அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

சமையல்

சுவையான மட்டன் பிரியாணி 

தேவையான பொருள்கள்:
பாஸ்மதி அரிசி - 1 கிலோ
மட்டன் - 11/2 கிலோ
நெய் 250 கிராம்
தயிர் - 400 மில்லி (2 டம்ளர்)
பூண்டு - 100 கிராம்
இஞ்சி - 75 கிராம்
பட்டை, கிராம்பு, ஏலம் - 3 வீதம்
பெரிய வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி - 1/4 கிலோ
பச்சை மிளகாய் - 50 கிராம், - எலுமிச்சை - 1,
பொதினா, கொத்தமல்லிதழை - கையளவு
கேசரிப்பவுடர் - சிறிதளவு
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு


முன்னேற்பாடுகள்:
1. வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
2. இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அரைத்துக்கொள்ளவும்
3. பாஸ்மதி அரிசியைக் கழுவி 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

செய்முறை;
1. குக்கரை அடுப்பில் வைத்து, சூடேறியது நெய்யை ஊற்றவும்

2. நெய் சூடேறியதும் ஏலம் பட்டை கிராம்பைப் போடவும்

3. பின்னர் அதில் பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.

4. பின்னர் அதில் அரைத்த இஞ்சி, பூண்டு விழுதுகளை போட்டு வதக்கிக் கொள்ளவும்

5. கழுவி சுத்தம் செய்து வைக்கப்பட்டுள்ள மட்டன் துண்டுகளை அதில் போட்டு சிறிது நேரம் கிளறவும்

6. தயிர், நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், உப்பு போட்டு கிளறிவிட்டு குக்கரில் 10 நிமிடம் வேக வைக்கவும்.

7. பின்னர் 1:1 என்ற விகிதத்தில் தண்ணீர் வைத்து அதில் சிறிதளவு உப்பு போட்டு அரிசியை தனியாக வேறு பாத்திரத்தில் வேக வைத்துக்கொள்ளவும்

8. குக்கரில் உள்ள குருமாவில் எலுமிச்சைச் சாறு ஊற்றி புதினா மல்லித்தழை போட்டு கொதிக்க விடவும்

9. கொதிக்கும் குருமாவில் சமைத்து வைத்திருக்கும் சாதத்தைப் போட்டு கிளறி சமப்படுத்தவும்

10. கேசரி பவுடரை சிறிது பால் கலந்து பிரியாணி மீது ஒரு பக்கமாக ஊற்றி, மூடி வெயிட் போட்டு லேசான தீயில் 5 நிமிடம் வைத்திருந்து இறக்கிவிடவும்

11. நெய்யில் வறுத்து வைத்திருக்கும் முந்திரிப்பருப்பைப் போட்டு கிளறி பிரியாணியை வேறுபாத்திரத்தில் எடுத்து வைத்துவிட்டு பின்பு பரிமாறவும்.
பிரியாணி பார்ப்பதற்கு சிகப்பு, வெள்ளைக் கலரில் அழகாகவும் ருசி மிக்கதாகவும் சுவையானதாகவும் இருக்கும்
.sinthikkavum thanks

////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

தேங்காய்ப் பால் ரசம்
தேவையானப் பொருட்கள்
தேங்காய் – ஒரு மூடி
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் – 3
மிளகு – ஒன்றரை தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
கருவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
#செய்முறை
தேங்காயைத் துருவிப் பால் எடுத்துக் கொள்ளவும்.
தண்ணீரில் புளியை ஊறவைத்து கரைத்து பாலுடன் சேர்த்து, உப்பையும் சேர்த்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை, மிளகாயைக் கிள்ளிப் போட்டு சிவந்ததும், மிளகைப் போடவும்.
மிளகு படபட வென்று வெடித்ததும் ரசக் கரைசலை ஊற்றி நுரை கூடியதும் ஒரு முறை கிண்டி விட்டு இறக்கவும்
கூட்டு வகைகளை வைத்துக் கொண்டு உண்ண இந்த ரசம் நன்றாக இருக்கும்.
இந்த ரசம் கொதித்து விட்டால் திரிந்த பால் போல நன்றாக இருக்காது.

/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

சமைத்து அசத்தலாம் வாங்க-3
"மஷ்ரூம் பிரியாணி செய்யும் முறை
தேவையான பொருள்கள்:
பாசுமதி அரிசி- 150 கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 10 பல்
மஷ்ரூம் - 150 கிராம்
சோயா சன்ங்ஸ்(chunks) - 50 கிராம்
கொத்தமல்லி - கால் கட்டு
புதினா - கால் கட்டு
பச்சை மிளகாய் - 1
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - சிறிதளவு
செய்முறை :
இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் ஆகியவற்றை சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். சோயா சன்ங்ஸை கொதிக்கும் நீரில் போட்டு பிழிந்து வைத்துக் கொள்ளவும். மஷ்ரூமை 4 ஆக அறிந்து கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியையும் அறிந்து கொள்ளவும். சிறிது கொத்தமல்லி, புதினாவை தாளிக்க எடுத்து வைத்து கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு பொரிய விடவும்.
அதில் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினா, மஷ்ரூம், சோயா சன்ங்ஸை போட்டு நன்கு வதக்கவும்.
அதனுடன் அரைத்த விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும்.
பிறகு அரிசிக்கு தகுந்தவாறு தண்ணீர் ஊற்றவும். (1 டம்ளர் அரிசிக்கு 1 1 /2 டம்ளர் தண்ணீர்). அரிசியை முன்பே அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் ஊற வைத்திருக்கும் அரிசியை போட்டு நன்றாக கிளறி விட்டு குக்கரை மூடவும்.
சிம்மில் வைத்து நன்கு வெந்ததும் அடுப்பை நிறுத்தவும். சுவையான மஷ்ரூம் சோயா பிரியாணி தயார்
////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
.Download IMG_3237860566213.jpeg (11.5 KB)

சமைத்து அசத்தலாம் வாங்க-1
"நாசி கோரேங்(சிங்கப்பூர் ஃப்ரைட் ரைஸ்) செய்யும் முறை
தேவையான பொருள்கள்:
தாய் பச்சரிசி அல்லது பாஸ்மதி அரிசி சாதம் - 2 கப்(உதிரியாக வடித்து ஆற வைத்தது)
பூண்டு - ஒரு மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
கேரட் - 2 மேசைக்கரண்டி (மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கியது)
முட்டைகோஸ் - 2 மேசைக்கரண்டி (மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கியது)
ஃப்ரோசன் கார்ன் அல்லது வேக வைத்த சோள மணிகள் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு கீரை(தேவைப்பட்டால்) - ஒரு கைப்பிடி
வெங்காய தாள்(ஸ்ப்ரிங் ஆனியன்) - ஒரு மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
முட்டை - ஒன்று
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை(சீனி) - அரை தேக்கரண்டி
செய்முறை :
காய்கறிகளை மேற்சொன்னது போல் நறுக்கி வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையானவற்றையும் தயாராக எடுத்து வைக்கவும்.
வாணலியில் அரை மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி கிளறி விட்டு தனியே எடுத்து வைக்கவும்.
அதே வாணலியில் மீதம் உள்ள எண்ணெயை ஊற்றி சூடானதும் பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து அதிக தீயில் 30 நொடிகள் வதக்கவும்.
அதனுடன் கேரட் மற்றும் சோள மணிகள் சேர்த்து வதக்கவும்.
முட்டைகோஸ் மற்றும் கீரையை சேர்த்து மேலும் 30 நொடி வதக்கவும்.
கடைசியாக சாதம், முட்டை, உப்பு, சர்க்கரை, சோயா சாஸ் சேர்த்து நன்றாக கிளறவும்.
தீயின் அளவை அதிகமாக வைத்து 3 அல்லது 4 நிமிடங்கள் வரை கிளறவும்.
ஸ்ப்ரிங் ஆனியன் சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்கி விடவும்.
சுவையான நாசி கோரேங் தயார்.
தயாரிப்பு : கவி
குறிப்பு
இந்த சமையல் முழுவதும் அடுப்பை அதிக தீயில் வைத்து செய்தால்தான் காய்கறிகள் நிறம் மாறாமல் சுவையாக இருக்கும். முட்டை வேண்டாம் என்றால் தவிர்த்து விடலாம்

No comments:

Post a Comment