அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday 26 June 2013

மாநிலங்களவைத் தேர்தல்: இன்று வாக்குப் பதிவு

தமிழகத்தில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலங்களவைத் தேர்தலில் வியாழக்கிழமை (ஜூன் 27) வாக்குப் பதிவு நடைபெறுகிறது. காலை 9 மணிக்குத் தொடங்கும் வாக்கெடுப்பு மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. தமிழகத்தின் 234 எம்.எல்.ஏ.க்களும் அளிக்கும் வாக்குகள் வியாழக்கிழமை (ஜூன் 27) மாலையே எண்ணப்பட்டு முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்பட உள்ளன. 6 இடங்களுக்கு ஏழு பேர் போட்டியிடுவதால் வாக்கெடுப்பு அவசியமாகியுள்ளது.

அதிமுக சார்பில் கே.ஆர்.அர்ஜுனன், ஆர்.லட்சுமணன், வா.மைத்ரேயன், டி.ரத்னவேல் ஆகியோரும், அதிமுக ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜாவும் போட்டியிடுகின்றனர். போதிய எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதால், ஐந்து பேரின் வெற்றியும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆறாவது இடத்துக்கு திமுக சார்பில் கனிமொழியும், தேமுதிக சார்பில் ஏ.ஆர்.இளங்கோவனும் போட்டியிடுகின்றனர்.
அகர வரிசைப்படி பெயர்கள்: மாநிலங்களவைத் தேர்தல் வாக்குச்சீட்டு அகரவரிசைப்படி தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கே.ஆர்.அர்ஜுனன்,
ஆர்.லட்சுமணன், ஏ.ஆர்.இளங்கோவன், கனிமொழி, வா.மைத்ரேயன், டி.ரத்னவேல், டி.ராஜா என்ற வரிசையில் வாக்குச்சீட்டுகளில் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. எந்த வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமோ அந்த வேட்பாளருக்கு எதிரே 1 என்ற எண்ணை ஊதா நிற மையால் மட்டுமே குறிப்பிட வேண்டும். வாக்குச் சீட்டை அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் முகவரிடம் காட்ட வேண்டும் என்பன போன்ற விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது.
திமுக வேட்பாளர் கனிமொழிக்கு அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ.க்களான 23 பேரின் ஆதரவுடன், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் தலா 2 எம்.எல்.ஏ.க்கள் (மொத்தம் 4 பேர்), காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், கனிமொழிக்கு 32 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. இதனால், தேமுதிக வேட்பாளர் இளங்கோவனைவிட கனிமொழிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள்: மாநிலங்களவைத் தேர்தலில் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தில் உள்ள சட்டப் பேரவைக் குழுக் கூட்ட அறை வாக்குச்சாவடி மையமாக மாற்றப்பட்டுள்ளது. வாக்குச் சாவடி மையத்தை தயார் செய்யும் பணிகள் புதன்கிழமை தீவிரமாக நடைபெற்றன. ஒவ்வொரு வேட்பாளருக்கும் தனித்தனி வாக்கு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எம்.எல்.ஏ.க்கள் தாங்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறார்களோ அந்த வேட்பாளரின் பெயரைக் கொண்ட வாக்கு அறைக்குச் சென்று தங்களது வாக்கினைச் செலுத்த வேண்டும்.
தேர்தலை மேற்பார்வையிட கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார், தேர்தல் அதிகாரி ஏ.எம்.பி.ஜமாலுதீன், துணைத் தேர்தல் அதிகாரி பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு தனித்தனியாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தேர்தலை கண்காணித்து நடத்தவுள்ளனர்.
சட்டப் பேரவை மண்டபத்தை ஒட்டியே, மாநிலங்களவைத் தேர்தல் வாக்குச்சாவடி அறை உள்ளது. ஒரே நேரத்தில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வாக்களிக்க நேர்ந்தால் அவர்கள் அமர்வதற்கு வசதியாக, வாக்குச்சாவடி அறையைச் சுற்றி இருக்கைகள் போடப்பட்டுள்ளதோடு, பேரவை மண்டபமும் திறக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் அங்கு அமர வசதி செய்யப்பட்டுள்ளது.
குழுக்களாக வாக்களிக்க முடிவு: காலை 9 மணிக்கு வாக்கெடுப்பு தொடங்குகிறது. ஒவ்வொரு வேட்பாளருக்கும் 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. எனவே, ஒவ்வொரு கட்சியைச் சேர்ந்த 34 எம்.எல்.ஏ.க்களும் ஒரு குழுவாகச் செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு, அதிமுகவைச் சேர்ந்த 151 எம்.எல்.ஏ.க்களில் ஒவ்வொரு 34 எம்.எல்.ஏ.க்களும் ஒவ்வொரு குழுவாகப் பிரிந்து தங்களது கட்சியைச் சேர்ந்த நான்கு வேட்பாளர்களுக்கு வாக்கினைச் செலுத்த உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவில் மீதமுள்ள எம்.எல்.ஏ.க்கள், இடதுசாரிக் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் டி.ராஜாவை ஆதரிக்க உள்ளனர். இதனால், எம்.எல்.ஏ.க்கள் தனித்தனி குழுக்களாக வந்து வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிற்பகலுக்குள் 234 எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்தாலும்கூட, வாக்கெடுப்பு நேரமான மாலை 4 மணி வரை வாக்கெடுப்பு நடைபெறும்.
இன்றே வாக்கு எண்ணிக்கை
மாநிலங்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வியாழக்கிழமை மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது. வாக்குகள் எண்ணப்பட்டு சில மணி நேரங்களுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விருப்ப உரிமை அடிப்படையில் எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்திருந்தால் அதுதொடர்பான கணக்கீடுகளுக்கு சற்று நேரம் பிடிக்கும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இரவு ஏழு அல்லது எட்டு மணிக்குள் வாக்கு எண்ணிக்கை தொடர்பான முழு விவரங்கள் தெரியவரும்.
அதிமுக அணி கூட்டுக் கூட்டம்
அதிமுக, இடதுசாரிக் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்கள், கட்சியின் தேர்தல் முகவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
வாக்குப்பதிவின்போது மிகுந்த கவனமுடன் வாக்களிக்க வேண்டும் என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. மேலும், எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து செய்முறையாகக் காட்டப்பட்டது.
தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்...
தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஏழு பேரும் அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்தக் கூட்டம் நிறைவடைந்த பிறகு, தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஏழு பேரும் தனியாக ஆலோசனை நடத்தியுள்ளனர். அவர்கள் வாக்கெடுப்பை புறக்கணிக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஏழு பேர் மாநிலங்களவைத் தேர்தல் வாக்கெடுப்பை புறக்கணிக்கும் பட்சத்தில், வெற்றிக்கான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 32 ஆகக் குறையும். இது திமுக வேட்பாளர் கனிமொழியை வெற்றி பெறச் செய்வதற்கு எளிதாக வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.

news dinamani. thanks

No comments:

Post a Comment