். எப்போதும் அழகிய தோற்றத்தில் சுறுசுறுப்பானவராக செயற்படுங்கள்.

3. கணவனுடனான தொடர்ச்சியான உரையாடலை, கலந்துரையாடலை பேணிக் கொள்ளுங்கள். வாதாட்டம், தனது கருத்தில் பிடிவாதம் என்பவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.

4. உங்களுக்கு ஷரீஆ விதித்துள்ள பொறுப்புக்களை விளங்கிக் கொள்ளுங்கள். பெண்களுக்கு இயல்பாக இருக்க வேண்டிய விடயங்களை ஷரீஆ உங்களுக்கு வழங்கியுள்ளது.

5. உங்கள் சத்தத்தை உயர்த்தாதீர்கள். குறிப்பாக கணவன் இருக்கும் போது.

6. நீங்கள் இருவரும் கியாமுல் லைல் போன்ற தொழுகைகளை ஒன்றாக நிறைவேற்றுவதில் கவனமாக இருங்கள். ஏனெனில் அது உங்கள் இருவருக்கும் சந்தோஷத்தையும் அன்பையும் ஒளியையும் ஏற்படுத்துகின்றது.

7. கணவன் கோபத்திலிருக்கும் போது நீங்கள் அமைதியாக இருங்கள். கணவனின் திருப்தியின்றி இரவில் உறங்கச் செல்ல வேண்டாம். ஏனெனில் உங்கள் கணவன் தான் உங்களுக்கு சொர்க்கமும் நரகமும்.

8. கணவன் ஆடைகளை தெரிவு செய்வதில் உதவி செய்யுங்கள். அவருக்கு பொருத்தமான ஆடைகளை தெரிவு செய்து வழங்குங்கள்.

9. கணவனின் தேவைகளை விளங்கிக் கொள்வதற்கும் அவருடன் அழகிய முறையில் பழகுவதற்கும் நேரத்தை ஒதுக்குங்கள்.

10. உங்களுடைய தோற்றத்திலும் உடையிலும் கவனம் செலுத்துங்கள்.

11. உங்களுடைய கணவன் தனது அன்பை, விருப்பத்தை வெளிப்படுத்தும் வரை காத்துக் கொண்டிருக்காதீர்கள்.

12. ஒவ்வொரு இரவிலும் கணவனுக்கு புதுமணப் பெண்ணைப் போல தயாராகி தோற்றமளியுங்கள். கணவனை முந்தி நீங்கள் உறங்கச் செல்ல வேண்டாம்.

13. கணவன் அழகிய முறையில் உங்களை எதிர் கொள்வார் என எதிர்பார்க்க வேண்டாம். ஏனெனில் அவர் பல வேலைப்பளுக்களில் ஈடுபட்டவராக இருப்பார்.

14. எப்போதும் புன்னகையுடனும் அன்பை வெளிப்படுத்தும் உணர்வுகளுடனும் கணவன் பயணத்திலிருந்து திரும்பும் போது வரவேற்பளியுங்கள்.

15. கணவனின் திருப்தி அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுவதற்கு முக்கியமானது என்பதை எப்போதும் ஞாபகத்தில் கொள்ளுங்கள். எப்போதும் தோற்றத்திலும் வார்த்தையிலும் அவரை வரவேற்கும் போது புதிய விடயங்களை செய்யுங்கள்.

16. ஏதாவதொரு விடயத்தை கணவன் கேட்கும் போது மறுக்கவோ அல்லது தாமதிக்கவோ வேண்டாம். மாற்றமாக உற்சாகத்துடன் விரைவாக அதனை நிறைவேற்றுங்கள்.

17. வீட்டுத் தளபாடங்களை கணவன் பயணத்திலிருந்து திரும்பும் போது புதிய முறையில் ஒழுங்குபடுத்துங்கள். அதனை கணவனின் மகிழ்ச்சிக்காகவே செய்கின்றீர்கள் என்பதை உணர்த்துங்கள்.

18. வீட்டை அழகிய முறையில் நிருவகிப்பதற்கும் நேரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் முதன்மைப்படுத்த வேண்டிய விடயங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

19. பெண்களுக்கு இயல்பாக இருக்க வேண்டிய திறமைகளை திறன்பட கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் அவை உங்களுடைய வீட்டிற்கும் உங்களது தஃவாவிற்கும் அவசியமானவையாகும்.

20. கணவன் வீட்டுக்கு கொண்டு வரும் எந்தவொரு பொருளாக இருந்தாலும் அவற்றை இன்முகத்தோடு பெற்றுக் கொள்ளுங்கள். அதற்காக நன்றி செலுத்துங்கள்.

21. வீட்டை சுத்தமாக வைப்பதிலும் ஒழுங்காக வைப்பதிலும் பேணுதலாக இருங்கள். சிலவேளை கணவன் அதனை உங்களிடம் எதிர்பார்க்காத போதும் கூட.

22. எப்போதும் திருப்திப்படுபவளாக இருங்கள். வீண் விரயங்களை விட்டும் தவிர்ந்திடுங்கள். மேலதிக செலவுகளை ஏற்படுத்தாதீர்கள்.

23. குடும்ப ஒன்று கூடல்களை பொருத்தமான நேரத்தில் ஏற்பாடு செய்யுங்கள்.

24. கணவன் நீண்டதொரு இடைவெளியின் பின்னர் வீட்டுக்கு வரும் போது அவரிடம் முறைப்பாடுகளை வேதனைகளை முன்வைக்காதீர்கள்.

25. குழந்தைகள் கணவனை வரவேற்கும் வகையில் தயார்படுத்தி வையுங்கள்.

26. குழந்தைகளைப் பற்றி கணவன் வீடு திரும்பியவுடன் அல்லது தூங்கியெழுந்தவுடன் அல்லது உணவு சாப்பிடும்போது முறையிடாதீர்கள்.

27. கணவன் குழந்தைகளுடன் உரையாடும் போது அல்லது ஏதாவதொரு விடயத்திற்காக அவர்களை தண்டிக்கும் போது நீங்கள் தலையிடவேண்டாம்.

28. குழந்தைகளுக்கும் தந்தைக்குமிடையில் சிறந்த தொடர்பை பேணிக் கொள்வதில் கவனம் செலுத்துங்கள்.

29. நீங்கள் எவ்வளவு தான் வேலைப்பளுவுடன் இருந்தாலும் குழந்தைகளை பராமரிப்பதில் பொடுபோக்காக இருப்பதில்லை என்பதை உணரச் செய்யுங்கள்.

30. குழந்தைகளுக்கு ஓய்வு கிடைக்கும் போது அவர்களது திறமைகளை வளர்ப்பதிலும் அவர்களுக்கு பிரயோசனமான விடயங்களை கற்றுக் கொடுப்பதிலும் கவனம் செலுத்துங்கள்.

31. உங்களுடைய பெண் குழந்தைகளுக்கு சிறந்த தோழிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவர்களது ஒவ்வொரு பருவத்திலும் ஏற்பட்டு வரும் மாற்றங்களை அவதானியுங்கள்.

32. சிறு குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு தேவையான விடயங்களை செய்யுங்கள்.

33. குழந்தைகள் மீதும் கணவன் மீதும் உள்ள உங்கள் கடமைகளுக்கிடையில்
நடுநிலைமையைப் பேணுங்கள்.

34. கணவனின் பெற்றோருக்கு கண்ணியம் செலுத்துங்கள். அவரையும் அவரது பெற்றோரையும் பிரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடாதீர்கள். அவரது பெற்றோர்களுக்கு பெறுமதியான பரிசுகளை வழங்குங்கள்.

35. கணவனின் குடும்பத்தினரை அன்புடனும் கண்ணியத்துடனும் நடத்துங்கள். அவர்களுக்கு பொருத்தமான சந்தர்ப்பங்களில் பரிசுப் பொருட்களை வழங்குங்கள்.

36. கணவனின் விருந்தினர்களை கவனிப்பதில் அக்கறை செலுத்துங்கள். திடீரென்று அவர்கள் வந்தாலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்யுங்கள்.

37. கணவனின் உபகரணங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

38. எப்போதும் எந்தவொரு விருந்தாளியையும் அழைத்து வரும் நிலையில் வீட்டை வைத்துக் கொள்ளுங்கள்.

39. கணவன் தாமதமாக வரும் போது அவரை கண்டித்துக் கொள்ளாதீர்கள். மாற்றமாக அவரை எதிர்பார்த்திருந்ததை உணரச் செய்யுங்கள்.

40. வீட்டு ரகசியங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். இவை ஒரு மனைவி கவனத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்கள் மட்டுமே. ஆனால் மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விடயம் இருக்கின்றது. எப்போதும் நாம் அல்லாஹ்வின் திருப்தியின் பால் தேவையுடையவர்களாக இருக்கின்றோம். அதனை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

Tuesday 2 May 2023

ஒரு மனிதன் மிருகக்காட்சிசாலை ஒன்றை நிறுவி நுழைவுக் கட்டணமாக 300 ரூபாய் என அறிவிப்பு செய்தார்; ஆனால் யாரும் அங்கு செல்லவில்லை. ஆகவே அவர் அதை 200 ரூபாயாக குறைத்தார், ஆனால் இன்னும் யாரும் வரவில்லை. மேலும் அந்த கட்டணத்தை 10 ரூபாயாக குறைத்து பார்த்தார்; அதற்கும் மக்கள் வரவில்லை. இறுதியாக, இலவச நுழைவு என மாற்றினார், உடனே, மிருகக்காட்சிசாலை மக்களால் நிரம்பியது. பின்னர் மிருகக்காட்சிசாலையின் வாயிலை மெதுவாக பூட்டி விட்டு சிங்கங்களை அவைகளின் கூட்டினில் இருந்து விடுவித்து மிருகக்காட்சிசாலை வளாகத்தினுள் உலவ விட்டார். இப்போது வெளியேறும் கட்டணமாக 500 ரூபாய் என அறிவித்ததார்;அனைவரும் எதுவும் யோசிக்காமல் அக் கட்டணத்தை செலுத்தி வெளியே செல்ல முன்டியடித்ததனர்! கதையின் சுருக்கம் : வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொள்ளும், ​​மலிவான அல்லது இலவச சலுகைகள் குறித்து ஜாக்கிரதையாக இருங்கள். எந்த ஒரு வியாபாரமும் இலவசம் இல்லை!(படித்ததில் பிடித்தது)