- Wednesday, 23 January 2013 07:49

கர்நாடக அமைச்சர்கள் 2 பேர் இன்று தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
சட்டப் பேரவை சபாநாயகர் வெளிநாடு சென்றுள்ளதால், ராஜினமா கடிதம் ஷட்டருக்கு அனுப்பிவைக்கப் பட்டதாகவும் தெரிகிறது.
கர்நாடக ஜனதா என எடியூரப்பா புதுக் கட்சித் துவங்கியதில் இருந்து, அவருக்கு ஆளும் பாஜக எம் எல் ஏ மற்றும் அமைச்சர்களின் ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் மின்வாரியத்துறை அமைச்சர் ஷோபா, பொதுப்பணித்துறை அமைச்சர் உதாசி இருவரும் தங்களது ராஜினாமா கடித்தத்தை முதல்வர் ஜகதீஷ் ஷட்டருக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஷட்டரும் இருவரின் ராஜினமா கடிதம் தன்னிடம் வந்திருப்பதை உறுதி செய்துள்ளார்.
மேலும் 2 அமைச்சர்கள், 23 எம் எல் ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், தற்போது சபாநாயகர் வெளிநாடு சென்று இருப்பதால், ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் ஒப்படைக்கலாமா என்று உதாசியின் வீட்டில் தற்போது ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. இதனால் கர்நாடகாவில் பாஜக தலைமையிலான ஷட்டரின் ஆட்சி கவிழும் நிலை ஏற்படும் என்றும் தெரிய வருகிறது.
4tamilmedia. THANKS
No comments:
Post a Comment