தி

குமுளி, மே.1-
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் அனிஸ்குமார் (வயது38), செங்கனூரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (38), இடுக்கி மாவட்டம் தொடுபுழாவை சேர்ந்தவர் ஜேம்ஸ் (40), சங்கணாச்சேரியைச் சேர்ந்தவர் ஜோசப் ஜார்ஜ் (40) இவர்கள் 4 பேரும் கோட்டயம் அரசு மருத்துக்கல்லூரியில் டாக்டர்களாக பணிபுரிந்து வந்தனர்.
நேற்று இவர்கள் 4 பேரும் ஒரு காரில் இடுக்கி மாவட்டம் வாகமன் பகுதிக்கு சுற்றுலா வர முடிவெடுத்து வந்துகொண்டிருந்தனர். மலைப்பாதையில் இவர்கள் வந்துகொண்டிருந்தபோது கடும் பனி மூட்டம் நிலவியதால் எதிரில் வந்த வாகனங்கள் கண்ணுக்கு தெரியவில்லை. இதனால் கார் அருகில் இருந்த சுமார் 1000 ஆடி ஆழ பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. காரில் இருந்தவர்கள் மரண ஓலமிட்டனர். எனினும் அவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இதைப்பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் பதறிப் போய் வாகமன் புறக்காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பின் குமுளி, கட்டப்பணை, இடுக்கி ஆகிய பகுதிகளில் இருந்து போலீசாரும் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். நீண்ட போராட்டத்துக்கு பின்பு 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டது.
ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்த கார் சுக்குநூறாக நொறுங்கி உடைந்தது. மீட்கப்பட்ட 4 பேர் உடல்களும் கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டது. சுற்றுலா வந்த இடத்தில் 4 டாக்டர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆஸ்பத்திரி வளாகத்தில் டாக்டர்களும் பலியானவர்களின் உறவினர்களும் அதிக அளவில் கூடியதால் மிகுந்த சோகமான நிலை உருவானது.

maalaimalar thanks
No comments:
Post a Comment