ஏப்ரல் 30, 2013 at

இதுதொடரபாக பொதுநல மனு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையிலான அமர்வு, இவ்வாறு கூறியிருக்கிறது.
அரசியல்வாதிகள், சாதி மற்றும் மதத் தலைவர்கள் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசுவது, நாட்டின் ஒருமைப்பாட்டை பாதிக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
சாதி, மத மோதல்களை தூண்டும் இத்தகைய பேச்சுகள், நாட்டு மக்களுக்கும் நாட்டின் நலனுக்கும் நல்லதல்ல என கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், அவ்வாறு பேசுவதைத் தடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில், உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவோர் மீது தயக்கமின்றி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர்.
puthiyathalaimurai.tv thanks
No comments:
Post a Comment