பறவைக் காய்ச்சல்: மெக்சிகோவில் 10 லட்சம் கோழிகள் அழிப்பு
[ சனிக்கிழமை, 02 மார்ச் 2013,
மெக்ஸிகோவில் பறவைக் காய்ச்சலால்
பாதிக்கப்பட்ட சுமார் 10 லட்சம் கோழிகள் அழிக்கப்பட்டுள்ளன.
குஹான்ஜுஹாடோ மாகாணத்தில் செயற்பட்டு வரும் 18 கோழிப் பண்ணைகளில் பறவைக்
காய்ச்சல் தொற்று கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமான ஹெச்7என்3 வைரசால்
மனிதர்களுக்கு எவ்வித தீங்கையும் ஏற்படுத்தாது என மருத்துவர்கள்
தெரிவிக்கின்றனர்.
இதேவேளை நோய்த்தொற்று மேலும் பரவுவதை தடைசெய்யும் பொருட்டு சுமார் 2 மில்லியன்
கோழிகளுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரை அழிக்கப்பட்டுள்ள
கோழிகளின் எண்ணிக்கை தொடர்பில் முரண்பாடான தகவல்கள் வெளியாகிய வண்ணமுள்ளன.
மெக்ஸிகோவின் விவசாய அமைச்சரின் தகவலின் படி இதுவரை சுமார் 2.1 மில்லியன்
கோழிகள் அழிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 519,000 முட்டையிடும் கோழிகள், 722,265
வளர்ப்புக் கோழிகள், 900,000 இறைச்சிக்காக வளர்க்கப்படும் என்பன அடங்குகின்றன.
ஆனால் இதுவரை சுமார் 12 லட்சம் வரையான கோழிகளே அழிக்கப்பட்டுள்ளதாக வேறொரு
அதிகாரி கருத்து வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment