
07 May 2013, 01:37
GMT
தமிழக அரசு அதிரடி முடிவு ஒன்றை எடுக்க ஆலோசிக்கப்படுகிறது. இதுவரை ஏற்பட்டுள்ள சேதத்துக்கு பா.ம.க. கட்சியினரே பொறுப்பு, அவர்களே இழப்பீடு வழங்க வேண்டும் என்ற சட்டரீதியான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்கலாம் என்று தெரிகிறது.
நேற்றைய நிலவரப்படி, 555 பேருந்துகள் வரை, தாக்குதலில் சேதமடைந்து உள்ளன. 13 அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளன.
‘பசுமைத் தாயகம்’ எனும் அமைப்பை நடத்தி வரும், பா.ம.க.வின் தலைவர்கள் கைது செய்யப்பட்டதால், சாலையில் பசுமையை அளித்த, 160க்கும் மேற்பட்ட புளிய மரங்கள், அடியோடு வெட்டி சாய்க்கப்பட்டு உள்ளன. இவற்றில் 45 மரங்கள் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளன.
பா.ம.க. தலைமை வெளியிட்ட அறிக்கையில், “அறவழியில் போராடுங்கள்” என்று கூறப்பட்டு இருந்தாலும், அக்கட்சியினர் கேட்பதாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
முறை, தமிழகத்தில் முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, இது போன்ற சம்பவங்களில் ஏற்படும் பொதுச் சொத்து சேதங்களுக்கான இழப்பீட்டை, சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பெறும் சட்டத்தை கொண்டு வந்தார். அதன் பின் அந்த சட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படாமல் இருந்தது.
தற்போது, மீண்டும் இந்த சட்டத்திற்கு உயிர் கொடுக்க அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது. இச்சட்டத்தின் அடிப்படையில், இழப்பீட்டை ஈடு செய்வதற்கான முயற்சிகளை வருவாய்த் துறையுடன் இணைந்து காவல் துறை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
முயற்சி செய்யலாம், ஆனால், பலன் கிட்டுமா என்று சொல்ல முடியாது!
:viruvirupu. thanks
No comments:
Post a Comment