அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday 27 February 2013

தாலிபான்களை தீவிரவாதி என்று சொல்ல நீ யார்?'' கமல்ஹாசனைச் சீண்டும் சீமான்


 February  2013    
திரைத் துறை ஒரு சமூகப் பார்வை’ என்னும் தலைப்பில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சமீபத்தில் சென்னையில் நடத்திய கருத்தரங்கம், சமூகப் பொறுப்புடன் திரைப்படம் எடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது. 
கருத்தரங்கத்துக்கு தலைமை வகித்த பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில், '' 1992-ம் ஆண்டுக்குப் பிறகு, முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவே சித்திரிக்கிறது தமிழ் சினிமா. சமூகத்தில் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் முஸ்லிம்களின் அடையாளத்தைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. இதைப் போக்க கலையுலகம் முயற்சிக்க  வேண்டும்'' என்றார்.


எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி, ''முஸ்லிம்களுக்கு திரைத் துறையினருடன் மோத வேண்டும், விவாதம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. முஸ்லிம்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்காத வகையில் படம் எடுத்தால், நாங்கள் ஏன் அதைத் தடுக்கப்போகிறோம்?'' என்று கேட்டார்.

www.thedipaar.com

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குனர் அமீர், ''திரைப்படங்களில் இஸ்லாமியர்​களைத் தொடர்ந்து தவறாகச் சித்திரிக்கிறார்கள். இதை ஓரிரு நபர்கள் மட்டுமே திட்டமிட்டுச் செய்கிறார்கள். 'விஸ்வரூபம்’ படத்துக்கு எதிர்ப்பு என்பது சரியான நேரத்தில் சரியான முறையில் கொடுக்கப்பட்டதுதான். ஆனால், அந்தப் படத்துக்குத் தடை என்று வேகமாகப் போனது சரியில்லை. ஏனென்றால், கமல் இல்லை என்றால், இன்னொருவர் எடுப் பார். அல்லது வேறொருவர் எடுப்பார். அவர்கள் வேலையை அவர்கள் செய்துகொண்டே இருப்பார்கள். ஆனால், நமது வேலையை நாம் செய்ய வேண்டும். எது இஸ்லாமிய வாழ்க்கை, சமூகத்தில் இஸ்லாமியரின் பங்கு என்ன? இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியரின் பங்கு என்ன? இஸ்லாமிய மார்க்கம் என்ன சொல்கிறது? என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். அதை விட்டுவிட்டு 'விஸ்வரூப’த்துக்காக மட்டும் போராடுவது என்பது வேதனையான விஷயம். எல்லாவற்றுக்கும் போராட வேண்டும்'' என்றார்.

நாம் தமிழர் கட்சியின் சீமான் பேச்சு அனை​வரையும் உணர்ச்சிமயமாக்கியது. ''எந்த மதத்தில்தான் தீவிரவாதம் இல்லை. குஜராத்தில் நடந்த கலவரம் எந்த மதத் தீவிர​வாதம்? கோத்ரா ரயில் எரிப்பு எந்த மதத் தீவிரவாதம்? இந்திரா காந்தியைச் சுட்டது சீக்கிய மதத் தீவிரவாதம். காந்தியைச் சுட்டது இந்து மதத் தீவிரவாதம். ஒசாமா பின்லேடன் போய் அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தது இஸ்லாமியத் தீவிரவாதம் என்றால், அதற்குப் பதிலாக ஈராக்கையும் ஆப்கானிஸ்தானையும் அடித்தது கிறிஸ்துவ மதத் தீவிரவாதம். தமிழனைக் கொன்றது பௌத்தத்தைத் தாங்கி நிற்கும் சிங்களத் தீவிரவாதம்.

குஜராத்தில் நடந்த கலவரத்தில் 3,000 பேர் கொன்றொழிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதில் ஒருவர், 'நான் 300 பேரைக் கொன்றிருக்கிறேன்’ என்று பெருமிதத்தோடு முழங்குகிறார். கர்ப்பிணியின் வயிற்றைக் கீறி குழந்தையை வெளியில் எடுத்து வீசுகிறான். இதைப் பதிவுசெய்தால் எந்த மதத்தின் தீவிரவாதமாக வரும்? இப்படி ஒரு படத்தை எடுக்க கருத்துச் சுதந்திரம் இருக்குமா? பௌத்த சிங்களத் தீவிரவாதம் செய்ததை இன்று எல்லாத் தொலைக்காட்சியும் காட்டுகிறது. இதைப்பேச, பட மெடுக்க யாராவது உண்டா? படம் எடுத்தால், தணிக்கைத் துறை அனுமதிக்குமா? படத்தைத் திரையிட ஆள் உண்டா? வஞ்சிக்கப்படுகிற சிறுபான்மை மக்களுக்கு எல்லாம் இது நடக்கும்.

சதாம் உசேனைக் கொல்ல நினைத்து உள்ளே புகுந்த அமெரிக்கா கொன்று குவித்த குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் இரண்டு லட்சம். இதைப்பேச யாரும் இல்லை. தாலிபன் தீவிரவாதியா, இல்லையா என்பதை அந்த மக்களிடம்தான் கேட்க வேண்டும். நீ இங்கிருந்து கருத்துச் சொல்ல முடியாது. தங்கள் மண் ணின், மக்களின் உயிருக்கான போராட்டம் இது என்று தலிபான்கள் சொல்லி விட்டனர். அதைத் தீவிரவாதம் என்று சொல்ல நீ யார்?

கமல்ஹாசனை எல்லோரும் பெரிதாக மதிக்கிறோம். பாபர் மசூதியை இடித்தபோது அதற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்த முதல் கலைஞன் கமல்ஹாசன்தான். அன்றைக்கு இதே சமூகமக்கள் அவரைப் பெரிதாகக் கொண்டாடினர். ஆனால், 'விஸ்வரூபம்’போல படம் எடுத்ததில் சில சங்கடங்களும் இருக்​கின்றன.

கமல் நஷ்டப்பட்டுப் போனேன் என்றவுடன், வீட்டுப் பத்திரம், கையெழுத்திட்ட வெற்றுக் காசோலை என்று லட்சக்கணக்கான பேர் அனுப்பி இருக்கிறார்கள். ஆனால், 554 மீனவர்கள் இறந்து போயிருக்கிறார்கள். அந்தத் தமிழச்சிகளுக்கு ஒற்றை ரூபா காசு யாரும் அனுப்பவில்லை. காவிரியில் தண்ணீர் வராததால் இறந்த 19 விவசாயிகள் குடும்பங்களுக்கு ஒரு ஆயிரம் ரூபாய் அனுப்பினார்களா என்றால் இல்லை'' என்றார் கொந் தளிப்பாக.

மறுபடியும் பிரச்னை ஏற்படாமல் இருந்தால் சரி!

 news thedipaar. thanks

No comments:

Post a Comment