இரண்டு ஜேர்மனிகளும் கடந்த 1990ம் ஆண்டில் இணைந்த பின்னர் எடுக்கப்பட்ட மக்கட் தொகை கணக்கெடுப்பில் ஒன்றரை கோடி சரிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் புள்ளியியல் துறையான Destatis நடத்திய ஆய்வில் இன்றைய மக்கள்தொகை 80.2 மில்லியன் மட்டுமே என்பது தெரியவந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகக் குறைந்த பிறப்பு விகிதம் கொண்ட நாடாக ஜேர்மனி இருப்பதால் மக்கள் தொகை குறைந்து கொண்டே போகின்றது.
ஜேர்மானியர்(92.3%) 74 மில்லியனும், அயல் நாட்டினர்(7.7%)6.2 மில்லியனும், புலம்பெயர்ந்தோர்(19%) பதினைந்து மில்லியனும் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களில் 40 மில்லியன் பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு இருந்து வருகின்றது. மற்றவர்கள் வேலை வாய்ப்பின்றி அரசின் உதவித்தொகையில் காலம் கழித்து வருகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து ஜேர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் கூறுகையில், எதிர்வரும் 2030ம் ஆண்டில் வேலைபார்க்கும் வயதினரின் எண்ணிக்கை ஆறு மில்லியன் குறைந்துவிடும் என்பதால் தொழில்திறன் மிக்க புலம்பெயர்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment