அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday 17 December 2014

வாட்ஸ் அப்பில் வைரலாக பரவிவரும் ஆதார் அட்டை கொமடி!

[ புதன்கிழமை, 17 டிசெம்பர் 2014,
மத்திய அரசு மானிய சிலிண்டருக்கு ஆதார் அட்டை எண்ணை பதிவு செய்யுங்கள் என்று சொன்னதால் பலர் அலுவலகங்களுக்கு விடுப்பு எடுத்து ஆதார் அட்டைக்கு பதிவு செய்து வருகின்றனர்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போதே ஆதார் அட்டை திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலை ஆதார் அட்டை தொடர்பான பணிகள் தனியார் நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படுவதால், இந்தியர்கள் பற்றிய விவரங்களும் பணத்திற்காக விற்கப்பட வாய்ப்புள்ளதாக இத்திட்டத்தை எதிர்த்தவர்கள் கூறிவருகின்றனர்.
தற்போது வாட்ஸ்-அப்பில் இது தொடர்பாக நகைச்சுவை ஒன்று வேகமாக பரவி வருகிறது.

இது வெறும் டிரைலர் தான், தாக்குதல்கள் தொடரும்: எச்சரிக்கும் தலிபான்கள்


[ புதன்கிழமை, 17 டிசெம்பர் 2014,
பாகிஸ்தானில் நேற்று நடத்தப்பட்ட கொடூரமான மிருகவெறித் தாக்குதல் வெறும் டிரைலர் தான் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பாகிஸ்தான் பெஷாவரில் உள்ள இராணுவ பள்ளி ஒன்றில் தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 132 மாணவர்கள் உட்பட 145 பேர் பலியாகியுள்ளனர்.

Sunday 14 December 2014

மதம் மாறுவதற்கு துணிந்த ஒரு முஸ்லிம் கிராமம்: அதிர்ச்சி ரிப்போட்


  • நெகிழவைக்கும் பாணந்துறை மெளலவியின் ஈமானிய உணர்வு


முஸ்லிம் அல்லாதவர்களிடம் இஸ்லாம் போய்ச் சேர்வதற்கு நாம் பலவகையான வழிகளில் மார்க்க பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறோம். ஏன், இஸ்லாத்தைப் பற்றி நாம் அதிகமாக தெரிந்து வைத்திருக்கிறோம் என்ற தோரணையில் நமக்குள்ளேயே மோதிக்கொள்கிறோம். இதனால் முஸ்லிம்கள் பல பிரிவுகளாக சிதறுண்டு தங்களுக்குள் அடித்துக்கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. ஆனால், இந்தியாவில் இஸ்லாத்தை தெரியாத ஒரு முஸ்லிம் கிராமம் மதம் மாறுவதற்கு தயாரான செய்தி உங்களுக்குத் தெரியுமா?

Tuesday 9 December 2014

மராட்டிய மாநில கிராமத்தில் நைட்டி அணிந்து பெண்கள் வெளியே நடமாடினால் ரூ 500 அபராதம்


மும்பை

மகாராஷ்டிரா மாநிலம், நவி மும்பை அருகேயுள்ளது கோதிவளி என்ற கிராமம். இது நவி மும்பை மாந்கராட்சிக்கு உடபட்டதாகும். இந்த கிராமத்தில் செயல்படும் 'இந்திரயானி மகிளா மண்டல்' என்ற பெண்கள் அமைப்பு தனது ஆபீசுக்கு வெளியே உள்ள அறிவிப்பு பலகையில் வெளியிட்ட அறிவிப்பு கிராமத்திலுள்ள பெண்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

டெல்லி பலாத்காரம்: எனது மகனுக்கு தண்டனை கொடுங்கள்: தாயின் வேண்டுகோள்


[ செவ்வாய்க்கிழமை, 09 டிசெம்பர் 2014, 08:13.05 AM GMT +05:30 ]
எனது மகன் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியவர் என்று டெல்லியில் பலாத்கார வழக்கில் கைதான உபேர் டாக்சி டிரைவர் ஷிவ் குமார் யாதவின் தாய் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 25 வயது பெண்ணை தாக்கி, பலாத்காரம் செய்த வழக்கில் உபேர் டாக்சி ஓட்டுநர் ஷிவ் குமார் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறட்டை விடுவது ஏன்?


ஓவியம்: வெங்கி
நாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு, வாய், தொண்டை, மூச்சுக் குழல் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. இந்தப் பாதையில் எங்காவது தடை ஏற்படும்போது குறட்டை வருகிறது. விழித்திருக்கும்போது வராத குறட்டை, தூங்கும்போது மட்டும் ஏன் வருகிறது

Wednesday 3 December 2014

குதிநாண் (சவ்வு) அழற்சி


இது என்னடா குதிக்காலில் நாண் என்கிறீர்களா? விண் பூட்டி பட்டம் ஏற்றியது ஞாபகம் வரவில்லையா? அதில் நாண் இருந்திருக்குமே. அட அந்த விளையாட்டுத்தான் தெரியாவிட்டாலும் அர்ஜீணன் தனது வில்லிற்கு நாண் பூட்டியது கூடத் தெரியாதா?



இரண்டு முனைகளை இணைக்கும் கயிறு போன்றதை நாண் என்பார்கள். குதிக்காலில் என்ன நாண்? குதிக்கால் எலும்பைக் கல்கேனியம் (Calcaneum) என்பார்கள். முழங்காலிலிருந்து கீழ்நோக்கி வரும் கெண்டைக் கால் தசைகளை (Calf muscles) குதிக்கால் எலும்புடன் இணைக்கும் கடினமான சவ்வைத்தான் குதிநாண் (Achiles tendon) என்பார்கள்.

சில சிந்தனைகள்





சில சிந்தனைகள் (பகுதி - 3)
வெற்றிக்கான எளிய வழிகள்!




1. ஒன்றும் இல்லாதவனைக் கூட கோடீஸ்வரன் ஆக்குவது பொருள்தான். எனவே
பணத்தைச் சம்பாதியுங்கள். கஷ்டப்பட்டு முதலில் ஒரு ரூபாய் சம்பாதித்து விட்டால்,
இரண்டாவது ஒரு ரூபாய் தானே வந்து சேரும். பகைவரை வெல்லக் கூடியது,
பொருள்தான். பொருள் இருந்தால், அறம் செய்யலாம்; இன்பம் அனுபவிக்கலாம்.
ஆகவே, எந்தப்பாடு பட்டாவது பொருள் தேட முயற்சி செய்யுங்கள். பொருள்தான்
உங்களைச் செழிக்க வைக்கும் கேணி! பொருள்தான் உங்கள் வாழ்க்கைக்குத் தோணி!
பொருள்தான் உங்களை உச்சிக்கு உயர்த்தும் ஏணி! பொருளைப் போற்றுங்கள்!
போற்றுகிறவரிடம்தான் பொருள் சேரும்.