அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday 31 July 2013

எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் சோயாபீன்ஸ்!


சோயா பீன்ஸ் எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அத்வானி கூட்டத்திற்கு கட்டுப்பாடு - இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் கோரிக்கை!



அத்வானி கூட்டத்திற்கு கட்டுப்பாடு - இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் கோரிக்கை!
சேலம் : சேலத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி பங்கேற்கும் கூட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது.
சேலத்தில் படுகொலை செய்யப் பட்ட பா.ஜ.க. செயலர் ஆடிட்டர் ரமேஷ் இரங்கல் கூட்டத்தில் பங்கேற்க அத்வானி சேலம் வருகிறார். இக்கூட்டம் வரும் ஆக-1 ஆம் தேதி நடைபெறுகிறது.

அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் ரகசிய இடங்களில் அடைக்கப்பட்டு சித்திரவதை - ஐ.ஜி குற்றச்சாட்டு

லக்னோ: நாடு முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் ரகசிய இடங்களில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று உத்தரப்பிரதேச காவல்துறை முன்னாள் தலைவர் எஸ்.ஆர். தாராபுரி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tuesday 30 July 2013

உதயமாகிறது தெலங்கானா

 உதயமாகிறது தெலங்கானா
July 31, 2013  09:22 am
இந்தியாவின்29வது மாநிலமாக தெலங்கானாவை உருவாக்க மத்தியில் ஆளும் கூட்டணி முடிவு செய்துள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குடியால் நடந்த விபரீதம்: பொலிசின் மனைவி குழந்தையுடன் தீக்குளிப்பு


[ புதன்கிழமை, 31 யூலை 2013, 
தமிழ்நாட்டியில் உள்ள மதுரையில் பொலிஸ்காரர் ஒருவர் குடித்து விட்டு கொடுமை செய்ததால் அவருடைய மனைவி, குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

ரூ.21,680 கோடிக்கு குடித்து சாதனை படைத்த தமிழக குடிமகன்கள்

[ புதன்கிழமை, 31 யூலை 2013
தமிழ்நாட்டில் 2012-2013 ஆண்டில் டாஸ்மாக் விற்பனை ரூ.21,680 கோடியாக உயர்ந்துள்ளது என புள்ளிவிபரம் அறிக்கையானது தகவல் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான்: லாரி மீது மோதி பஸ் தீப்பிடித்த விபத்தில் 17 பேர் பரிதாப பலி

பாகிஸ்தான்: லாரி மீது மோதி பஸ் தீப்பிடித்த விபத்தில் 17 பேர் பரிதாப பலி
இஸ்லாமாபாத், ஜூலை 31- 

வடமேற்கு பாகிஸ்தானில் லாரியுடன் பஸ் மோதிய விபத்தில் 17 பேர் தீயில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 

கொடுக்க கொடுக்கத்தான் சுரக்கும் தாய்ப்பால்! தாய்ப்பால் வாரம்... சிறப்புக் கட்டுரை!

'நான் சென்னையைச் சேர்ந்த வாசகி. 'அவள் விகடன்’ கட்டுரை ஒன்றில், தாய்ப்பால் பற்றி... குறிப்பாக சீம்பால் தருவதன் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தப்பட்டிருந்ததை படித்த நான், என் பிரசவத்தில் அதைத் தவறாமல் கடைபிடிக்கக் காத்திருந்தேன். ஆனால், சமீபத்தில் சுகப்பிரசவமான எனக்கு நேர்ந்த அனுபவமோ, கசப்பானது. 'சுகப்பிரசவம் எனில், குழந்தை பிறந்த அரை மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்’ என்று அவள் விகடனில் படித்திருந்ததைச் சொல்லி, பாலூட்டுவதற்காக என் குழந்தையைத் தரும்படி நர்ஸிடம் கேட்டேன். 'ரூம் இல்லை’ என்று ஏதேதோ சாக்கு சொல்லி, என் குழந்தை என் கையில் கிடைப்பதற்குள் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்துக்கும் மேலாகியிருந்தது.

அமெரிக்காவில் சர்க்கரை நோய் அதிகரிக்க கோலாதான் காரணமா? ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்


நம் நாட்டில் சர்க்கரை நோய் அதிகமாவதற்கு வெள்ளை அரிசி முக்கியக் காரணம் என்றால், அமெரிக்காவில் தற்போது அதிகரித்து வரும் சர்க்கரை நோய்க்கு கோலாவின் சோளச் சர்க்கரையே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் அடித்துச் சொல்கிறார்கள். சர்க்கரை நோய் தவிர, உடல் பருமன், பல் சொத்தை, கவுட் (Gout) என்கிற மூட்டுவலி நோய், சிறுநீரக பிரச்னைகள், குடல்புற்றுநோய் போன்ற வியாதிகளும் இதனால் ஏற்படலாம் என்ற கருத்தும் உள்ளது.

எதிர்கால இங்கிலாந்து அரசரின் பெயரில் உலாவரும் வைரஸ்! மக்களுக்கு எச்சரிக்கை

[ செவ்வாய்க்கிழமை, 30 யூலை 2013, 
இங்கிலாந்தின் குட்டி இளவரசர் ஜார்ஜ் பெயரில் வைரஸ் பரவி வருவதால் மக்களுடன் எச்சரிக்கையுடன் இருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் நிர்வாணமாக நின்ற கைதி

 30 July 2013 

மதுரை நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்லப்பட்ட விசாரணை கைதி திடீரென நிர்வாண கோலத்தில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுவுக்கு எதிராக மதுரை மாணவி போராட்டம்: ஆதரவு பெருகுகிறது…

மதுவுக்கு எதிராக மதுரை மாணவி போராட்டம்: ஆதரவு பெருகுகிறது… 
பதிவு செய்த நாள் -
ஜூலை 30, 2013  at   7:17:02 AM
 
மிழ்நாட்டில் மது விலக்குக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள மதுரை அரசு சட்டக்கல்லூரி மாணவியின் போராட்டம் இரண்டாவது தொடர்கிறது. போராட்டத்திற்கு ஆதரவாக காந்தியவாதி சசிபெருமாளும் இன்று முதல் உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொள்கிறார்.

அமெரிக்காவில் பாலியல் தொழிலில் சிறுமியரை ஈடுபடுத்தியவர்கள் கைது:

அமெரிக்காவில் பாலியல் தொழிலில் சிறுமியரை ஈடுபடுத்தியவர்கள் கைது:
July 30, 2013  10:40 am
சிறுவயதினர் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை தடுக்கும்வகையில் அமெரிக்க புலனாய்வுத்துறை சென்ற வார இறுதியில் நாடு முழுவதும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டது.

பள்ளி மாணவிகள் ஸ்கர்ட் அணிய தடை

பள்ளி மாணவிகள் ஸ்கர்ட் அணிய தடை
July 30, 2013  12:46 pm
இங்கிலாந்து நாட்டில் சமீப காலத்தில் 63 உயர்நிலைப் பள்ளிகளில் மாணவிகள் ஸ்கர்ட் அணிவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. எனினும்தற்போது இந்த நடைமுறையை ஒன்பது வயது முதல் பதிமூன்று வயது வரை உள்ள மாணவிகள் கல்வி பயிலும் நடுநிலைப் பள்ளி ஒன்றும் பின்பற்றத் துவங்கியுள்ளது.

Monday 29 July 2013

மது போதையில் அதிகரித்து வரும் கொலைகள் குடும்ப தகராறில் தற்கொலைகளும் தாராளம்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில், கடந்த 10 நாட்களில், மதுபோதையின் காரணமாக ஏற்பட்ட குடும்ப தகராறில் மூவர் கொலை செய்யப்பட்டனர். குடிப்பழக்கத்திற்கு ஆளாவோருக்கு ஏற்படும் சந்தேகம்,

ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக ஆட்சியரிடம் புகார்


First Published : 30 July 2013 
திருப்பாலைக்குடியில் ஜமாத்திற்குரிய தொகையை செலுத்தாமல் திருமணம் செய்து கொண்டதால் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டதாக முஸ்லிம் குடும்பத்தினர் ஆட்சியரிடம் புகார் செய்துள்ளனர்.

பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் கொலை முயற்சி வழக்குப் பதிவு : எஸ்.பி. எச்சரிக்கை


First Published : 30 July 2013 
அரசு பஸ்கள் மீது கல்வீசி சேதப்படுத்துதல், பொதுச் சொத்துகளுக்கு  சேதம் விளைவிப்போர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்படும் என ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தெரிவித்தார்.

தொண்டி அருகே அனல் மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு


First Published : 30 July 2013 
தொண்டி அருகே உப்பூர் பகுதியில் அனல் மின் நிலையம் அமைக்க 715 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

ஈராக்கில் தொடர்ச்சியாக 12 குண்டுகள் வெடித்தது: 47 பேர் உடல் சிதறி பலி

[ திங்கட்கிழமை, 29 யூலை 2013,
ஈராக்கில் தொடர்ச்சியாக 12 இடங்களில் குண்டு வெடித்ததில் 47க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

சலூனில் முடிவெட்டும் பட்டதாரிப் பெண்!

சலூனில் முடிவெட்டும் பட்டதாரிப் பெண்!

July 29, 2013  12:11 pm
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட மேற்குபல்லடம் முனியப்பன்கோயில் வீதியை சேர்ந்த தங்கவேலு மகள் தேவி(30). பிகாம் பட்டதாரியான இவர்அங்கு சலூன் கடை நடத்தி வருகிறார். ஆண்கள்குழந்தைகள் என அனைவருக்கும் முடிவெட்டுகிறார்

இதயம் இல்லாமல் 2 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த வாலிபர்

 இதயம் இல்லாமல் 2 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த வாலிபர்

July 29, 2013  04:27 pm
இங்கிலாந்தில் உள்ள பாப்வொர்த்தை சேர்ந்தவர் மாத்யூகிரீன் (42). கடந்த 2011–ம் ஆண்டு ஜூலை மாதம் இவரது இதயம் முற்றிலும் பழுதடைந்து செயல் இழந்தது.

Sunday 28 July 2013

நைஜீரியாவின் கலவரம் - 25 பேர் பலி

நைஜீரியாவின் கலவரம் - 25 பேர் பலிJuly 29, 2013  11:40 am
நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதிகளில் இந்த மாத ஆரம்பத்தில் ஏற்பட்ட கலவரங்களில் ஏராளமான மாணவர்கள் கொல்லப்பட்டனர். அதில் சிலர் உயிருடன் எரிக்கப்பட்டனர். அதன்பின்னர்இந்த வார இறுதியில் பாதுகாப்பு படையினருக்கும்இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்ததில் 36 பேர் பலி

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்ததில் 36 பேர் பலி
July 29, 2013  11:43 am
தெற்கு இத்தாலியில் பட்ரே பியா என்ற இடத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித தலம் உள்ளது. புக்லியா என்ற இடத்தில் இருந்து 50 பேர் ஒரு பஸ்சில் சுற்றுலா புறப்பட்டு சென்றனர். அந்த பஸ் நேபிள்ஸ் மலைப் பகுதியில் அவெல்லினோ என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் ரோட்டோரம் உள்ள 30 மீட்டர் ஆழ பள்ளத் தாக்கில் கவிழ்ந்தது.

வேலை செய்யும் இடத்தில் பெண்களுக்கு 'செக்ஸ்' தொல்லை கொடுத்தால் பணி நீக்கம்: புதிய சட்டம் அமலுக்கு வருகிறது

வேலை செய்யும் இடத்தில் பெண்களுக்கு 'செக்ஸ்' தொல்லை கொடுத்தால் பணி நீக்கம்: புதிய சட்டம் அமலுக்கு வருகிறது
புதுடெல்லி, ஜூலை.29-

வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுப்பதை தடுப்பதற்கு புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது. இதற்கான விதிமுறைகளைக் கொண்ட வரைவு மசோதாவை, மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை தயாரித்து வருகிறது.

சீனாவுக்கு அடுத்தபடியாக வேகமாக வளருவது இந்தியப் பொருளாதாரம்: ப.சிதம்பரம்



sithamparamபொருளாதார ரீதியாக சீனாவுக்கு அடுத்தபடியாக வேகமாக வளருவது இந்தியப் பொருளாதாரம் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.

கோவையில் தவிர்க்கப்பட்ட பெரும் மதக் கலவரம்!



ந்தியா முழுவதும் இந்து மக்களிடையே மதவெறியை ஊட்டுவதன் மூலம், சிறுபான்மை மக்களுக்கு எதிராக மோதலை உருவாக்கி அரசியல் லாபம் சம்பாதிக்கும் ஈனப்பிழைப்பு நடந்து வருவதை அறிவோம்.

தேநீரா, பால்தேநீரா, கிறீன் தேநீரா



கிறீன் ரீ மோகம் இப்பொழுது பலரையும் ஆட்டிப் படைக்கிறது. அதிலும் முக்கியமாகப் பெண்களும் யுவதிகளும் அடிக்கடி கிறீன் ரீ பற்றிக் கேட்கிறார்கள். அதிலும் முக்கியமாக எடையைக் குறைக்க வேண்டும் என்பதில் ஆர்வமுள்ளவர்கள் கேட்கிறார்கள். பலர் குடிக்கவும் செய்கிறார்கள்.


கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுக் கொன்ற ஆசாமி! அமெரிக்காவில் பயங்கரம் (வீடியோ இணைப்பு)


[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 
அமெரிக்காவில் தனது வீட்டுக்கு தீ வைத்துக் கொண்ட ஆசாமி ஒருவர், அங்கு வசித்து வந்த 7 பேரையும் சரமாரியாக சுட்டுக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

78 பேரின் உயிரை காவு வாங்கிய பேஸ்புக்? ஓட்டுனரின் கவனக்குறைவே காரணம் (வீடியோ இணைப்பு)


[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013,
ஸ்பெயினில் 78 பேரின் உயிரை காவு வாங்கிய ரயில் விபத்திற்கு டிரைவர் பேஸ்புக்கில் அப்டேட் செய்தபடி ரயிலை ஓட்டியதே காரணம் என தெரியவந்துள்ளது.

பரிட்கோட் மகாராஜாவின் உயிலில் மோசடி; சொத்துக்கள் அவரது மகள்களுக்கே

பரிட்கோட் மகாராஜாவின் உயிலில் மோசடி நடந்துள்ளது


பரிட்கோட் மகாராஜாவின் உயிலில் மோசடி நடந்துள்ளது
இந்தியாவின் முன்னாள் மகாராஜா ஒருவரின் சொத்துக்களுக்கான வாரிசுரிமையை அவரது மகள்கள் இரண்டு பேர் வென்றுள்ளனர்.

அரியானா மாநிலத்தில் காதல் பிரச்னையால் 15 வயது சிறுவன் அடித்து கொலை

அரியானா மாநிலத்தில் காதல் பிரச்னையால் 15 வயது சிறுவன் அடித்து கொலை

Saturday 27 July 2013

இந்து தலைவர்கள் மீதான தாக்குதல்:நடவடிக்கை எடுத்தது குறித்து டி.ஜி.பி விளக்கம்!


Tamil Nadu DGP
சென்னை:பாஜக மாநில பொதுச் செயலாளர் ரமேஷ் கொலை வழக்கு மற்றும் இந்து இயக்கத் தலைவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பல வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று டி.ஜி.பி. விளக்கம் அளித்துள்ளார். எந்தவொரு இயக்கத்தின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படுத்தினாலும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து,

ரேசன் கடைகளில் பாமாயில் தடையின்றி வினியோகம் செய்ய வேண்டும்: எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

ரேசன் கடைகளில் பாமாயில் தடையின்றி வினியோகம் செய்ய வேண்டும்: எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
ராமநாதபுரம், ஜூலை. 27–
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

தாயை 6 ஆண்டுகள் இருட்டறையில் அடைத்து வைத்த அதிகாரி

தாயை 6 ஆண்டுகள் இருட்டறையில் அடைத்து வைத்த அதிகாரி
சிம்லா, ஜூலை.28–
இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள கேகர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரகுபீர் சிங். மாநில கால்நடை துறையில் துணை இயக்குனராக இருக்கிறார். இவருடைய தம்பி முரளி லால். இவர் வக்கீலாக இருக்கிறார்.

5 ரூபாய்க்கு எப்படி சாப்பிட முடியும்?: காங்கிரஸ் தலைவர்களுக்கு டெல்லி பிச்சைக்காரர்கள் கேள்வி!


வெறும் 5 ரூபாய்க்கு எப்படி சாப்பிட முடியும் என்று  டெல்லி பிச்சைகாரர்கள், காங்கிரஸ் தலைவர்களுக்கு கேள்வி எழுபியுள்ளனர்.

கெய்ரோவில் இராணுவத் தாக்குதல் : மோர்ஸியின் ஆதரவாளர்கள் 70 பேர் பலி

எகிப்து தலைநகர் கெய்ரோவில் இன்று மோர்ஸியின் ஆதரவாளர்களுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற வன்முறையில் 70 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழிந்த நிலையில் தேசியக் கொடியை ஏற்றிய பொலிசார் சஸ்பெண்ட்


[ சனிக்கிழமை, 27 யூலை 2013, 
இந்தியாவில் தேசியக்கொடியினை கிழிந்த நிலையில் ஏற்றிய இரு பொலிசார்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் இரட்டை குண்டு வெடிப்பு - 40 பேர் பலி

பாகிஸ்தானில் இரட்டை குண்டு வெடிப்பு - 40 பேர் பலி

July 27, 2013  12:48 pm
பாகிஸ்தானில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் 40 பேர் உடல் சிதறி பலியாயினர். பலர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானில் கடந்த மாதம் பிரதமராக நவாஸ் ஷெரீப் பதவியேற்றதில் இருந்தே தொடர்ந்து பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக ஷியா பிரிவு முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. தற்போது முஸ்லிம்கள் புனித ரம்ஜான் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். அதை சீர்குலைக்கும் வகையில் பல்வேறு இடங்களிலும் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

Friday 26 July 2013

சரியாக படிக்காத, 8 வயது சிறுமியை அடித்துக் கொன்ற தந்தை கைது

சரியாக படிக்காத, 8 வயது சிறுமியை அடித்துக் கொன்ற தந்தை கைது
பெங்களூர், ஜூலை 27-

சரியாக படிக்கவில்லை என்பதற்காக 8 வயது சிறுமியை பெற்ற தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் பெங்களூர் வாசிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கீழக்கரையில் தமுமுக ஆர்ப்பாட்டம் : தீர்மானங்கள் ( படங்கள் )


ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியின் ஊழல் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், நகராட்சி தலைவி யின் கணவர் நிர்வாகத்தில் தலையிடுவதை கண்டித்தும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற் றக்கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தின் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேறப்பட்டன.

பள்ளி குழந்தைகளுக்கான மதிய உணவில் குட்டி தவளை

உத்திரபிரதேசத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு தவளை உணவு வழங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதமாற்றம் தொடர்பில் மலேசியாவில் முக்கிய தீர்ப்பு

மலேசியாவில் மதமாற்றம் தொடர்பான மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றை உயர்நீதிமன்றம் அளித்துள்ளது. பெற்றோர்கள் இருவரின் சம்மதமின்றி இனி பிள்ளைகளை மதமாற்றம் செய்ய முடியாது என்று இபோஃஹ்விலுள்ள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் அவதூறுகள் பரப்பப்படுகின்றன''-- ஜவாஹிருல்லாஹ்


E-mailPrintPDF
பாஜக பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் அவதூறுகள் பரப்பப்படுவதாக ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் தெரிவித்தார்.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை கும்பகோணத்தில் நடைபெற்றது.இதில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:சேலத்தில் பாஜக பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்துக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

டாக்டரை கொன்று ‘உறுப்பை’ மனைவிக்கு பார்சல் அனுப்பிய பெண் கைது

டாக்டரை கொன்று ‘உறுப்பை’ மனைவிக்கு பார்சல் அனுப்பிய பெண் கைது
லக்னோ, ஜூலை 27-

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள ரணியா பகுதியில் கடந்த 21-ம் தேதி டாக்டர் சத்தீஷ் சந்திரா (42), என்பவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.

ஈரானிய கடற்படை கண்டுபிடித்த பயங்கர இராட்சத உயிரினம்! (படங்கள் இணைப்பு) - See more at: http://tamilcloud.com/news/iran-find-unidentified-sea-object/#sthash.NFpmHlmY.dpuf

பாரசீக வளைகுடாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இராட்சத கடல் வாழ் உயிரினம் எது என்பது தொடர்பில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
whaleaasfsaf

டிஜிபி கடும் எச்சரிக்கை

டிஜிபி கடும் எச்சரிக்கை
.
Friday, 26 July, 2013   02:10 PM
.
சென்னை, ஜூலை 26: தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்துக்கு எதிராக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி ராமானுஜம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எய்ட்ஸ் நோயால் பெற்றோர் மரணம்: அனாதையான 4 சிறுவர்களை சுடுகாட்டில் குடிவைத்த கிராம மக்கள்

எய்ட்ஸ் நோயால் பெற்றோர் மரணம்: அனாதையான 4 சிறுவர்களை சுடுகாட்டில் குடிவைத்த கிராம மக்கள்
பிரதாப்கர், ஜூலை 26-

உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தம்பதியர் இறந்துவிட்டனர். இதனால் அவர்களின் பிள்ளைகளுக்கும் அந்த நோய் இருக்கும் என்று அவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அஞ்சினர். இதுபற்றி ஊர் பெரியவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பொருளாதாரம் மட்டும் போதாது: அப்துல் கலாம்



சென்னை: ""மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பொருளாதார வளம் மட்டும் போதாது; அமைதியும் அவசியம். இதற்கு சமூகத்தின் நாகரிக வாழ்க்கையை உறுதிப்படுத்த வேண்டியது வழக்கறிஞர்களின் கடமை,'' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 2 ரூபாய் நிவாரணம் கொடுத்து இழிவுபடுத்திய அரசாங்கம்

[ வெள்ளிக்கிழமை, 26 யூலை 2013, 12:32.39 AM GMT +05:30 ]
டெல்லியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகையாக ரூ. 2 மற்றும் ரூ.3 என்று எழுதப்பட்ட காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன.

இஸ்லாமியர்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் பிறர் நெருங்க அஞ்சுவார்கள் - கருணாநிதி

இஸ்லாமியர்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் பிறர் நெருங்க அஞ்சுவார்கள் - கருணாநிதி
July 26, 2013  12:14 pm
இஸ்லாமியர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் அப்படி இருந்தால்தான் பிறர் நெருங்க அஞ்சுவார்கள் என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.

புதிய பஸ் நிலையத்தை அனைத்து வசதிகளுடன் விரிவுபடுத்த திட்டம் நகரசபை கூட்டத்தில் தகவல்

ராமநாதபுரம்
ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தை அனைத்து வசதிகளுடன் விரிவுப டுத்த திட்டமிடப்பட்டுள் ளதாக நகரசபை கூட்டத் தில் தெரிவிக்கப்பட்டது.

Thursday 25 July 2013

பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்

சாதாரணமாக அனைவரும் ஒதுக்கும் அல்லது பெரிதாக அனைவராலும் விரும்பப்படாத பப்பாளி பழத்தில் நம் உடல் ஆரோக்கியத்துக்கும், சரும அழகுக்கும் தேவையான பல சத்துக்கள் அடங்கியுள்ளன.

ஆண்மை பெருக்கும் ரோஜா குல்கந்து


ஆண்மை பெருக்கும் ரோஜா குல்கந��
ரோஜா பூக்கள் காதலுக்கு மட்டும் அடையாளமான மலரல்ல. இது மருத்துவ குணம் நிறைந்தது. ரோஜா பூவில் இருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” இதயத்திற்கு பலம் தரும்
மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரோஜா இதழ்களில் இருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. வீட்டிலேயே கலப்படமில்லாமல்

பெண்களுக்கு செக்ஸ் தொந்தரவு - தடை செய்ய வந்த சட்டம்

பெண்களுக்கு செக்ஸ் தொந்தரவு - தடை செய்ய வந்த சட்டம்

ணியிடங்களில், பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் தருவோர் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. லோக் சபா மற்றும் ராஜ்யசபாவில் இந்த சட்டம் ஏற்று கொள்ளப்பட்டு, பின் ஜனாதிபதி ஒப்புதலும் வாங்கி தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது

புதிய தலைமுறை: மலேசியாவில் ரமலான் நோன்பு மாத கடைகள்

ரி.ம 30 ஆயிரம் தொகையில் ஆல்வின் டான் ஜோடிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது



ரி.ம 30 ஆயிரம் தொகையில் ஆல்வின் டான் ஜோடிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது
கோலாலம்பூர், ஜூலை 25-
ரமலான் ‘பக்குத்தே’ வாழ்த்துஆபாசப் படங்கள் என்று ‘ஆல்விவி’ வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய படங்களை வெளியிட்ட ஆல்வின் டான் (வயது 25) மற்றும் விவியான் லீ (வயது 24) ஆகிய இருவருக்கு எதிராக சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுக்களுக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

தேசிய முன்னணியின் வெற்றி மீண்டும் நிரூபிக்கப்பட்டது


:  
தேசிய முன்னணியின் வெற்றி மீண்டும் நிரூபிக்கப்பட்டது
புத்ரா ஜெயா, ஜூலை 25-
நேற்று நடத்தப்பட்ட திரங்கானு கோலா பி சூட் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் தேசிய முன்னணியின் வேட்பாளர் தெங்கு ஸைஹான் செ கு அப்துல் ரஹ்மான் 2592 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி வாகைச் சூடினார்.

மருத்துவரின் ஆணுறுப்பை துண்டித்து மனைவிக்கு பார்சல் அனுப்பிய பெண்


[ வியாழக்கிழமை, 25 யூலை 2013, 
உத்தரபிரதேச மாநிலத்தில் மருத்துவரைக் கொலை செய்து அவரது ஆணுறுப்பை கூரியர் மூலம் மருத்துவரின் மனைவிக்கு பார்சல் அனுப்பிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயினில் ரயில் தடம் புரண்டதில் 69 பேர் பலி (வீடியோ இணைப்பு)

[ வியாழக்கிழமை, 25 யூலை 2013, 
ஸ்பெயின் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள சாண்டியாகோ டி கம்போஸ்டெலா என்ற இடத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டதில் 69 பேர் பலியாகி உள்ளனர்.

பேஸ்புக்கில் வேறு வாலிபருடன் போட்டோ: திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை

பேஸ்புக்கில் வேறு வாலிபருடன் போட்டோ: திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை
சென்னை, ஜூலை. 25–
பேஸ்புக் முகம் தெரியாத பலருக்கு முகவரியை கொடுக்கிறது. பலரது முகவரியையே அழிக்கும் சாதனமாகவும் சில நேரங்களில் மாறி விடுகிறது. அதற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சி.

த.மு.மு.க. நிர்வாகி மீது வழக்குப் பதிவு


First Published : 25 July 2013 
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மலேசியா மண்டலப் பொறுப்பாளர் பீர்முகம்மது செவ்வாய்க்கிழமை ராமநாதபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது பிறரை புண்படுத்தும் வகையில் பேசியது தொடர்பாக போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.