அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday, 29 May 2013

அக்னி வெயிலுக்கு “குட் பை” - இந்தியாவில் 543 பேர் பலி

[ புதன்கிழமை, 29 மே 2013, 04:55.00 AM GMT +05:30 ]
கோடை காலத்தின் உச்சகட்டமாகக் கருதப்படும் அக்னி நட்சத்திரம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
கடந்த 4ம் திகதி தொடங்கிய அக்னி நட்சத்திரம், கடந்த 25 நாட்களாக மக்களை வாட்டி வதைத்தது.
கோடை காலத்தில் காற்று வீசும் திசையைப் பொருத்து மாவட்டங்களின் வெப்ப நிலை இருக்கும். அதன்படி சில வாரங்களாக மேற்கு நோக்கி காற்று வீசியதால், சென்னை, வேலூர் உள்பட வட மாவட்டங்களில் வெயில் உக்கிரமடைந்தது.

சென்னையில் அதிகபட்சமாக 109 டிகிரி வெயில் பதிவானது. வேலூரில் 111 டிகிரி வரை வெயில் சுட்டெரித்தது. தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் பெரும்பாலான நாள்களில் 100 டிகிரிக்கும் குறையாமல் வெயில் இருந்தது.
கடும் வெயில் பதிவானதுடன் பெரும்பாலான மாவட்டங்களில் அனல் காற்றும் வீசியது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் அக்னி நட்சத்திரம் நேற்றுடன் முடிவடைந்து விட்டதால், அடுத்த இரு நாள்களுக்குள் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த ஏப்ரல் 1ம் திகதி முதல் மே 28 வரை சுட்டெரித்த வெயிலுக்கு இந்தியாவில் 543 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newindianews thanks

No comments:

Post a Comment