
May 9,
2013 08:37 am
தமிழகத்தில் குட்கா, பான்மசாலா போன்ற புகையிலைப் பொருட்களை தயாரிக்கவும் விற்கவும் தடைவிதிக்கப்படும் என
முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்தார்.
தனது
முந்தைய ஆட்சிக்காலத்திலேயே மத்திய அரசின் உணவு
கலப்படத் தடைச் சட்டம் 1954-ன்
கீழ், மெல்லும் வகை புகையிலைப் பொருட்களை தடை
செய்ததாகவும்,
ஆனால் உச்ச நீதிமன்றம் அச் சட்டத்தில், அவ்வாறு
தடை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளதாக கூறி, 2.8.2004-அன்று அறிவிக்கையை ரத்து செய்தது
என நினைவுகூர்ந்தார் ஜெயலலிதா.
தற்பொழுது, உணவு
கலப்படத் தடைச் சட்டத்திற்கு பதிலாக உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் என்ற புதிய சட்டத்தை 2006-ல்
மத்திய அரசு இயற்றி உள்ளது. இந்தச்
சட்டம் மற்றும் அதன் விதிமுறைகள் 5.8.2011 முதல்
நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தன.
தமிழக
அரசும் இந்தச் சட்டத்தை செயல்படுத்த இதற்கென `தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து
நிர்வாகம்’ என்ற
தனித் துறையை ஏற்படுத்தியுள்ளது.
உணவு
பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் விதிமுறைகளின் கீழ் எந்த ஒரு உணவிலும் சுகாதாரத்தைப்
பாதிக்கும் பொருள் இருக்கக் கூடாது என்றும் புகையிலை, அதாவது
நிக்கோட்டின் போன்றவற்றை உணவுப் பொருளில் சேர்க்கக் கூடாது என்றும் விதிமுறை
உள்ளது.
உச்ச
நீதிமன்றத்தின் முன்பு உள்ள ஒரு வழக்கு விசாரணையின் போது குட்கா
மற்றும் பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலைப் பொருட்களை தடை செய்வதை பற்றி மாநில அரசுகளால் என்ன
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம்
கோரியுள்ளது.
இந்நிலையில் புகையிலையால் ஏற்படும் பல்வேறு
வகையான புற்று நோய்களைத் தடுக்கும் வண்ணம், குட்கா, பான்
மசாலா போன்ற சுவைக்கும் புகையிலைப் பொருட்களைத் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விநியோகம் செய்யவும், விற்கவும் தடை விதிக்க தனது அரசு முடிவு
செய்துள்ளது எனக்கூறினார்.
/thamilan. thanks
No comments:
Post a Comment