அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 1 June 2013

162 பள்ளி வாகனங்களுக்கு தகுதி சான்று மறுப்பு:போக்குவரத்துத் துறை அதிரடி!


பாதுகாப்பு குறைபாடு இருந்ததால், 162 பள்ளி வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் வழங்குவதற்கு, போக்குவரத்துத் துறை அதிரடியாக மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 19 ஆயிரம் பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதுத் தவிர வேன்கள், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், பகுதி நேரமாக மாணவர்களை அழைத்து சென்று விடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. வரும் 10 திகதி  திறக்க உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுத் தொடர்பாக போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது, "தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளி வாகனங்களின் தரம், பாதுகாப்பு, தகுதி சான்று உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்திட மொத்தம் 50 சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 3 பேர் இருப்பார்கள். இவர்களை கொண்டு தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக இதுவரை  மொத்தம் 538 பள்ளி வாகனங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.அதில் 376 வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் சரியாக இருந்ததால், தகுதி சான்று அளிக்கப்பட்டுள்ளது. 162 வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடு இருந்துள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.இதனால் இந்த வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் தரவில்லை.

இவர்களுக்கு ஒரு வார கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குள் குறைபாடுகளை சரிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட வாரியாக பள்ளி வாகனங்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது." என்று கூறியுள்ளனர்.

4tamilmedia THANKS

No comments:

Post a Comment