அமெரிக்காவின் தென் எல்லையில் அமைந்துள்ள மெக்சிகோ நாட்டிலிருந்து
அமெரிக்காவிற்கு போதைப்பொருள் கடத்துவதில் அங்குள்ள போதைப்பொருள் கடத்தல்
கும்பல்களிடையே மோதல்கள் நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று உருபான்
என்னுமிடத்தில், சுட்டுக்கொல்லப்பட்ட 7 பேரின் உடல்கள் சாலையோரத்தில் இருந்ததை
பொலீஸார் கண்டுபிடித்தனர். அவர்கள் அனைவரும் நெற்றியில் சுடப்பட்டு பின்னர்
நாற்காலியில் உட்காரவைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் அனைவரின் மார்பில்
சொருகப்பட்ட எச்சரிக்கை அறிவிப்புகளும் இருந்தன. அந்த அறிவிப்பில் கடத்தல்காரர்கள்,
திருடர்கள், பாலியல் குற்றவாளிகள் மற்றும் பணம் பறிப்பவர்களுக்கு இதுபோன்று தண்டனை
நிறைவேற்றப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
இது பக்கத்து
மாகாணமான குவெரெரோவில் மதுபான அரங்கில், சமீபத்தில் 7 பேர்
சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பழிக்குபழியாக நடந்து இருக்கலாம் என்று பொலீஸார்
கருதுகின்றனர். மெக்சிகோவில் போதைப்பொருள் கும்பல்களுடன் நடந்த மோதலில் கடந்த ஏழு
வருடங்களில் மட்டும் 70,000 -க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment