
பெங்களூர்:கர்நாடகா மாநில சட்டப்பேரவை தேர்தலில் எஸ் .டி.பி.ஐயும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைந்து போட்டியிட்டன.எஸ்.டி.பி.ஐ 24 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 172 தொகுதிகளிலும் போட்டியிட்டன.இக்கூட்டணி சிறுபான்மை, ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் தொகுதிகளில் வாக்காளர்களிடம் போதிய செல்வாக்கைப் பெற்றுள்ளதை அக்கட்சிகள் பெற்ற வாக்குகள் குறித்த புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இக்கூட்டணியில் எஸ்.டி.பி.ஐயின் மாநில தலைவர் அப்துல் மஜீத் நரசிம்ஹ ராஜா தொகுதியில் போட்டியிட்டு 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.கொல்லேங்கள் தொகுதியில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.மகேஷ் 2-வது இடத்தைப் பிடித்தார்.இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜயண்ணா 47,402 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார்.மகேஷுக்கு 37,209 வாக்குகள் கிடைத்தன.கடந்த தேர்தலில் மகேஷுக்கு இத்தொகுதியில் 25 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன.இம்முறை வாக்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
எஸ்.டி.பி.ஐ-பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி மொத்தம் பெற்ற வாக்குகள் – 3,80,099
எஸ்.டி.பி.ஐ பெற்ற வாக்குகள் – 1,00,541
பகுஜன் சமாஜ் கட்சி பெற்ற வாக்குகள் – 2,80,458
எஸ்.டி.பி.ஐ பெற்ற வாக்குகள் – 1,00,541
பகுஜன் சமாஜ் கட்சி பெற்ற வாக்குகள் – 2,80,458
பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களில் 3 பேர் 3-வது இடத்தைப் பிடித்துள்ளனர்.காங்கிரசும், பா.ஜ.கவும் எஸ்.டி.பி.ஐ-பகுஜன்சமாஜ் கூட்டணிக்கு எதிராக கடுமையான அவதூறுப் பிரச்சாரங்களை தேர்தலின்போது பரப்புரைச் செய்தன.சிறுபான்மை வாக்குகளை பிரித்து பா.ஜ.கவை வெற்றிப் பெறச்செய்வதே இவர்களின் நோக்கம் என்று கூட காங்கிரஸ் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.காரணம், காங்கிரஸின் பாரம்பரிய வாக்கு வங்கிகளில் வீழ்ச்சி ஏற்பட்டுவிடும் என்ற பீதியே ஆகும்.எஸ்.டி.பி.ஐ-பகுஜன்சமாஜ் கட்சி கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் வீரசாந்திர முனியப்பா நன்றி தெரிவித்துள்ளார்.ஒடுக்கப்பட்ட மக்கள் சக்திபெறுவதற்காக இக்கூட்டணி தொடரும் என்று அவர் கூறினார்.
thoothuonline thanks
No comments:
Post a Comment