அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday 31 January 2013

முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் : கமல் தரப்பு உள்துறை செயலரிடம் கடிதம்!



விஸ்வரூபம் பட விவகாரம் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக நடிகர் கமல்ஹாசன் தரப்பில் தமிழக உள்துறை செயலரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பொய் சொல்கிறது : மத்திய அமைச்சர் அந்தோணி




பாகிஸ்தான் வீரர்கள் பலர் இந்திய வீரர்களால் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப் பட்டுள்ளனர் என்று பாகிஸ்தான் சொல்லியிருப்பது உண்மையில்லை என்றும் பாகிஸ்தான் பொய் சொல்கிறது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணி கூறியுள்ளார்.

பர்கரில் குதிரை கறி: வினியோகஸ்தருக்கு தடை

[ வியாழக்கிழமை, 31 சனவரி 2013, 
அயர்லாந்தில் பர்கர் உணவில் குதிரை கறி வைத்து விற்கப்பட்ட சம்பவத்தை அடுத்து குதிரை கறி வினியோகஸ்தருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சர்வாதிகாரி ஹிட்லர் ஆட்சிக்கு வந்து 80 ஆண்டுகள்

[ வியாழக்கிழமை, 31 சனவரி 2013, 
சர்வாதிகாரி ஹிட்லர் பதவிக்கு வந்து 80 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

விஸ்வரூபம் வெளியிட்டிருந்தால் மிகப் பெரிய போராட்டம் வெடித்திருக்கும்


விஸ்வரூபம் வெளியிட்டிருந்தால் மிகப் பெரிய போராட்டம் வெடித்திருக்கும்


January 31, 2013  03:46 pm
சட்ட ஒழுங்கை பாதுகாப்பதே அரசின் கடமை. அதை தமிழக அரசு செய்து வருகிறது.

சிலி நாட்டில் கடும் பூகம்பம் - ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவு


சிலி நாட்டில் கடும் பூகம்பம் - ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவு
January 31, 2013  03:52 pm
சிலி நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கோபியாபோ மாகாணத்தில் நேற்று கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி வீடுகள் எல்லாம் குலுங்கின. 

இதன் பூகம்பம் மையம் கோபியாபோ நகரின் தென் மேற்கே 56 மைல் தூரத்தில் இருப்பதாக அமெரிக்க புவியியல் மையம் கூறியுள்ளது.

சேதாரங்கள் குறித்த எந்த தகவலும் உடனடியாக கிடைக்கவில்லை. உலகில் அதிக தாமிரம் உற்பத்தி செய்யும் இப்பகுதி சுரங்கம் பாதிக்கப்பட்டிருக்கும் என்று அஞ்சப்படுகிறது. சுனாமி வருவதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

 கடந்த 3 வருடங்களுக்கு இங்கு எற்பட்ட 8.8 ரிக்டர் அளவிலான பூகம்பத்திற்கு நூற்றுக்கணக்கானோர் இறந்தது குறிப்பிடத்தக்கது.


thamilan thanks

மொசம்பிக் வெள்ளப்பெருக்கு - இறந்தோர் எண்ணிகை 80 ஆக உயர்வு


மொசம்பிக் வெள்ளப்பெருக்கு -  இறந்தோர் எண்ணிகை 80 ஆக உயர்வு

January 31, 2013  03:57 pm

ஆப்ரிக்க நாடான மொசாம்பிக்கில் கடந்த ஒரு வார காலமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள தாழ்வான பகுதி லிம்பொபோ ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

'கமல்ஹாசன் எனக்கு எதிரியல்ல' : ஜெயலலிதா




(File Photo)
விஸ்வரூபம் திரைப்பட விவகார குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் தெரிவிக்கையில் 'தமிழகத்தின் முதல்வராக தன்னால் செய்யப்பட வேண்டிய முதலாவது கடமை மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதும், மக்களின் தினசரி வாழ்க்கைக்கு எந்த இடையூறும் ஏற்பாடாது பாதுகாப்பதுமே.  இது அதிகமான மக்களுக்கு புரிந்த மாதிரி தெரியவில்லை.

Wednesday 30 January 2013

புதிய தலைமை செயலக கட்டிடத்தில் நவீன மருத்துவமனை செயற்படத் தொடக்கம்



சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய தலைமை செயலக கட்டிடத்தில், பன் நோக்கு நவீன மருத்துவமனை செயல்படத் தொடங்கியுள்ளது. தமிழக அரசு தீவிர  முயற்சி எடுத்து இந்த நவீன மருத்துவ மனைபிரிவை உருவாக்கியுள்ளது.

மலேசிய மாணவர்களுக்கான இந்திய அரசாங்கத்தின் 2013-2014ஆம் ஆண்டிற்கான கல்வி உபகாரச் சம்பளம்



மலேசிய மாணவர்களுக்கான இந்திய அரசாங்கத்தின் 2013-2014ஆம் ஆண்டிற்கான கல்வி உபகாரச் சம்பளம்
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 30 –இந்திய அரசாங்கம் மலேசிய இந்திய மாணவர்களுக்கு கல்வி உபகாரச் சம்பளம் வழங்க முன்வந்துள்ளது. இளங்களை பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஆய்வுகளை மேற்கொள்ளவிருக்கும் இந்திய மாணவர்களுக்கு மொத்தம் 8 உபகாரச் சம்பளங்கள் வழங்கப்படவுள்ளன.

பத்திரிக்கை சுதந்திர பட்டியலில் மலேசியாவிற்கு 145-வது இடம் !



பத்திரிக்கை சுதந்திர பட்டியலில் மலேசியாவிற்கு 145-வது இடம் !
கோலாலம்பூர், ஜனவரி 30- 2013-ஆம் ஆண்டிற்கான உலக பத்திரிக்கை சுதந்திரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் மலேசியா 145 இடத்தை வகிக்கின்றது.
“Reporters Without Borders” எனும் நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
2010-ஆம் ஆண்டில் 141-வது இடத்தையும், 2011/2012-ஆம் ஆண்டில் 122-2222122-வது இடத்தையும் வகிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தகவலைப் அணுகுவதில் கட்டுப்பாட்டில் இருப்பதே இந்த சரிவிற்கு காரணமாக கருதப்படுகிறது. (access to information “becoming more and more limited”)
மேலும் சில விஷயங்களில் குறித்த தகவல்களை அரசாங்கம் தணிக்கை செய்வதும் மற்றொரு காரணமாகும். குறிப்பாக கடந்த வருடம் நடத்தப்பட்ட “Bersih” பேரணிகளின் போது, பத்திரிக்கையாளர்களின் கேமிராக்களும், அவற்றின் ‘மெமோரி” கார்ட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது போன்றவை பத்திரிக்கை சுதந்திரம் மறுக்கப்பட்டதையே குறிக்கின்றன என இந்நிறுவனம் குறிப்பிட்டது.
அண்டை நாடுகளான தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா வரிசையே 135-வது இடத்தையும் 139-வது இடத்தையும் பிடித்திருந்தன.

vanakkammalaysia thanks

பெண்களின் முன்னேற்றத்திற்கு வழிகோலும் மாற்றங்களை ஏற்படுத்துவோம்!



பெண்களின் முன்னேற்றத்திற்கு வழிகோலும் மாற்றங்களை ஏற்படுத்துவோம்!
கோலாலம்பூர், ஜனவரி 30- பெண் என்பவர் தாயார், மனைவி, பணியாளர் என பல்வேறு பொறுப்புகளை வகிக்கிறார். நாட்டின் கண்களாக விளங்கும் அவர்களை நாம் மதிப்பது அவசியமாகும். பெண்களின் பொறுப்புகளை எளிதாக்குவது குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.

சிரியாவில் 79 மனிதப் படுகொலை: வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்!



on 30 January 2013.
சிரியாவில் நடைபெறும் வன்முறையின் உச்சக் கட்டமாக நேற்று, போர் விதிமுறைகளை மீறி மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 79 பேரின் சடலங்கள் சிரியாவின் வடக்கேயுள்ள முக்கிய வர்த்தக நகரான அலெப்போவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கைகள் கட்டப் பட்ட நிலையில்...

தடை தொடரும்' : நீதிமன்றம், 'சில காட்சிகளை நீக்கத் தயார்' : கமல்ஹாசன்



விஸ்வரூபம் படத்தின் மீதான தமிழக அரசின் தடை தொடரும் என உயர் நீதிமன்றம் இன்று  அறிவித்துள்ளது.

Tuesday 29 January 2013

சைவ பிரியாணி கேட்ட வைஷ்ணவி கோவில் பக்தருக்கு எலி பிரியாணி வழங்கிய இரயில்வே நிர்வாகம்.


30  January  2013  
www.thedipaar.comகாஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சென்று திரும்பிய பக்தர்களுக்கு ரயிலில் எலி பிரியாணியை வழங்கியது ரயில்வே நிர்வாகம்.

மெரினா கடற்கரையின் அழகை சீர்குலைக்கும் கடைகளை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை.


30  January  2013  
www.thedipaar.com

மெரினா கடற்கரையில் கடைகள் நடத்த இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மெரினா கடற்கரை

சென்னையை சேர்ந்தவர் கே.பாலாஜி. காந்திஜி நுகர்வோர் அமைப்பின் தலைவரான இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறி இருப்பதாவது:–சென்னை மெரினா கடற்கரை உலகத்திலேயே 2–வது மிக நீளமான, அழகான கடற்கரை ஆகும். இந்த கடற்கரையின் புனிதம் மற்றும் அழகை பாதுகாக்கவும், மெரினா கடற்கரையை சர்வதேச தரத்துக்கு உயர்த்தவும் கடற்கரை பகுதிகளில் எந்தவித கட்டிடத்துக்கும் அனுமதி அளிப்பது இல்லை என்று 2006–ம் ஆண்டு அரசு முடிவு எடுத்தது. தற்போது மெரினா கடற்கரை பகுதியில் 100–க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

விஸ்வரூபம் பிரச்சனை: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி புது உத்தரவு



E-mail Print PDF
விஸ்வரூபம் பிரச்சனை: நீதிபதி வெங்கட்ராமன் தீர்ப்பை நாளை காலை 10:30 வரை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை  நீதிபதி திடீர் உத்தரவு

Monday 28 January 2013

அமெரிக்க தூதருடன் டெசோ பிரதிநிதிகள் சந்திப்பு: தீர்மான நகல் ஒப்படைப்பு



ஜனவரி 29, 2013  at   11:34:26 AM
 
அமெரிக்க தூதர் நான்ஸி பவலை, திமுக பொருளாளர் முக.ஸ்டாலின் தலைமையிலான டெசோ பிரதிநிதிகள் குழுவினர் டெல்லியில் சந்தித்தனர்.
அப்போது டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை அவரிடம் அளித்தனர். இன்று காலை 9.15 மணியளவில், இந்த சந்திப்பு நடைபெற்றது. சுமார் 45 நிமிடங்கள் வரை சந்திப்பு நீடித்தது.

கைவிடப்படும் மன நோயாளிகள்: அதிகரிக்கும் சமூக அவலம்



ஜனவரி 29, 2013  at   9:09:14 AM
 
கோடிக்கணக்கில் வருமானம், நவபாஷண சிலை, சித்தர்கள் வாழ்ந்த பூமி என்றுதான் பழனி மலை குறித்து பெரும்பாலோனோர் அறிந்திருப்பார்கள். ஆனால் அங்கு சத்தமில்லாமல் மனசாட்சியற்ற செயல்பாடுகளும் அரங்கேறி வருகின்றன.

டெல்லியில் மாணவி வழக்கு - 6வது குற்றவாளி மைனர்தான்


டெல்லியில் மாணவி வழக்கு - 6வது குற்றவாளி மைனர்தான்

January 29, 2013  12:11 pm

டெல்லியில் மருத்துவ மாணவி பலாத்கார, கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6வது குற்றவாளி மைனர்தான் என்று சிறார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடும்பத் தகராறில் 5 மாத குழந்தையை கடித்து குதறிய தந்தை கைது!


குடும்பத் தகராறில் 5 மாத குழந்தையை கடித்து குதறிய தந்தை கைது!
January 29, 2013  09:02 am
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் பிகானர் நகரில், குடும்பத் தகராறு காரணமாக, குழந்தையைக் கடித்துக் குதறிய தந்தை, குழந்தை பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

விண்வெளிக்கு வெற்றிகரமாக குரங்கினை அனுப்பியது ஈரான் (வீடியோ இணைப்பு)

[ செவ்வாய்க்கிழமை, 29 சனவரி 2013, 03:41.04 மு.ப GMT ]
விண்வெளிக்கு குரங்கினை அனுப்பி வெற்றிகரமாக ஈரான் சோதனை நடத்தியுள்ளது.

ஜெஸிந்தாவின் தற்கொலைக்கு காரணமான ரேடியோ நிகழ்ச்சி ரத்து

[ செவ்வாய்க்கிழமை, 29 சனவரி 2013, 04:14.41 மு.ப GMT ]
லண்டனில் மருத்துவ தாதி தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்த அவுஸ்திரேலிய ரேடியோ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது

உதட்டோடு உதடாக முத்தம் கொடுக்கும்போது மரபணுவும் பரிமாறப்படுகிறது. ஆய்வில் அதிர்ச்சி தகவல்.

29  January  2013  05:27:59 AM  படித்தவர்கள்: 40
www.thedipaar.com
சுலோவேகியா நாட்டின் பிரெட்டிஸ்லாவா மாகாணத்தில் அமைந்த காமேனியஸ் பல்கலை கழகத்தை சேர்ந்த நடாலியா காமோடையோவா மற்றும் அவரது தலைமையிலான குழு இணைந்து மேற்கொண்ட ஆய்வில், காதலர்கள் வாய்வழி முத்தம் பரிமாறி கொள்ளும்போது, பாக்டீரியாவுடன் மரபணுவும் சேர்ந்து பரிமாறப்படுகின்றன என்று கண்டறிந்துள்ளனர். 

கோவை மக்கள் உரிமை மாநாட்டுக்காக ஐந்து கோரிக்கை பற்றிய பிரசார படம்


Monday, 28 January 2013 18:05 administrator

E-mail Print PDF



விஸ்வரூபம் திரைப்படம் - புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேரா. எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் (வீடியோ)


Monday, 28 January 2013 17:57 administrator

E-mail Print PDF

Last Updated ( Monday, 28 January 2013 18:04 )  

Sunday 27 January 2013

கடலுக்கு அடியில் இருந்து சென்று தாக்கும், இந்திய ஏவுகணை சோதனை வெற்றி! வல்லரசு நாடுகள் பட்டியலில் இணைந்தது இந்தியா!!


கடலுக்கு அடியில் இருந்து சென்று தாக்கும் ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
இந்தியா தனது பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் பல்வேறு வகையிலான ஏவுகணைகளை உள்நாட்டில் உருவாக்கி சோதித்து வருகிறது. இந்த வகையில், ஐதராபாத் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு கடலில் இருந்து ஏவப்பட்டு ஆயிரத்து 500 கிலோ மீட்டர்  தொலைவுக்கு சென்று தாக்கக்கூடிய பி.ஓ.5 என்ற ஏவுகணையை உருவாக்கியுள்ளது. இந்த ஏவுகணையை நீர்மூழ்கிக்கப்பலில் இருந்து ஏவி, எதிரியின் இலக்கை அழிக்கும் ஆற்றல் வாய்ந்ததாகும்.

சமையல் எரிவாயு உருளை விலையை நிர்ணயிக்க, விரைவில் புதிய கொள்கை! பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தகவல்!!


சமையல் எரிவாயு உருளை விலையை ஒரே மாதிரியாக நிர்ணயிப்பது தொடர்பாக விரைவில் புதிய கொள்கை வகுக்கப்படும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பு : கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்



ஜனவரி 28, 2013  at   12:24:22 PM
 
தமிழகத்திற்கு குறைந்தபட்சமாக 12 டிஎம்சி நீரை காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
கர்நாடகா அரசு வழக்கம் போல், காவிரி அணைகளில் இருக்கும் தண்ணீர் கர்நாடக அரசின் பயன்பாட்டுக்கே போதுமானதாக இல்லை, குடிப்பதற்கு மட்டுமே காவிரி அணைகளில் தண்ணீர் இருக்கிறது என தெரிவித்தது.
தமிழக அரசுக்கு 6 டி.எம்.சி., தண்ணீராவது கொடுக்க முடியுமா என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்ட போது அதுவும் முடியாது என கர்நாடக அரசு தெரிவித்தது.

ஆசிரியர் உண்டு மாணவர் இல்லை! தமிழக அரசுப் பள்ளிகள் நிலை



ஜனவரி 28, 2013  at   9:20:48 AM
 
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருவதாக கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளதாக சமகல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.

விஸ்வரூபத்திற்கு தடை விதிக்கவேண்டும் – அகில இந்திய முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை!



protest-against-kamal-haasans-film-intensifies
புதுடெல்லி:புனித திருக்குர்ஆனை அவமதிக்கும் விதமான காட்சிகள் அடங்கிய கமலஹாசனின் விஸ்வரூபம் என்ற திரைப்படம் திரையிடுவதற்கு இந்தியா முழுவதும் தடை விதிக்கவேண்டும் என்று அகில இந்திய அளவில் முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பான மூவ்மெண்ட் ஃபார் சிவில் ரைட்ஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

பங்களாதேஷ் ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து: 7 பெண்கள் உடல் கருகி பலி!



on 27 January 2013.
பங்களாதேஷில் உள்ள ஆடைகள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பெண்கள் உடல் கருகி பலியாகினர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வங்கதேச தலைநகர் டாக்கா அருகே உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 112 பேர் பலியாகினர்.

பிரேசில் இரவு விடுதியில் பயங்கர தீ விபத்து: 200 பேர் பலி

[ ஞாயிற்றுக்கிழமை, 27 சனவரி 2013, 01:12.44 பி.ப GMT ]
பிரேசில் நாட்டின் சாண்டா மரியா நகரில் 'கிஸ் நைட் கிளப்' என்ற இரவு விடுதியில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 200க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த இரவு விடுதியில் நடந்த இசை கச்சேரியில் நிகழ்த்தப்பட்ட வான வேடிக்கையால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தனியார் பெட்ரோல் பங்குகளில் டீசல் நிரப்பி செல்லும் மாநகர பேருந்துகள்



சென்னை மாநகர அரசு பேருந்துகள் தனியார் பெட்ரோல் பங்குகளில் டீசல் நிரப்பி செல்கின்றதாகவும்,  மொத்த கொள்முதல் டீசல் விலையை விட, சில்லறை கொள்முதல் டீசல் விலை குறைவாகவே இருப்பதே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

11 வயது சிறுமியை விபச்சார கும்பலிடம் விற்ற தாய்!


11 வயது சிறுமியை விபச்சார கும்பலிடம் விற்ற தாய்!
January 27, 2013  02:11 pm
ராஜஸ்தான் மாநிலம் டான்க் பகுதியில் ஒரு பெண், தனது 11 வயது மகளை 6லட்சத்துக்கு ஒரு விபச்சார கும்பலிடம் விற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவலர்கள் துணையுடம் அந்தச் சிறுமி தப்பினார். இதனால் இந்தத் தகவல் வெளியே தெரியவந்துள்ளது.

அஸ்ஸாமில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்!



8-ied-blasts-rock-assams
குவஹாத்தி:அஸ்ஸாம் மாநிலம் கோல்பரா மற்றும் துப்ரி மாவட்டத்தில் நேற்று அடுத்தடுத்து 8 இடங்களில் குண்டு வெடித்தது. உல்பா தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் தகவல்கள் இதுவரைக் கிடைக்கவில்லை

Saturday 26 January 2013

நெடுஞ்சாலையில் சங்கிலித் தொடர் போல விபத்து: பல மணி நேரம் போக்குவரத்து தடை

[ சனிக்கிழமை, 26 சனவரி 2013, 11:42.40 மு.ப GMT ]
தெற்கு ஓண்ட்டேரியாவின் நெடுஞ்சாலையான 401 இல் நேற்று பிற்பகலில் பனிப்பொழிவினால் சங்கிலித் தொடர்போல கார்கள் மோதிக் கொண்டன.

எகிப்தில் கலவரம் - 26 பேர் பலி


 எகிப்தில் கலவரம் - 26 பேர் பலி


January 27, 2013  08:59 am
எகிப்தில் சென்ற ஆண்டு போர்ட் செய்யது என்ற கடலோர நகரில் கால்பந்தாட்டம் ஒன்றின்போது நடந்த 70 பேருக்கும் அதிகமானோரை பலிகொண்ட வன்முறை தொடர்பில் அந்நாட்டின் நீதிமன்றம் 21 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

கமல்ஹாசன் கருத்துக்கு தமுமுக கண்டனம்



E-mail Print PDF

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜே.எஸ். ரிபாயி வெளியிடும் கண்டன அறிக்கை: