அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday 27 May 2013

பா.ம.க. அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரி தேசிய மனித உரிமை ஆணையத்தில் திருமாவளவன் புகார்

பா.ம.க. அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரி தேசிய மனித உரிமை ஆணையத்தில் திருமாவளவன் புகார்
சென்னை, மே 28- 

விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவன் டெல்லி சென்று தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் கே.ஜி.பாலகிருஷ்ணனை சந்தித்து பா.ம.க.வுக்கு எதிராக மனு அளித்தார். மேலும் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத் தலைவர் பி.எல்.புனியாவையும் நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். இது குறித்து திருமாவளவன் கூறியதாவது:- 

தமிழ்நாட்டில் அண்மை காலமாக தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான கலவர வன்முறை சம்பவங்களுக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட அக்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருக்கிறது. எனவே பா.ம.க. அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆணைய தலைவர் பாலகிருஷ்ணனிடம் மனுவில் கோரி உள்ளோம். 

தருமபுரியில் தாழ்த்தப்பட்டோர் வசித்த பகுதிகளில் பா.ம.க.வினர் வன்முறையில் ஈடுபட்டது, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வசித்து வந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் மீது பா.ம.க.வினர் தாக்குதல் நடத்தியது ஆகியவற்றை மனுவில் விளக்கியுள்ளேன். மக்கள் தொலைக்காட்சியில் பல்வேறு சமுதாயத்தினரிடையே பிரிவினையை தூண்டும் கருத்துக்களை அந்த கட்சி தலைவர்கள் பேசி வருகிறார்கள். 

எனவே, அந்த தொலைக்காட்சி மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையத்திடம் கேட்டுக் கொண்டேன். இது தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையர் பி.எல்.புனியாவிடமும் மனு அளித்துள்ளேன். 

"தர்மபுரி'' மரக்காணம் கலவர சம்பவங்களில் கைது செய்யப்பட்ட பா.ம.க.வினர் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய தலைவர்களிடம் கோரி உள்ளேன். இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதி, பிரதமர், மத்திய உள்துறை மந்திரி மற்றும் இந்திய பத்திரிக்கை கவுன்சிலிடமும் புகார் அளிக்க உள்ளேன். 

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

.maalaimalar thanks

No comments:

Post a Comment