அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday 18 October 2014

சிறையில் இருந்து வெளியேறினார் ஜெயலலிதா..!


[ சனிக்கிழமை, 18 ஒக்ரோபர், 2014, ]
சிறையில் இருந்து வெளியேறினார
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலடைக்கப்பட்ட ஜெ., இன்று ஜாமினில் விடுதலை ஆனார். கோர்ட் உத்தரவு அளித்தபின்னர் அவர் முறைப்படி பரப்பர அக்ரஹார சிறையில இருந்து மதியம் 3 மணி 16 நிமிட நேரத்தில் வெளியேறினார்.
இவர் சிறை வளாகத்தில இருந்து கார் மூலம் 15 கி.மீட்டர் தொலைவில் உள்ள எச்.ஏ.எல்., விமான நிலையத்திற்கு செல்கிறார். இங்கு தயாராக நிறுத்தப்பட்டிருக்கும் தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.
ஜெ., சசிகலா, மற்றும் இளவரசி, ஒரே காரில் வந்தனர். இவர்களை படமெடுக்க பல்வேறு பத்திரிகையாளர்கள் ஜெயில் வளாகத்தில் காமிராக்களுடன் காந்திருந்தனர். 
ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றதும் சனிக்கிழமை, ஜாமினில் வெளியே வந்ததும் சனிக்கிழமை ஆகும். கடந்த செப்டம்பர் மாதம் 27 ம் திகதி ( சனிக்கிழமை ) சிறப்பு கோர்ட் ஜெ., உள்ளிட்ட 4 பேருக்கு சிறைத்தண்டனை அறிவித்தது. 

Thursday 16 October 2014

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது, பி.எஸ்.எல்.வி.-சி26 ராக்கெட்!

PSLV

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1சி நேவிகேஷன் செயற்கைக்கோளை, பி.எஸ்.எல்.வி.-சி26 ராக்கெட் இன்று அதிகாலை 1.32 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

நேற்று நீலாங்கரையில் தமிமுன் அன்சாரி, இன்று எஸ்.பி.பட்டினத்தில் செய்யது முகம்மது



இராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு அருகில் உள்ள எஸ்.பி.பட்டினத்தில் நேற்று மாலை காவல்துறை துணை ஆய்வாளர் காளிதாஸ் என்பவரால் செய்யது முகம்மது என்ற சகோதரர் மூன்று தடவை துப்பாக்கியால் சுடப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ளார். வழமைப்போல் காவல்துறை, சினிமா பாணியில் தன்னுடைய உடலில் தானே கீறல்களை ஏற்படுத்திக் கொண்டு, செய்யது முகம்மது தாக்கியதால் தான் சுடநேர்ந்தது என்று காவல்துறை மழுப்பிக் கொண்டிருந்தது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசை : நிறைவேற்றிய பொலிஸார்...!


[ வியாழக்கிழமை, 16 ஒக்ரோபர், 2014, ]
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசை இருக்கும்.
நான் கலெக்டராவேன்... டாக்டராவேன்... என்ஜினீயர் ஆவேன்... என்று சிறு வயதிலேயே குழந்தைகள் மனதில் வளர்ந்து கொள்ளும் ஆசைக்கு ஏற்ப பெரியவனாக வளர்ந்து சாதிக்கிறார்கள்...
அப்படித்தான்  போலீஸ் கமிஷனராகி சாதிக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால் விதி...?
தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு ஏழை ஆட்டோ டிரைவரின் மூத்த மகன் சாதிக். 4–ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன்.

ராமநாதபுரம் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் நீதிபதி நேரில் விசாரித்தார்!


நேற்று முன்தினம் விசாரணைக்கு என்று ராமநாதபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட சையது முகமது, காவல்துறை உதவி ஆய்வாளரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்விவகாரத்தை மாவட்ட நீதிமன்ற நீதிபதி நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளார்.

Monday 13 October 2014

காதுக்குள் இருந்த 3 அங்குல பூச்சி: எப்படி வெளியே எடுக்கிறார்கள் லைவ் வீடியோ இணைப்பு !

[ Oct 13, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 15695 ]
காதின் அருகில் சிறியதொரு எறும்பு சென்றாலே காது திண்டாடி கிச்சுகிச்சு வரும். அப்படியிருக்கையில் 3 அங்குல பூச்சியொன்று காதினுள் இருந்தால் என்னவாகும்? கடுமையான காது அரிப்பு என்று கூறி வைத்தியர்களிடம் சிகிச்சைக்காக சென்ற பேராசியர் ஒருவரின் காதிலிருந்து, 3 அங்குல நீளமுடைய பூச்சியொன்று அகற்றப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதோ வீடியோ இணைப்பு !



athirvu thanks

Sunday 12 October 2014

எடை குறையச்செய்யும் உணவு!?


எடைக்குறைப்பு இன்று பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. எடைக்குறைப்புக்கு கைக்கொடுக்கும் வீட்டு மருத்துவத்தில் எடை குறையச்செய்யும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது. உங்கள் சமையலறை பொருட்களை பயனபடுத்தியே எடையைக் குறைக்கச் செய்யலாம்

அலர்ஜியை தடுக்க மீன் சாப்பிடுங்கள்!


ஒரு வயதிற்குள் மீன் சாப்பிடும் குழந்தைகள் பிற்காலத்தில் அலர்ஜி  நோய்களுக்கு ஆளாகமாட்டார்கள் என்பது விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பாக உள்ளது.

இஸ்லாம் வலியுறுத்தும் ஆரோக்கியம்

Boys-prepare-food-at-a-Pa-008
O.M.காஜா முஹைதீன் ரப்பானி
அளவோடு உண்ணுவோம்
ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் நாம் அதிகம் பேண வேண்டியது நமது வயிற்றைத்தான். நாம் சாப்பிடக்கூடிய உணவுகளும், அருந்தக்கூடிய பானங்களும் வயிற்றினுள் சென்று அதை செரிமானமாக்கி நமது உடலுக்குத் தேவையான சக்திகளை பெறக்கூடிய வேலைகளைச் செய்வது நமது

இவைகளை சாப்பிட்டா.. புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம்


இதெல்லாம் சாப்பிட்டா ‘புரோஸ்டேட் புற்றுநோய்’ வருவதற்கான சான்ஸ் அதிகரிக்கலாம்…!
நகரும் வேகமான உலகத்தில் நாமும் அதன் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஓடி கொண்டிருக்கிறோம். அதனால் நமக்கு ஏற்படும் இழப்புகள் தான் பல. அதில் முதன்மையான இழப்பாக கருப்படுவது உடல் ஆரோக்கியம். இன்றைய சுற்றுச்சூழலும், ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரமும் நமக்கு பலவித வியாதிகளை உண்டாக்குகிறது. அவைகள் லேசானது முதல், உயிரை கொள்ளும் வரை செல்லும். அப்படி ஒரு உயிர் கொல்லி வியாதி தான் புற்றுநோய். பல விதமான புற்றுநோய்களில் ஒன்று தான் புரோஸ்டேட் புற்றுநோய் (Prostate Cancer).

ஹூட் ஹூட் புயல் விசாகப்பட்டினத்தில் கரையை கடந்தது: கனமழைக்கு 3 பேர் பலி!


Posted Date : 10:15 (12/10/2014)Last updated : 15:17
விசாகப்பட்டினம்: ஹூட் ஹூட் புயல் விசாகப்பட்டினத்தில் புடிமடக்கா என்ற இடத்தில் கரையை கடந்தது. ஆந்திர மாநிலத்தில் கனமழைக்கு 3 பேர் பலியாகி உள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே புடிமடக்கா என்ற இடத்தில் ஹூட் ஹூட் புயல் கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது, விசாகப்பட்டினத்தில் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. புயல் காரணமாக ஆந்திரா, ஒடிஷாவின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

Saturday 11 October 2014

அம்மா ஜெயிலில்: மொட்டை பாஸ் அவதாரத்தில் அதிமுக

[ சனிக்கிழமை, 11 ஒக்ரோபர் 2014, 
சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்தர் கோயிலில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி 1006 பேர் மொட்டையடித்து சுவாமியை வழிபட்டனர்.

4 ஆயிரம் பேரின் உயிரை குடித்த எபோலா (வீடியோ இணைப்பு)

4 ஆயிரம் பேரின் உயிரை குடித்த எபோலா (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 11 ஒக்ரோபர் 2014, 
எபோலா நோய்க்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

எனக்கு எபோலா நோய் உள்ளது? திடீரென நடுவானில் கூச்சலிட்ட பயணியால் பரபரப்பு (வீடியோ இணைப்பு)

[ சனிக்கிழமை, 11 ஒக்ரோபர் 2014,
அமெரிக்க விமானம் ஒன்றில் டொமினிக்கன் குடியரசுக்கு பயணம் செய்த பயணியொருவர் தனக்கு எபோலா வைரஸ் தொற்று இருப்பதாக அலறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இடுப்பு வலி வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த நோயாளியைக் காணவில்லை. சரியான வேலை நேரம். எல்லோருக்குமே நேரம் முக்கியம் என்பதால் ஒருவர் பரிசோதனை அறையை விட்டு வெளியேறியதும் அடுத்தவர் நுழைந்து விடுவார். காலத்தை வீணாக்க மாட்டார்கள்.

இப்ப ஏன் தாமதமாகிறது?

'மொபைலில் பேசுவதால் காலதாமதம் ஆகிறதோ. அல்லது நடை தளர்ந்த முதிர்ந்த நோயாளியோ' எனச் சிந்திக்கும்போதே வாசலில் அரவம் கேட்டது.

வந்தவர் இளம் நோயாளி. நடக்க முடியாத முதுமை அல்ல.

பார்த்த உடனேயே அவரது பிரச்சனை புரிய 'என்ன நடந்தது' எனக் கேட்டேன்.

மலவாயில் அரிப்பு


மலவாயில் அரிப்பு
"சரியான அரிப்பு" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் பயம் வந்தது. ஆனால் செய்யவில்லை. "தானைப் புழுத் தொல்லை என்னை விட்டுப் போகுதில்லை" என அலுத்துக் கொண்டார்.

Friday 10 October 2014

தொழிலதிபர்களுடன் மோடி ரகசிய பேரம்; மருந்துகளின் விலை கடுமையாக உயரும்: ராகுல் தாக்கு!



 (11/10/2014))











தின்தோரி: பிரதமர் மோடி தொழிலதிபர்களுடன் மேற்கொண்டுள்ள ரகசிய பேரத்தால், மருந்துகளின் விலை கடுமையாக உயரும் என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.

மண்டபம் அருகே வேன் விபத்தில் டிரைவர் பலி

ராமநாதபுரம், அக். 1
ராமேஸ்வரம் அருகில் உள்ள திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் நாகரத்தினம். இவரது மகன் ராஜபாண்டி (வயது 35), வேன் டிரைவர். நேற்று ராஜபாண்டி ராமேசுவரத்துக்கு வேனை ஓட்டி வந்தார்.

மெதுவாக உண்ணுங்கள் மெல்லியராக மாறுங்கள்


"
இவள் சரியான வேலைக் கள்ளி. கோப்பைகள் கழுவுகிற வேலை தன்ரை தலையிலை விழுந்துவிடும் என்று மெல்ல மெல்லச் சாப்பிட்டு கடைசி ஆளாத்தான் எழும்புவாள்" என அம்மா மகளைப் பற்றிப் புறுபுறுத்தாள்.

Friday 3 October 2014

புதுவலசையில் இந்த வருடம் திடல் தொழுகை - முஸ்லிம் ஜமாஅத் அறிவிப்பு

புதுவலசையில் இந்த வருடம் திடல் தொழுகை - முஸ்லிம் ஜமாஅத் அறிவிப்பு


புதுவலசையில் 2014-ம் ஆண்டிற்கான ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை அரபி ஒலியுல்லாஹ் உயர் நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள திடலில் நடைபெறும் என புதுவலசை முஸ்லிம்  ஜமாஅத் அறிவித்துள்ளது.

Wednesday 1 October 2014

ரொக்கமாக பெறும் நன்கொடைகள்: அரசியல் கட்சிகள் பணத்தை வங்கியில் போட வேண்டும் தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவு


புதுடெல்லி, 

ரொக்கமாக பெறுகிற நன்கொடை பணத்தை அரசியல் கட்சிகள் வங்கியில்தான் டெபாசிட் செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

வகுப்பில் பேசியதற்காக நாய்க் கூண்டில் அடைத்து 4 வயது குழந்தை சித்ரவதை: பள்ளியை மூட அரசு உத்தரவு


வகுப்பில் பேசியதற்காக நாய்க் கூண்டில் அடைத்து 4 வயது குழந்தை சித்ரவதை: பள்ளியை மூட அரசு உத்தரவு

ஜெயலலிதா மீது கருணை காட்ட முடியாதது ஏன்?  நீதிபதி குன்கா தீர்ப்பு விவரம்

ஜெயலலிதா மீது கருணை காட்ட முடியாதது ஏன்?
 நீதிபதி குன்கா தீர்ப்பு விவரம்

சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பில், ஜெயலலிதா மீது கருணை காட்ட முடியாதது ஏன் என்பது குறித்து நீதிபதி குன்கா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்கா ஆயிரத்து 136 பக்க தீர்ப்பு அளித்தார். அவரது தீர்ப்பின் மேலும் பல பகுதிகள் வருமாறு:–

தினமலர் இணையதளத்துக்குத் தடை!


ரியாத்: சமூகங்களுக்கிடையிலான நல்லுறவைக் கெடுக்கும் வகையில் பதிவுகள் வெளியிட்டுவந்த காரணத்தால் தினமலர் இணையதளம் சவூதி அரேபியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. அப்பத்திரிகை பிரதிகளும் அங்குத் தடை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தண்ணீர் ரகசியம் எதைக் குடிப்பது.. எதைத் தவிர்ப்பது?

தண்ணீர் ரகசியம் எதைக் குடிப்பது.. எதைத் தவிர்ப்பது?
பிரேமா நாராயணன், பு.விவேக் ஆனந்த், படங்கள்: எம்.உசேன், மாடல்: ஸ்ரீனிகா
மூச்சிரைக்க விளையாடிவிட்டு, வரும் வழியில் கிணற்றிலோ, தெருக்குழாயிலோ தண்ணீர் குடித்த காலம் இன்று இல்லை. இன்று நாம் குடிக்கும் தண்ணீரில் இருந்து உண்ணும் உணவு வரை அனைத்துமே ரசாயனக் கலப்பாகிவிட்டது.