அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday 12 April 2024

எங்களது ஊரில் கால் பந்து பெருமை சேர்த்த 💐💐💐💐💐💐






புதுவலசையில் ஒவ்வொரு சீசனில் ஒரு விளையாட்டு களைகட்டும்  அதே போல் கால்பந்தும்.  

பொதுவாக நமதூர் மக்கள் கால்பந்து நன்றாக விளையாடும் திறமை உள்ளவர்கள். அதுவும் 80' களின் கடைசி ஒரு பொற்காலம் என்று சொல்லலாம் கால்பந்து மீது ஆர்வம் இருந்தாலும் அதை மேலும் அதிகமாகியது என்றால் அது "ஷேக் அமானுதீன் அண்ணன்," காரணம் அவர்கள் ஆடும் முறை.

"மலேசியாவில் இருந்து அவர்கள் ஊருக்கு வந்தாலே கிரவுண்ட் களைகட்டும்" 4:45 க்கு மைதானத்தில் இருந்தால் மட்டுமே விளையாட முடியும் அதன் பின் வந்தால் விளையாடும் அணியில் இடம் கிடைக்காது.  அவருடன் விளையாட எல்லோருக்கும் ஆசை இருக்கும்  அது பல வீரர்களை அடையாளம் காண உதவியது.

 "இன்று மெஸ்ஸி,ரெனால்டினோ என்று நாம் வியர்ந்து பாருக்கும் வீரர்கள் போல் அவர் விளையாடும் முறையும் தனியாக தெரியும்." அவரி வேகத்திற்கு யாராலும் ஓட முடியாது அந்த வேகம் பலரையும்  ஈர்த்தது, விளையாடுவது மட்டும் அல்ல பந்தை எவ்வாறு நெஞ்சில் வாங்க வேண்டும் பந்தை வேகமாக அடிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அவரிடம் இருந்து கற்றவர்கள் அதிகம். 

விளையாட  ஊரே திரண்டு வெளியூர் போவதும் மற்ற ஊர் அணிகள் ஊரில் விளையாட வருவதும் கால்பந்து திருவிழா.

அவர் விளையாடுவது அழகாக, நேர்த்தியாக இருக்கும். அதை விரும்பாதவர்கள் யாரும் இல்லை அந்த கால கட்டத்தில் அவர்களோடு விளையாடியவர்களுக்கு  அதை ரசித்தவர்களுக்கு இந்த கருத்தில் மாற்று கருத்து இருக்காது. 

"அந்த காலகட்டத்தில் கால்பந்து விளையாடுபவர்களுக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேசன்." புதுவலசையின் கிரேட்  கால்பந்து வீரர் அண்ணன் ஷேக் அமானுதீன் அவர்கள்.