அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday, 13 March 2013

கணினிகளில் தகவல்களை திருடும் சீனா - தடுப்பது குறித்து ஆலோசனை!


கணினிகளில் தகவல்களை திருடும் சீனா - தடுப்பது குறித்து ஆலோசனை! March 14, 2013  08:38 am
அமெரிக்க கம்ப்யூட்டர்களில் உள்ள ரகசிய தொழில் தகவல்கள், அமெரிக்காவுக்கு சொந்தமான தொழில்நுட்ப தகவல்கள், சீனாவிலிருந்து திருடப்படுவதாக அமெரிக்கா கூறியுள்ளது.


இதனால் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையேயான வர்த்தக உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டின் இணைய பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து அந்நாட்டின் தனியார் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் ஒபாமா ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை இன்று வெள்ளை மாளிகையில் நடைபெற உள்ளது.

இணையதள திருட்டு பிரச்சினைகளை அரசும் தனியாரும் இணைந்து எவ்வாறு எதிர் கொள்வது என்பது குறித்து அதிகாரிகள் தங்கள் யோசனைகளை தெரிவிக்க உள்ளனர். இதுகுறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாம் டோனிலன் கூறுகையில், இணையத்தின் மூலம் தகவல் திருடப்படுவது எங்களை கவலை கொள்ள வைக்கிறது. இந்த மாதிரியான நடவடிக்கைகளை எந்த நாடு செய்தாலும் அதனை உலக நாடுகள் பொறுத்துக் கொள்ளாது என்றார்.


thamilan thanks

No comments:

Post a Comment