அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday 28 June 2013

திருவாரூர் அருகே குளத்தில் கவிழ்ந்த பேருந்து: 30 மாணவர்கள் உள்பட 70 பேர் காயம்

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் களப்பாலிருந்து, திருத்துறைப்பூண்டிக்கு செல்லும் அரசுப்பேருந்து ஒன்று ஆத்தூர் என்ற இடத்தில்
, குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 மாணவர்கள் உட்பட 70 பேர் படுகாயமடைந்துள்ளனர். களப்பாலில் இருந்து திருத்துறைப் பூண்டிக்கு அரசு பேருந்து ஒன்று இன்று காலை புறப்பட்டது. அதில் மாணவர்கள் உள்பட 70-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பேருந்து திருவாரூர் அருகே சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பேருந்து அருகிலிருந்த குளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 30 மாணவர்கள் உள்பட 70 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும்,விரைந்து வந்த மக்கள் பேருந்தில் சிக்கி கொண்டிருந்தவர்களை மீட்டு அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நிகழ்ந்த சம்பவம் அறிந்தவுடன் மாவட்ட ஆட்சியரும், காவல்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக திருவாரூர் அரசுப் பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பஸ் தண்ணீர் இருந்த குளத்தில் விழுந்ததால் ஒரு மாணவர் குளத்தில் மூழ்கிவிட்டதாக கூறப்படுகிறது. அவரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர் அதிகமான பயணிகள் பேருந்தினுள் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி சென்றதே விபத்துக்கு காரணம் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் களப்பாலி பகுதியில் அதிக மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருவதாகவும் அதற்கு போதுமான பேருந்துகள் இயக்கப்படுவதில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

tamil.oneindia thanks

No comments:

Post a Comment