அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 16 February 2013

மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் இசை

மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் இசை
[ ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2013, 
இளம் வயதில் இசை கற்பது, மூளை வளர்ச்சிக்கு உதவும் என கனடாவில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. கனடாவில், கான்கார்டியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மூளையின் செயல்பாடு பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் இளம் வயதில் குறிப்பாக, ஏழு வயதுக்கு முன்பு இசை கற்றவர்களும் இளம் வயதை கடந்த பின் இசை கற்க தொடங்கியவர்களும் கலந்து கொண்டனர். இவர்களுடன் சிறிதளவு இசை கற்றவர்கள் அல்லது இசையே கற்காதவர்கள் ஒரு அணியாக பங்கேற்றனர். இவர்களுக்கு இடையே செயல்பாட்டு திறன் எவ்வாறு உள்ளது என ஆராயப்பட்டது.
இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களில் ஏழு வயதுக்கு முன், இசைக் கருவிகளை கற்றவர்களின் மூளைகளில் செயல்பாட்டு திறன் சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அச்சு பிசகாமல் இசை கருவிகளை வாசித்து பாராட்டு பெற்றனர்.
அதே சமயம் இளம் வயதை கடந்த பின் இசை கற்றவர்கள் மற்றும் இசையே கற்காதவர்களின் மூளைகளில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
இந்த ஆய்வின் மூலம் இளம் வயதில் இசை கற்பதால் மூளையின் செயல்பாடு சிறப்பாக அமையும் என கண்டறியப்பட்டுள்ளது.

newsonews. thanks

No comments:

Post a Comment