அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday 27 March 2013

தேர்தல் அரசியல் - பதவிசுகம் - நம்பிக்கைத் துரோகம்!



on 27 March 2013.
இந்திய ஊடகம் ஒன்று இலங்கை தொடர்பாக நடாத்திய கருத்துக் கணிப்பு இது. தமிழ் ஈழம், ஐ.நா. தீர்மானம், மாணவர் போராட்டம், மீனவர்கள் மீது தாக்குதல் என இலங்கைப் பிரச்னை சர்வதேச அளவில் பேசப்படுகிறது. மத்திய அரசின் பாராமுகத்துக்கு எதிராக தமிழகமே கொந்தளிக்கிறது. 

இன்னொரு பக்கம் மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகி இருக்கிறது. தமிழ்நாட்டு அரசியல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில் மக்களின் பல்ஸ் பார்க்கக் களம் இறங்கியது ஜூ.வி.  ‘மக்கள் மனசு’ என்ற தலைப்பில், சர்வே எடுக்க நமது நிருபர்கள் தமிழகம் முழுக்க வலம் வந்தனர். 3,083 பேரை நேரடியாகச் சந்தித்தது நமது சர்வே டீம்.


இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். விகடன் இணைய தளத்தின் வழியாகவும் சர்வே எடுக்கப்பட்டது. அதில் பங்கேற்றவர்கள் 2,286 பேர். மொத்தமாக 5,369 பேரிடம் எடுக்கப்பட்ட இந்த மெகா சர்வே மூலமாக தமிழ் மக்களின் மன ஓட்டத்தை அறியமுடிகிறது. ”சரியான நேரத்தில் சர்வே எடுக்க முடிவு செய்திருக்கீங்க” என்று ஆர்வத்துடன் கேள்விகளை எதிர்கொண்டனர் மக்கள்.


ஈழ விவகாரத்தை மாணவர்கள் போராட்டமாக முன்னெடுத்ததற்கு ஏகோபித்த வரவேற்பு இவர்களிடம் உள்ளது. பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொடூரமாகக் கொல்லப்பட்ட புகைப்படத்தைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மத்திய அரசு மீதும் தி.மு.க மீதும் மக்கள் மத்தியில் இருந்த கோபம், நமது சர்வே டீமிடம் வார்த்தைகளாக வந்து விழுந்தன.


‘இலங்கைப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு?’ என்கிற கேள்விக்கு பொட்டில் அடித்தாற் போல ‘தனி ஈழம்தான்’ என பெரும்பாலானவர்கள் கருத்துச் சொல்லி இருக்கின்றனர். இந்தியாவின் துணையோடுதான் இலங்கையில் இறுதிப் போர் நடந்தது என்று 71 சதவிகிதம் கருத்து தெரிவித்தனர். ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று சொன்னவர்கள் 88 சதவிகிதம் பேர்.


ஈழ விவகாரத்தில் கருணாநிதி எடுக்கும் முடிவுகள் தேர்தல் அரசியல் சார்ந்தது என 64 சதவிகிதம் பேர் டிக் அடித்துள்ளனர். அதே சமயம் ஜெயலலிதாவுக்கும் ஈழ விவகாரத்தில் பெரிதாக ஆதரவு இல்லை. இலங்கைத் தமிழர்களை ஆதரிப்பதில் உறுதியாக இருக்கும் கட்சி என்கிற கேள்விக்கு ம.தி.மு.க தான் முதல் இடத்தில் இருக்கிறது.

eutamilar thanks

No comments:

Post a Comment