எல்லாக் காலத்திலும், எல்லா மனிதர்களுக்கும் பெரும் சவாலாக, பெரும் அதிசயமாக, உண்மையான அதிசயமாக இருப்பது வாழ்க்கைதான். அந்த அதிசயத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் புரிந்துகொள்ள முயல முடியும். அப்படியான ஒரு முயற்சிதான் விநாயக முருகனுடைய ராஜீவ் காந்தி சாலை நாவல்.
பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Sunday, 22 October 2017
Wednesday, 11 October 2017
அன்புள்ள காந்திக்கு
அன்புள்ள காந்திக்கு ஆசையில் ஓர் கடிதம்! பண்புள்ள இந்தியா உருவாகும் என்ற நம்பிக்கையில் சுதந்திரத்தை மீட்டீர்! நீவீர் சுடப்பட்டு இறக்கும்போது அந்நம்பிக்கை மோசம் போனது! அஹிம்சையை போதித்த உமக்கு ஹிம்சையான ஓர் மரணம்! அப்போதே துளிர்த்துவிட்டது இந்தியாவில் அசத்தியமும் வன்முறையும் இலஞ்சமும்! மெய் வருந்தி நீங்கள் பெற்ற சுதந்திரங்கள் பொய்யே உருவான மனிதர்களால் மீண்டும் அடிமையாக்கப்பட்டு மடிந்தது! அஞ்சல் தலைகளிலும் ரூபாய் நோட்டுக்களிலும் பாடப்புத்தகத்திலும் தேசப்பிதாவாக நீர்! அக்டோபர் இரண்டு மட்டும் இரண்டு நிமிடம் உன்னை நினைப்பர் போனால் போகிறதென்று! மதுவிற்கு எதிராய் இன்று மாதர்கள் கூடி மாபெரும் போர் நடத்த வேண்டியிருக்கிறது! ஏழைகள் மேலும் ஏழைகளாகவே இருக்க! பேழைகளில் பெரும் செல்வம் சேர்த்துக்கொள்கின்றனர் மாநிலம் ஆள்வோர்! மக்கள் நலமெல்லாம் மறந்து போய் தன்னலம் ஒன்றே குறிக்கோளாய் கொண்டு கோலோச்சும் ஆட்சியாளர்கள் மறக்காமல் உன்னை ஒவ்வொருவருடமும் மாலையிட்டு ஆராதிக்கிறார்கள்! மகிழ்ச்சி பொங்க மீண்டும் பிறந்துவிடாதே! சூழ்ச்சிகளுக்கு நீயும் பலியாவாய்! காந்தி தேசம் இப்போது காவி தேசமாகி வருகிறது! உன் மீதும் வர்ணம் பூசிவிடுவார்கள்! உத்தமரே! சத்தியம் மெல்ல இறக்கும் தருவாயில்; சாட்சியாக சிலையாக பார்த்துக்கொண்டிரும்! பாரதம்! சுதந்திர பாரதம்! உன் கனா எல்லாம் இப்போது வினாவாகி வீணாகிப்போகிறது! உன் ஆயுதம் அஹிம்சை இப்போது முனை மழுங்கிக்கிடக்கிறது! கூர் தீட்டவும் போரெடுக்கவும் யாரும் இல்லை! உன் உயிரை எடுத்தவர்கள் உன் கொள்கைகளையும் உன் உடலோடு புதைத்துவிட்டார்கள்! மீட்டெடுக்க வா! மீட்டெடுக்க வா!
thanks thalirssb news
காந்திக்கு ஒரு கடிதம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு
Subscribe to:
Posts (Atom)