அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday 30 June 2013

உத்தரகாண்டில் கனமழை பெய்யும் என்று முன்பே எச்சரிக்கை விடுத்தோம்: வானில ஆய்வு மையம்


உத்தரகாண்ட்டில் வானிலை எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் பேரழிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

உத்தர்கண்ட் மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக பெய்த கனமழை, வெள்ளப்பெருக்கு,நிலச்சரிவு ஆகியவற்றால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவிலும், வெள்ளத்திலும் சிக்கி பல ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். உடைமைகளை இழந்துள்ளனர். பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் அங்கு கன மழை பெய்யும் என்று முன்பே எச்சரிக்கை விடுத்தோம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் ஜூன் 14 மற்றும் 15ம் தேதி கனமழை பெய்யும் என்றும் நிலச்சரிவு ஏற்படும் என்றும் மீண்டும் எச்சரிக்கை விடுத்தோம். மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பவேண்டும் என்று  மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தோம் மற்றும் 4 நாட்களுக்கு யாத்திரை செல்ல தடை விதிக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஆனந்த் குமார் ஷர்மா தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாநில தலைமை செயலாளர் கூறியபோது, வானிலை அறிக்கைகள் வழக்கமாக மழை பெய்யும், பலத்த மழை பெய்யும் என்று கூறுவது வழக்கமான அறிவிப்புதான். இந்த ஆண்டு கடுமையான நிலை என்றோ,தீவிரமான நிலை  என்றோ குறிப்பிட்டு சொல்லவில்லை எனக் கூறினார்.

dinamani thanks

No comments:

Post a Comment