அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday 30 May 2013

கச்சத்தீவு அருகே இலங்கை போர்க்கப்பல்கள்

First Published : 30 May 2013
கச்சத்தீவு அருகே இலங்கைப் போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று திரும்பிய நாட்டுப் படகு மீனவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த 45 நாட்களாக இருந்த மீன்பிடித் தடைக்காலம் நேற்று மே.29ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், ராமேஸ்வரத்தைத் தவிர்த்த  மற்ற பகுதி மீனவர்கள் இன்றே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

ஆனால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் வரும் சனிக்கிழமைதான் மீன்பிடிக்கச் செல்கின்றனர்.
இந்த நிலையில், இன்று மீன்பிடிக்க நாட்டுப் படகில் கடலுக்குச் சென்ற தங்கச்சி மடம் மீனவர்கள் சிலர் கரை திரும்பிய பின்னர் கூறுகையில், இலங்கை ராணுவம் கச்சத்தீவு அருகே 4 போர்க் கப்பகளை நிறுத்தியுள்ளது. மேலும், 5 சிறிய ரோந்துக் கப்பல்களும் நிறுத்தப்பட்டுள்ளன. கச்சத்தீவு பகுதியைச் சுற்றி மிதவை பலூன்கள் அதிகம் வைக்கப்பட்டுள்ளன.
பொதுவாக விசைப்படகு மீனவர்கள் இரட்டை மடி வலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவர் என்பதால் அதிகம் கண்காணிப்பார்கள், அவர்களை இலங்கை ராணுவத்தினர் அடித்து விரட்டுவார்கள். ஆனால், நாட்டுப் படகு மீன்வர்களை பெரிதும் தடை செய்வதில்லை. ஆனால், இந்த முறை நாட்டுப் படகு மீனவர்களையும் இனிமேல் இங்கே மீன் பிடிக்க வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினார்கள் என்றனர்.
இந்தத் தகவல் ராமேஸ்வரம் பகுதி மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 45 நாட்கள் தடைக்காலம் முடிந்து கடலுக்குச் செல்லும் இந்த நேரத்தில், கச்சத்தீவு பகுதியில் இலங்கை ராணுவம் போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ள செயல் பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாக மீனவர்கள் கூறியுள்ளனர்.

dinamani thanks

No comments:

Post a Comment