அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday, 2 January 2013

சிவகாசியில் அச்சகத்தில் பயங்கர தீ விபத்து: ஜன்னல் வழியாக குதித்து பெண்கள் உயிர் தப்பினர்


சிவகாசி, ஜன.3-

சிவகாசி பகுதியில் மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய அளவிலான அச்சகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு காலண்டர், டைரி, நோட்டு புத்தகம், விளம்பர கார்டுகள் என பல்வேறு வகையான பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் பள்ளி புத்தங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் பெரும்பாலும் சிவகாசியில் உள்ள பெரிய அச்சகங்களில் தான் தயாரிக்கப்படுகிறது.

சிவகாசி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட விஸ்வநத்தம் ரோட்டில் உள்ள ஒரு அச்சகத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் நேற்று காலை வழக்கம் போல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அந்த கட்டிடத்தின் வெளிபுறத்தில் அச்சக விரிவாக்கபணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு இரும்பு கம்பிகளுக்கு வெல்டிங் வைக்கும்போது, அதில் இருந்து சிதறிய தீப்பொறி அருகில் இருந்து குடோனில் விழுந்தது. இதை யாரும் கவனிக்கவில்லை. அந்த தீ குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் மற்றும் பேப்பர்கள் மீது பட்டு எரிய தொடங்கியது.

அச்சகத்தின் பல்வேறு பகுதியில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். முதல் மாடியில் உள்ள ஒரு அறையில் நோட்டு புத்தகம் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ராஜம் (வயது 52), சாரதா (28), மகாலட்சுமி (29) ஆகியோர் வெளியேற முடியாமல் தவித்தனர். அப்போது அந்த அச்சகத்தில் பணியாற்றி வரும் சிலர் ஜன்னல் கம்பிகளை உடைத்தனர். அதன் வழியே அந்த 3 பெண்களும் வெளியேறி உயிர் தப்பினர். அதே போல் இன்னொரு அறையில் சிக்கிய சக்கையா என்ற தொழிலாளியும் எந்த காயமும் இன்றி உயிர்தப்பினார்.

இந்த தீவிபத்து குறித்து தகவல் கிடைத்தும் தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்து 3 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் அச்சகத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த விபத்தில் அந்த கட்டிடம் முழுவதும் சேதமானது.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.  

maalaimalar. thanks

No comments:

Post a Comment