மே 07, 2013

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற கால அவகாசம் வேண்டுமென்றும், மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுவதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில், தமிழக அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ரஞ்சித் குமார், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற இன்னும் கால அவகாசம் வேண்டுமென்றும், மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு அருகே வணிக வளாகங்கள் இருப்பதால் அவற்றை அப்புறப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இந்தப் பிரச்னை குறித்து தமிழக அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கும் இடைக்காலத் தடை விதித்தது.
puthiyathalaimurai.tv thanks
No comments:
Post a Comment