ரஷ்யாவில் விழுந்தது விண்கல்: 1,100 பேர் படுகாயம்(வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2013,
ரஷ்ய தலைநகர்
மாஸ்கோவிலிருந்து 1,500 கி.மீ.தொலைவில் அமைந்துள்ள செலியாபின்ஸ்க் பகுதியில்
விழுந்த விண்கல்லால் இதுவரை 1,100 படுகாயமடைந்துள்ளனர்.
கால்பந்து மைதானத்தின் பாதி அளவு கொண்டதாக உள்ள விண்கல், இன்று இரவு பூமியை
கடந்து செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரஷ்யாவில் அக்கல்
விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விண்கல் விழுந்தநேரத்தில் மிகப்பெரிய வெடி சப்தம் கேட்டதாகவும் புகைமண்டலத்துடன்
கூடிய தீப்பிழம்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
யூரல் என்ற பகுதியில் விழுந்த விண்கல் காரணமாக வீடுகளில் உள்ள கண்ணாடிகள்
மற்றும் மேற்கூரைகள் விழுந்தன. இதனால் 500க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தனர்.
மேலும் செல்போன் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.
2ம் இணைப்பு
ரஷ்யாவின் தென்பகுதியில் விண்கல் விழுந்து வெடித்ததினால் காயமடைந்தவர்களின்
எண்ணிக்கை 1,100 ஆக அதிகரித்துள்ளது என்று அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
விஞ்ஞானிகள் கணிப்பின்படி 10 தொன் எடையில் இரண்டு மீற்றர் நீளமான எரிநட்சத்திரமே
இவ்வாறு வெடித்து சிதறியுள்ளது.
No comments:
Post a Comment